இந்தியாவில் மனித வளங்கள் கொள்கைகளை ஒருவர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

மனித வளம் தற்போதைய நிறுவனங்களின் முதுகெலும்பாக இருக்கிறது. மனித வள துறை இல்லாமல் நிறுவனங்கள் கட்டமைக்க முடியாது என்றளவிற்கு இதன் பங்கு மற்றும் செயல்பாடு அதிக முக்கியத்துவம் அடைகிறது. நிறுவன முதலாளிகள் இந்த மனித வள கொள்கையை‌ பற்றி அறிந்திடாமல் வளர்ச்சியை பரப்பிட முயற்சிப்பது இயலாத காரியம். அதனால் நிறுவன முதலாளி முதல் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட அனைவரும் இதன் கொள்கைகள் இந்தியாவில் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

மனித வளம் :

மனித வளம் ( Human Resource ) நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் தரத்தினை உயர்த்துவதில் அதிக பங்காற்றுகிறார்கள்.

மனிதன் வளமாக கருதுவது ஏன்?
மனிதன் வளமாக குறிப்பிடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மனிதனால் மட்டுமே இயற்கை வளத்தினை பல நோக்கங்களுக்காக பயன்படும் பொருளினை தயாரிக்கவும் மற்றும் உருவாக்கவும் முடியும்.
நாட்டின் வளர்ச்சி அதில் உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு தான் மதிப்பிடப் படுகிறது. அப்படி பட்ட உற்பத்தி திறனில் அதிக பங்கு அளிப்பதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் மேலோங்க மனித வளம் காரணமாக அமைகிறது.
நாட்டில் உள்ள அனைத்து வளங்களை உபயோகப்படுத்தும் ஆற்றலும் மனித வளத்தினால் மட்டுமே சாத்தியம்.
கல்வி, சுகாதாரம் மற்றும் பயிற்சி போன்றவற்றின் மூலம் மனித மூலதனம் முதலீட்டு வருவாயை கொடுக்கிறது. இவை எப்படி என்றால் கல்வியறிவு உடையவர்கள் கல்வி அல்லாதவர்களை விட அதிக வருமானத்தை ஈட்ட முடியும். அதே போல, ஆரோக்கியமான ஒருத்தர் ஆரோக்கியமற்றவரை விட அதிக உற்பத்தியினை கொடுக்க முடியும். இவை அனைத்திலும் ‌மனித மூலதனம் என்பது இன்றியமையாததாக இருப்பதால் மனித வளம் அனைத்திற்கும் மேலாக உயர்ந்து இருக்கிறது.

பேராசிரியர் மியரின் கூற்றுப்படி, மனித மூலதன உருவாக்கம் என்பது “நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு முக்கியமான திறன்கள், கல்வி மற்றும் அனுபவம் உள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பெற்று அதிகரிக்கும் செயல்முறை ஆகும்”.

மனித வளக் கொள்கைகள் :
இந்தியாவில் மனித வள கொள்கைகள் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டு அமைந்துள்ளது. இவை பணிச்சூழலில் எடுக்கும் முடிவுகளுக்கு பக்க பலமாக இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் தனது பணியாளர்களுக்கான வழிமுறைகளை வகுப்பது உண்டு. ஆனால் அவை அனைத்திலும் மனித வள வழிகாட்டுதல் முக்கிய பங்கு வகிக்கிறது.

முக்கிய நோக்கம் :
மனித வள கொள்கையின் ‌முக்கிய நோக்கம் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை சரியாக அளிப்பது, திறமையுள்ள பணியாளர்களுக்கு தேவையான சலுகைகள் வழங்குவது, நிறுவன வளர்ச்சிக்காக அவ்வப்போது பணியாளர்களை ஊக்குவித்து பயிற்சி அளிப்பது, ஊழியர்களை அவர்கள் வேலையில் தக்க வைத்து மற்றும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினையை தீர்ப்பது, வேலை செய்வோரை அவ்வப்போது மதிப்பீடு செய்து கண்காணிப்பது போன்ற பல வேலைகள் மனித வள கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு ஊழியர்களுக்கும், முதலாளிக்கும் இடையேயான உறவை சமநிலை ஏற்படுத்துவது முக்கிய கடமையாக இருக்கிறது. இவை அனைத்தும் மனித வள கொள்கை வலியுறுத்துகிறது.

மனித வளக் கொள்கையில் பயன்படுத்தும் உத்திகள் என்ன?
கொள்கைகள் இயற்றப்படுவதற்கு முன்பு அவை அனைத்தும் அனைவரின் கவனத்திற்கு உட்படுகிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அமைக்கப்படும் கொள்கைகள் காகிதத்தில் எழுதபட்டிருக்க வேண்டும். இவை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனமானாலும் சரி கொள்கைகள் சரிவர செயல்பட அவை நிறுவனத்தில் எழுதப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதை கண்டு தாங்கள் மறவாமல் சரியாக பதிவு செய்து இருக்கிறோமா என்று கண்டு அறிந்து கொள்ள உதவும். இதன் மூலம் அவர்கள் இருக்கும் association ல் நம்பகத்தன்மையுடனும், ஒழுக்கத்துடனும் இணைந்து இருப்பதை உறுதிப்படுத்தும். இந்த செயல்முறை உத்தி நிறுவனத்தின் செயல்திறனை மேலும் அதிகரிக்கும்.

இந்தியாவில் மனிதவள கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் பட்டியல்:

 • இழப்பீட்டுக் கொள்கை

நிறுவனத்திற்கு நிறுவனம் இழப்பீட்டு கொள்கையை நியமிக்கின்றன. இவை சரியாக கணக்கிடப்பட்டு வகுக்கப்படுகிறது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு கூறானது மறைமுகமானதாக இல்லாமல் வெளிப்படையானதாக இருக்கிறது. ஆகவே இவற்றில் கூறப்படும் அம்சங்களை பற்றி முழுவதும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஊழியர்களுக்கு வழங்குகிறது. மேலும், இந்த இழப்பீட்டு கொள்கைக்கு என்று ஒரு சில வரைமுறைகள் உண்டு. அதில், ஊழியர்கள் தங்கள் நடத்தை மற்றும் செயல்முறையில் தகுதியுடையவராக இருக்க வேண்டும். வேலையில் எவ்வாறு இவர் சிறந்து விளங்குகிறார் என்பதை பொறுத்தும் இவை வரையறுக்கப்படுகிறது.

 • வருகை கொள்கை

வருகை கொள்கை வரையறுக்காவிட்டால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் காரணமின்றி விடுப்பு எடுக்கவும், நேரத்திற்கு தன் பணியை செய்யாமல் போகவும் வாய்ப்பு உண்டு. நிறுவனத்தில் அனுதினமும் தவறாமல் யார் வருகிறார்கள் மற்றும் யார் வரவில்லை என்ற பதிவு எடுக்கப்படுகிறது. இந்த பதிவு ஒழுங்காக எடுக்காவிட்டால் வேலை செய்யாதவர்களுக்கு நிர்வாகம் வீணாக ஊதியம் வழங்க நேரிடும். இதனால் பெரு நஷ்டம் நிறுவனத்திற்கே! விடுப்பு எடுக்காமல் வருபவர்கள் மற்றும் தாமதமாக வராதவர்களுக்கு சன்மானம் அறிவிக்கும் பட்சத்தில் இவற்றில் ஒழுக்கத்தினை ஊழியர்கள் கடைப்பிடிப்பார்கள். பின்பு எதாவது சந்தர்ப்ப நிலை தாமதமாக வர‌ நேரிட்டால், அதனை ஊழியர்கள் தங்கள் மேலாளர் இடம் முன் கூட்டி தெரிவிக்க வேண்டும். நேரம் என்பது நிறுவனத்திற்கு வரும் இலாபம். அதனால் அவர்கள் தாமதமாக வரும் ஊழியர் செய்ய வேண்டிய வேலையை பிறருக்கு அதை கொடுத்து செய்ய மேலாளர்க்கு அவகாசம் கிடைக்கும். நிறுவனம் பொருத்தவரை உற்பத்தி திறன் பாதிக்கப்பட‌ கூடாது. அதனால் வருகை கொள்கை மேற்கண்ட பல வரைமுறைகளை வகுத்து உள்ளது.

 • பணிநீக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு கொள்கை

பணிநீக்கம் என்பது பணியாளருக்கும் மற்றும் நிறுவனத்திற்கும் கடினமான செயல்முறை ஆகும். நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பணியாளரை பணி நீக்கம் செய்ய நேரிட்டால் மேலாளரை கொண்டு மனித வளம் காரணத்தை விளக்கி கூற வேண்டும். எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி பணியாளரை வேலையில் இருந்து நீக்க கூடாது. பணி நீக்கம் செய்ய ஒரு காரணத்தை கையில் எடுக்கலாம். அவை அச்சுறுத்தல், தவறான நடத்தை, துன்புறுத்தல், நிறுவனத்திற்கு அவப் பெயர் கொண்டு வரும் செயல்கள் போன்றவை நிறுவனத்தின் கொள்கையை மீறும் செயல் என்ற அடிப்படையில் மனித வளம் நடவடிக்கை எடுக்கலாம்.

பணிநீக்கம் செய்வதற்கான பணியாளரின் நடவடிக்கைகள் மற்றும் பதில்களை மனித வளங்கள் ஆவணப்படுத்துகின்றன. உதாரணமாக, பணியாளர் முதலாளிக்கு அச்சுறுத்தல்களைச் செய்தால், மனிதவளமானது நடத்தை ஆவணப்படுத்துகிறது மற்றும் பிற தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது.
மனித வளத்தின் முக்கிய கடமைகளில் ஒன்று தான் ஆட்சேர்ப்பு. சரியான திறமை, அணுகுமுறை, ஆற்றல், அனுபவம் போன்றவை இருக்குமானால் ஆட்சேர்ப்பு கொள்கையின் படி பணி நியமனம் மனித வளம் செய்கிறது.

 • தனியுரிமைக் கொள்கை

பணியாளரின் தகவல்களில் தனியுரிமை மனித வளத்தால் பாதுகாக்கப்படுகிறது. நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பணியாளரின் தனியுரிமை அவர்களுக்கே உரியது. அதை யாரும் திருடவோ, அழிக்கவோ முடியாது. இவை அனைத்தும் மனித வளம் மேற்பார்வை செயல்படும்.

 • பணியாளர் தகவல் கொள்கை

பணியாளரின் தகவல் ரகசியம் பாதுகாக்கபடுகிறது. அவர்கள் தங்கும் இடம் முதல் அவர்கள் பதிவு செய்த தொலைக்காட்சி எண் வரை அனைத்தும் பாதுகாக்கப்படும்.

 • நடத்தை விதிமுறை கொள்கை

பணியாளர் ஆட்சேர்ப்பின் போதே நடத்தை விதிமுறைகள் எடுத்து கூறப்படும். இதில் மீறுபவர்கள் பணிநீக்கம் செய்யபடுவர் என்ற அறிக்கை இந்த கொள்கையிலே இடம் பெறுகிறது.

 • விடுப்பு மற்றும் விடுமுறைக் கொள்கை

பணியாளர்கள் எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்க அனுமதி உண்டு என்றும் எந்தெந்த நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் இந்த கொள்கையானது விளக்குகிறது. குறிப்பிட்ட நாட்களை தீர்த்து விடுப்பு எடுத்தால்‌ சம்பளம் பிடித்தம் மேற்கொள்ளப்படும் என்பதையும் இந்த கொள்கையானது விளக்குகிறது.

 • பணியிட பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் கொள்கை

பணியிடத்தில் இனம், நிறம், மொழி, ஜாதி, பாலினம் போன்ற எந்த அடிப்படையிலும் பாகுபாடு பார்க்க கூடாது. ஏனெனில் இவை எந்த ஒன்றும் பணியில் சேர உதவவில்லை. பணியிடத்தில் ஒவ்வொரு வரும் திறமையின் அடிப்படையிலே வேலையில் சேர்க்கப் படுகிறார்கள் மற்றும் வேலை பகிர்ந்து அளிக்கப்படுகிறது.  பணியில் வரும் ஒவ்வொரு வரும் நட்பு பாராட்டி ஒருவருக்கு ஒருவர் உதவி வேண்டுமே தவிர எந்தவொரு துன்புறுத்தலும்‌ ஏற்படுத்த கூடாது. குறிப்பாக அதிக வேலை பளுவும் துன்புறுத்தலே!

 • சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கை

நிர்வாகம் முக்கியமான ஒன்றில் கவனத்தில் கொள்ள வேண்டியது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு. நிறுவனத்தில் பணிபுரியும் பல ஆயிரம் பேர் அனுதினமும் வந்தும் சென்றும்‌ இருப்பார்கள். அப்படி பட்ட இடத்தில் பாதுகாப்பு என்பது அவசியம். அதனால் நிறுவனத்திற்கு ஏற்ற பாதுகாவலர்களை நியமிப்பது கட்டாயமாகும். அது மட்டுமல்லாமல் சுகாதாரத்தை உறுதி செய்ய ஆட்களை நியமிக்க வேண்டும். எந்தவொரு நோய் தொற்றும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

 • நன்மைகள் மற்றும் தகுதி கொள்கை

பணியாளரின் பதவி உயர்வு இந்த இரண்டு கொள்கையான நன்மைகள் மற்றும் தகுதி அடிப்படையிலும் பரிந்துரைக்கப்படும்.

 • ஒழுக்கக் கொள்கை

பணியாளர்கள் திறமை வாய்ந்தவராக மட்டும் இருந்தால் போதாது. அவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக தங்கள் பணியை செய்ய கூடிய நபராக இருப்பது மிக மிக அவசியம். ஒழுக்க நடவடிக்கையில் குறைகள் இருந்தால், நிர்வாகம் பணியிட நீக்கம் செய்ய அதிகாரம் உண்டு.

 • பணியிட வன்முறைக் கொள்கை

மனித வளக் கொள்கையில்‌‌ அதிகமாக எதிர்பார்ப்பது ஒழுக்கம். நிறுவனத்திற்கும் சக ஊழியர் இடையேயும் பிரச்சினை உண்டாக்கி வன்முறையில் ஈடுபட்டால் குறிப்பிட்ட நபர் தண்டிக்கப்படுவதோடு, பணிநீக்கமும் செய்யப்படுவர்.

 • ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள்

நிறுவனத்திற்கு பணிபுரிய வருபவர்கள் வளாகத்தில் உள்ளே ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் கொண்டு வருவதை‌யும், பயன்படுத்துவதையும் எதிர்க்கிறது. மீறுபவர்கள் அதற்குரிய நடவடிக்கையை நிர்வாகம் எடுக்கும் என்பதை‌ இந்த கொள்கை எச்சரிக்கிறது.

 • நிறுவன உபகரணக் கொள்கையின் பயன்பாடு

பணிபுரியும் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் கணினி மற்றும் பிற சாதனங்களை வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. மேலும், தங்கள் desk இல் இருக்கும் பொருட்களை பாதுகாப்பது அவரவர் பொறுப்பு. தவறி ஏதேனும் நிறுவன உபகரணங்களை சேதப்படுத்தினால் அதற்குரிய அபராதம் கட்டப்பட வேண்டும். நிறுவனத்தின் உபகரணங்களை சரியான நோக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும் குறிப்பாக தன் சொந்த வேலைக்கு நிறுவன உபகரணங்களை எடுக்க கூடாது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இன்றி எந்த நிர்வாகமும் அமைக்கப்படாது. மனித வள கொள்கையும் அப்படியே! மனித வள கொள்கை பல விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையை கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியதே!