உங்கள் தற்குறிப்பை மதீப்பீடு செய்யக்கூடிய 5 வலைத்தளங்கள்

 நேர்காணலை சந்திக்க செல்லும் ஒவ்வொருவரும் தற்குறிப்பு (RESUME) இல்லாமல் செல்வது இல்லை. நேர்காணலின் போது நாம் சொல்ல இருக்கும் அனைத்து பதில்களும் நமக்கு முன்பே நம்மை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிவிடும். அந்தளவிற்கு தற்குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  வேலையின் மீது நாட்டமும் மற்றும் அதன் தேவையை உணர்ந்தவர்கள் எவராக இருந்தாலும் தனது உடையிலும், பேச்சிலும் ஒரு ஒழுங்கை வைத்திருப்பார்கள். அதேபோல தற்குறிப்பிலும் ஒரு ஒழுங்கை வேலை கொடுப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவை எதற்காக மற்றும் அதனால் என்ன பயன் இருக்கிறது என்றும் மேலும் தன்னுடைய தற்குறிப்பை எப்படி மதிப்பீடு செய்வது, அதற்காக யாரை அணுகுவது போன்ற பல கேள்விகளுக்கான பதிலினை இக்கட்டுரையில் காண்போம்.

தற்குறிப்பு

தற்குறிப்பு :

தற்குறிப்பு (Resume) என்பது பெற்ற கல்வி, பணி அனுபவம், நற்சான்றிதழ்கள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் எழுதப்பட்ட தொகுப்பாகும்.

லியோனார்டோ டா வின்சி 1482 இல் முதல் தற்குறிப்பு என்னும் தொழில்முறை விண்ணப்பத்தை எழுதினார். அதன் பிறகு, பிறருடைய தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் பொழுது போக்குகள் போன்ற தகவல்களை சேகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது.

வேலைக்காக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தனது கனவு வேலையில் இடம் பெறவும், நிறுவனத்தில் இருந்து தனக்கு முதலில் அழைப்பு வர வேண்டும் எனவும் விரும்புவார்கள். ஒரு வேலைக்காக பல விண்ணப்பங்கள் நாள்தோறும் அனுப்பப்படுகிறது. அதில் பெரும்பாலானவை முழு விவரங்கள் படிக்கப்படாமலே நிராகரிக்கப்படுகிறது. மனிதவள மேம்பாட்டு துறையில் உள்ளவர்கள் பல தற்குறிப்புகளை பெற்று வருகிறார்கள். அதில் சரியான ‌தகுதிக்குரிய நபர்களை தேர்ந்தெடுக்க கூடிய ‌நேரம் மிகவும் குறைவானதாகவே உள்ளது. அதனால் தற்குறிப்பில் இருக்கும் பணி அனுபவம் மற்றும் சான்றிதழ் விவரங்கள் மட்டும் உற்றுநோக்கப்படுகிறது.

தற்குறிப்பு என்றவுடன் அநேகர் தங்கள் விவரங்களை சொந்தமாக எழுதுவதில்லை. அதற்கு பிறர் உதவியை நாடுகிறார்கள். இதனால் பல பிழைகள் காணப்படுவதோடு அதில் எந்தவொரு தனித்துவமான தகவல்களும் சேர்க்கப்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

தற்குறிப்பு

தற்குறிப்பு ஏன் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்?

 • பணியை தக்கவைத்துக் கொள்ள
 • பணிக்கான அழைப்பினை தாமதமின்றி பெற
 • பிழை திருத்தம் செய்ய
 • நேர்காணலை நம்பிக்கையோடு அணுக
 • பணி நியமனத்தை நோக்கி செல்ல
 • தரமான தகவல்களை பதிவிட

தற்குறிப்பை மதிப்பீடு செய்யும் 5 வலைத்தளங்கள் :

இலட்சக்கணக்கான இளைஞர்கள் அனுதினமும் ஏதாவது வலைத்தளத்தில் வேலைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்கிறார்கள். அதில் எத்தனை விண்ணப்பங்கள் வேலைக்கான அழைப்பை பெற்றுள்ளது என்பது கேள்விக்குறியே! நிறுவனங்களும் பெறும் விண்ணப்பங்களை ஒரே பார்வையில் நிராகரித்து விடுகிறார்கள். அதற்கு காரணம் போலியான தகவல்களை கொண்ட விண்ணப்பங்களே! அதனால் பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அறியாத பலர் வாய்ப்பினை தவறவிடுகிறார்கள். கல்வியும் தகுதியும் வாய்ந்த நபர்கள் வீணாக தங்கள் கனவினை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுடைய தொழில்முறை விண்ணப்பங்களை இலவசமாக மதிப்பீடு செய்து அதனைக் கொண்டு தங்கள் தற்குறிப்பை மேம்படுத்திக் கொள்ள ஒரு சில வலைத்தளங்கள் உதவி வருகிறது.‌

 1. Rez score

 2. Skillroads

 3. Job scan

 4. Enhancv

 5. Resume worded

Rez score :

Rez score வலைத்தளம் புதிய தொழில் நுட்ப கருவியின் உதவியுடன் பல இலட்சக்கணக்கான பயனாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. Resume ஐ இவர்கள் தளத்தில் பதிவேற்றியவுடன் அதனை‌ மதிப்பீடு செய்து அதற்கான மதிப்பினை வழங்குகிறது. மேலும், அந்த மதிப்பீட்டுக்கு ஏற்ற வேலையையும் அறிந்திட முடியும்.

Skill roads :

தற்குறிப்பு பதிவேற்றம் செய்வதனால் என்ன பயனை பெறுகிறார்கள் என்பதை இவர்கள் தளத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை,

 • பிழையில்லாமல் கொண்டு செல்ல முடியும்

 • போதுமான தகுதியினை தனது தற்குறிப்பு அடைந்துள்ளது என்பதை நிர்ணயிக்க முடியும்.

 • உடனடியாக பின்னூட்டத்தை (feedback) பெற முடியும்.

 • பொதுவாக ஏற்படும் பிழைகளைத் தவிர்க்க முடியும்

 • Old format மற்றும் style ஐ மாற்றியமைத்து கவனத்தை பெற்று தரும்.

விண்ணப்பங்கள் ஒன்றே முதலில் கவனத்தை ஈர்ப்பவை. அதனால் அவை முறையாக வடிவமைப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பெரும்பாலான நபர்கள் தொடர்ச்சியாக ஒரே வார்த்தையை பயன்படுத்துவதோடு, ஆங்கிலத்தில் பயன்படுத்தும் புதிய வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல் இருப்பதும் குறைவான தரத்தை பெற காரணமாக அமைகிறது. இதனை தவிர்த்து புதிய யுக்தியை கையாண்டால் வேலைக்கு ஆட்கள் சேர்க்கும் நபரின் கவனத்தைப் பெற்றிட முடியும்.

தற்குறிப்பில் எழுதப்படும் தலைப்பு எதிர்பார்க்கப்படும் வேலைக்கு பொருத்தமாக அமைக்கப்பட வேண்டும். எழுதப்படும் தலைப்புகள் தெளிவாக, பிழையின்றி இருக்க வேண்டும். மதிப்பீடு செய்து அதற்கான Result சிவப்பு கட்டத்திற்குள் தற்குறிப்பு இடம் பெற்றால் அவை உடனே பரிந்துரைக்கப்படும் முறையை கையாண்டு சரிசெய்ய முயல வேண்டும்.

 1. தற்குறிப்பு மிகுதியில் அளவை சரிப்பார்க்கப்பட வேண்டும்

 2. வடிவமைப்பு மற்றும் தொகுப்பில் கவனம் செலுத்த வேண்டும்

 3. இலக்கண பிழை ஏதேனும் உண்டா என பார்க்க வேண்டும்

 4. சரியான தற்குறிப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கப்பட வேண்டும்

 5. குறிக்கோள் மற்றும் உந்துதலை குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்

 6. சொற்றொடர்கள் சரியாக அமையப்பெற்றுள்ளதா என சோதித்து பார்க்க வேண்டும்

Jobscan :

90 சதவீதத்திற்கும் மேலாக பெரு நிறுவனங்கள் Applicant Tracking System – ஐப் பயன்படுத்துகின்றன. Jobscan இல் scan செய்யப்படும் தற்குறிப்பு மற்றும் தொழில்துறை விண்ணப்பங்களை சோதனை செய்து பின் எந்தெந்த பகுதிகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும், எவ்விதமான மேம்படுத்த பட வேண்டும் எனவும் வெளியிடப்படும். Jobscan இல் கண்காணிக்கப்படும் பகுதிகள்.

 • Skills and keywords
 • Job Title Match
 • Education Match
 • Section Headings
 • Date and Formatting
 • Word Count

மேற்கண்ட வரிசையின் அடிப்படையில் சரிசெய்து அதற்குரிய மதிப்பெண்களை வழங்கும். Education Match எடுத்துக் கொண்டால் அதில் கல்வி விவரத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். உதாரணமாக : M.Tech in Computer science என்று எழுத வேண்டும். அதன்பின் Word Count முக்கியமாக அனைத்து தற்குறிப்பிலும் சோதிக்கப்படுகிறது. ஒரு விவரத்தை சுருக்கமாக, தெளிவாக எழுதினாலே போதுமானது. அதை தவிர நீண்ட விவரத்தை எழுதும் பட்சத்தில் தேர்வு செய்யும் பட்டியலில் இருந்து விலக்கப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. நிர்வாக நிலை, அரசாங்கம் அல்லது ஆஸ்திரேலியா சார்ந்த வேலைகளுக்கு வேலையை விண்ணப்பிக்காத பட்சத்தில் 1000 வார்த்தைக்கு மிகாமல் இருப்பது போதுமானதாக கருதப்படுகிறது. Jobscan இல் கொடுக்கப்பட்ட அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பங்களை LinkedIn மற்றும் Mintly வேலை வாய்ப்பு தளங்களில் பதிவிடும் போது வேலைக்கான அழைப்பை பெறுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

Enhancv :

எழுத்து பிழை ஏதேனும் இருந்தால் அதை நீக்கம் செய்கிறது. வேலை கிடைப்பதற்கான அனைத்து தகுதியும் இருந்தும் தற்குறிப்பு தயாரிப்பதில் அநேகர் தங்கள் வாய்ப்பினை இழக்கிறார்கள். அதனால், நேர்காணலுக்கு செல்லும்போது முழு நம்பிக்கையுடன் செல்ல தற்குறிப்பை சரிபார்ப்பது அவசியமாகும். வேலைக் கொடுப்பவர் மற்றும் நேர்காணல் நடத்துனருக்கும் தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுப்பதில் உதவியாக இருக்கிறது.

Resume worded :

பிரபலமான வேலை வாய்ப்பு தளங்கள் மூலம் வேலைக்கான அழைப்பை பெறவும், பெரு நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கவும் முழுமையாக தொழில்முறை விண்ணப்பத்தை தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது. Resume worded தளத்தில் உடனடியாக feedback பெற முடியும். அதுவே அடுத்த கட்டத்திற்கு செல்ல உற்சாகத்தை தருகிறது.

தற்குறிப்பு

தற்குறிப்பை மதிப்பீடு செய்யும் 5 முக்கிய வலைதளங்களை பற்றி அறிந்திருப்பீர்கள். அதனுடன் தற்குறிப்பு எந்தளவுக்கு ஒரு வேலையை அடைய உந்துதலாக இருக்கிறது பற்றியும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

வேலைக்காக என்றாலும் சரி, வாழ்க்கைக்காக ஆனாலும் சரி சாதாரணமாக நினைக்கும் காரியத்தில் தான் முக்கிய படிக்கல் காணப்படுகிறது. அதனால், எதனையும் அலட்சியம் செய்யாமல் ஒவ்வொன்றிக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அனைத்திலும் முன்னேற்றத்தினை காண்பார்கள். 

Language