கனடாவில் கனவு வேலையினை தேடுவதற்கான ஐந்து முக்கியக் காரணங்கள்

கனடா

வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பு குறைவாக இருந்தாலும் அல்லது எதிர்பார்க்கப்படும் வேலை கிடைக்காமல் இருந்தாலும் வளர்ந்த நாடுகளை நோக்கி எதிர்கால திட்டம் அமையும். அதிலும் திறமையான நபர்களுக்கு வாய்ப்புகளை அளிக்கும் கனடா போன்ற நாடுகளை நோக்கி இன்று அநேகர் வேலை நிமித்தம் இடம் பெயர்கிறார்கள். வேலைக்காக ஒரு நாட்டை விட்டு பிற நாட்டிற்கு இடம் பெயருவது என்பது சாதாரண காரியமல்ல. அதற்காக முன் கூட்டியே பல காரியங்கள் திட்டமிடப்பட வேண்டியிருக்கிறது. அதில் ஒரு சில நாட்டை பொருத்து எந்த செயல்முறை கடினமானதாக இருக்கிறது மற்றும் எந்த செயல்முறை எந்த நாட்டில் எளிதாக இருக்கிறது போன்ற அனைத்தையும் மனதில் கொண்டு தான்‌ தீர்மானிக்கப்படுகிறது.

கனடா

ஏன் கனடா?

பெரும்பாலான வளரும் நாடுகளில் ‌உள்ள மக்களுக்கு வளர்ந்த நாடுகளை பார்க்க வேண்டும், வசிக்க வேண்டும் என்ற கனவு ஏற்படுகிறது. இப்படி பல கனவுகள் இருந்தாலும் எங்கே பிற நாட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அங்கே நோக்கி பயணித்தால் காலமும், பணமும் வீணாகாது. அதனையும் தாண்டி வேலை வாய்ப்புகள் பரவி கிடக்கும் நாடாகவும் இருக்கிறது கனடா.

கனடாவின் சிறப்பு :

கனடா

  • உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் சாசனத்தில் பொதிந்துள்ள அடிப்படை மனித உரிமைகளைக் கொண்ட சமூகமாக உள்ளது.
  • சிறந்த வணிக வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் வலுவான வங்கி அமைப்புடன் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளது.
  • நாஃப்டா ஒப்பந்தங்களின் கீழ் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுடன் சுதந்திர வர்த்தகம் செய்கிறது.
  • Canadian University  சிறந்த சர்வதேச நற்பெயரைக் கொண்ட கல்வி முறையை பெற்றுள்ளது
  • சிறந்த சுகாதார அமைப்பு மற்றும் சமூக உதவித் திட்டங்களின் தாராள நெட்வொர்க் அமைப்பைக் கொண்டுள்ளது
  • சிறந்த வணிக வாய்ப்புகளைக் கொண்ட உலகின் மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

கனடாவில் வேலை வாய்ப்புகளைத் தேட ஐந்து காரணங்கள் :

கனடா

1. பல துறையில் பல வாய்ப்புகள் :

கனடா திறமையான நிபுணர்களுக்கு ஏராளமான வாய்ப்பினை வழங்குகிறது. அத்துடன் தொழில் விருப்ப தேர்வையும் அளிக்கிறது. கனடாவில் சேவை துறையை தொடர்ந்து உற்பத்தி மற்றும் இயற்கை வளங்கள் துறையில் அதிக வேலை வாய்ப்பினை வழங்க ஆவலுடன் உள்ளது. இது போன்ற துறைகளில் வாய்ப்பினை‌ அளிப்பதன் மூலம் வேலையின்மை விகிதம் முன்பு ஒருபோதும் குறைந்திடாத அளவிற்கு 5.7% வரை குறைந்துள்ளது. கனடாவில் தொழிலாளர் சந்தை 1976 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை வேகமாக வளர்ந்து வருவதாலும் அநேகரின் தேர்வு கனடாவாகவே உள்ளது. மேலும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிக்கையில் வெளிவந்த செய்தி என்னவெனில், மொத்தம் மற்றும் சில்லறை  துறையின் மூலம் 31,000 க்கும் மேற்பட்ட புதிய வேலைகள் உருவாகியுள்ளது. கட்டுமானம் தொழில் கனடாவில் வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது. இது பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும்.

கதவுகள் திறந்திருந்தால் தான் அதன் வழியே செல்ல வேண்டிய ஆர்வம் ஏற்படும். அதுபோல தான் வாய்ப்பு என்னும் கதவு திறக்கும் போது அதன் வழியே செல்ல வேண்டிய தூண்டுதல் தானாகவே ஏற்பட்டு வருகிறது. இதுவே கனடா போன்ற நாடுகளுக்கு செல்ல முக்கியக் காரணமாகும்.

2. குடிபெயருப்பவர்களை வரவேற்கிறது :

கனடா ஒரு பிரபலமான பன்முக கலாச்சார நாடு என அனைவராலும் அறியப்படக்கூடிய நாடாகும். இந்நாடு பொருளாதார வளர்ச்சியை மேன்மேலும் அதிகரிக்க திறமையான புதிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான அங்கீகாரம் அளிப்பதில் எந்தவொரு பாரபட்சமும் பார்க்காமல் செயல்படுகிறது. பிற நாடுகளின் கலாச்சாரத்தை மதிப்பதோடு தனித்தன்மையையும் வரவேற்கிறது.

3. கனவு நாடு கனவு வேலை :

ஒவ்வொருவருக்கும் கனவு நாடு, கனவு இல்லம், கனவு வேலை என சிறுவயது முதற்கொண்டே ஆசை இருக்கும். ஆனால், ஒரு சில சூழ்நிலையால் நினைக்கும் காரியத்தில் ஈடுபட முடியாமல் போகிறது. இப்படியிருக்க வாய்ப்புகள் வரும் போது மேற்க்கண்ட மூன்றையும் பெற்றிட வேண்டும் என்பதில் யாரும் பின்வாங்குவதில்லை. கனடாவின் இயற்கை அழகு, மலைகள், ஏரிகள், மரங்கள் மற்றும் பரந்த திறந்தவெளி  காண்பவர்களை மெய்மறக்கச் செய்கிறது. இது போன்ற இயற்கை காட்சிகள் ஒருங்கிணைந்து கிடைக்கும் நாட்டிற்கு செல்ல வேலை மட்டும் காரணமாக இருக்காது. ஒரு வேலை செய்யும் போது சுற்றி இருக்கும் சூழல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். கடும் வாகன சத்தம், புகை, மக்கள் தொகை மற்றும் கூட்ட நெரிசல் வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வத்தை குறைப்பதோடு தனித்தன்மையையும் வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் போகிறது. இது போன்ற பிரச்சனையை தவிர்க்கவே கனடா போன்ற நாடுகளுக்கு குடி பெயருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

4. ஆங்கில மொழி தெரிந்தால் போதும் :

கனடாவில் அதிகமாக பேசக்கூடிய மொழி ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு. இந்தியாவில் அலுவலக மொழி ஆங்கிலமாக இருப்பதால் அந்த மொழி தெரிந்தவர்கள் கனடாவிற்கு குடிபெயர அடிப்படைத் தகுதியில் வெற்றி பெறுகிறார்கள். அதற்கு அடுத்து பரிந்துரைக்கப்படும் மொழித் தேர்ச்சி சான்றிதழை பெறுவது வேலை தேடுபவருக்கு முக்கியப் படியாகும்.

மொழி புலமை அறிவதற்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை அமைப்பு வழங்கும் சான்றிதழை வேலை தேடுவோர்கள் பெற்றிருக்க வேண்டும்.

கனடா

5. குடி பெயருவது சுலபம் :

திறமையும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பங்கள் சுலபமாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அந்நாட்டின் வழிகோள்கள் உள்ளன. குறுகிய காலத்திற்குள் அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. இவை அனைத்தும் எளிதாக செய்திட உதவும் நிறுவனங்கள் இருப்பதால் கனவு வேலை தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

கனடாவை செல்ல யாரை அணுகுவது?

சரியான ஆலோசனையும், வழிகாட்டுதலும் இல்லாமல் இலக்கை அடைவது தவறான பாதையைக் கொண்டு சேர்த்துவிடும். கனடாவில் பல வாய்ப்புகள் இருந்தாலும் அந்த இடத்தில் எந்தவொரு இடையூறும் இன்றி சென்றடைவது என்பது முக்கிய சவாலாக இருக்கிறது.  அதனால் இதுபோன்ற இடையூறுகளை தவிர்க்க மின்ட்லி நிறுவனத்தை நாடுவது நல்லது. இவர்கள் கனடா செல்ல விரும்பும் அனைவருக்கும் ஆரம்பம் முதல் இறுதி வரை வழிகாட்டி வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு செல்வதில் ஏற்படும் சந்தேகங்களையும் இவர்கள் சேவையான 24/7 Customer Support  தொடர்பு கொண்டு அறிந்திடலாம்.

கனடா செல்ல தன்னை எவ்வாறு தயார் செய்து கொள்வது ?

வேலை வழங்கும் நிறுவனங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு தற்குறிப்பு மற்றும் ஆவணங்கள் அடங்கிய விண்ணப்பங்களை முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்க வேண்டும். தற்குறிப்பில்  உங்கள் திறமைகள், அனுபவம் மற்றும் தகுதி ஆகியவை திறம்பட முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

Express Entry Pool System இல் பதிவு செய்ய வேண்டும். இவை, கனடாவின் ஆன்லைன் புள்ளி அடிப்படையிலான குடியேற்ற முறை எக்ஸ்பிரஸ் நுழைவு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. எக்ஸ்பிரஸ் உள்ளீட்டின் கீழ் உங்கள் சுயவிவரத்தை உருவாக்க வேண்டும். பற்றாக்குறை ஆக்கிரமிப்புகளுக்கு உங்கள் சுயவிவரம் பொருத்தமானதாகக் கண்டறியப்பட்டால், கனேடிய முதலாளிகள் அல்லது மாகாணங்கள் எவராலும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். எனவே, கனடாவில் விசாவிற்கு உங்கள் ஐ.டி.ஏ-க்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.

உங்கள் நிரந்தர வசிப்பிட அட்டையைப் (Permanent Resident Card) பெற, எக்ஸ்பிரஸ் நுழைவு வரைபடங்களில் ஏதேனும் உங்கள் சுயவிவரம் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடாவில் பி.ஆர் விசாவிற்கு விண்ணப்பிக்க ITA பெறுவீர்கள். நீங்கள் ஒரு ஐ.டி.ஏவைப் பெற்றவுடன், P.R  (Permanent Resident) விசாவிற்கான விண்ணப்பத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களையும் ( Document) அதில் இணைக்க வேண்டும்.

கனடாவில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க,  நீங்கள் ஒரு PR கார்டைப் பெற்றவுடன் கனடாவில் உள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது !

கனடா

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை தொடருங்கள்.