கல்வி ஆலோசகர் வேலை விவரங்கள், நேர்காணல் கேள்விகள் மற்றும் குறிப்புகள்

கல்வி ஆலோசகர் என்பவர் மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோருக்கு கல்வி ரீதியான திட்டங்கள் மற்றும் சந்தேகங்கள் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டுபவர்கள். பள்ளி கல்வியை முடித்தவர்கள் அடுத்து எந்த கல்லூரியில் விண்ணப்பிப்பது, எந்த இளங்கலை பட்டம் தேர்ந்தெடுப்பது போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குவார்கள்.

கல்வி ஆலோசகர்கள் எதிர்கால மாணவர்களின் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முக்கிய முடிவுகளில் துணை நிற்கிறார்கள். ஆலோசனை என்பது அனைவராலும் வழங்கிட முடியாது. அதற்கு என்று குறிப்பிட்ட தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.

கல்வி ஆலோசகர் கல்வி மற்றும் ஆலோசனை‌ பின்னணி துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆலோசனை வழங்க கூடிய அறிவும், அனுபவமும் பெற்றிருப்பது அவசியமாகும். பணியில் சேர குறைந்த பட்சம் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வி சம்பந்தமான அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கல்வி ஆலோசகர்கள் பெற்றோர் அல்லது பள்ளிகளால் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் சுயாதீன கல்வி ஆலோசகராக செயல்படுவர். மேலும், இவர்களை பணியமர்த்தும் போது எதிர்பார்க்கப்படும் துறையில் வல்லுநர்களாக இருக்கிறார்களா என ஆராயப்படுகிறார்கள். ஏனெனில், வல்லுநர்களாக இருப்பவர்களால் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும் மற்றும் சரியாக வழிகாட்டவும் முடியும். எதிர்காலம் என்று வரும் போது சரியான நேரத்தில் முடிவு எடுக்க கூடிய தருணம் கல்வியே. சரியான கல்வி தேர்ந்தெடுத்த பிறகு சரியான தொழில் வாய்ப்பும் பெரியளவில் குழப்பமின்றி பெற முடியும். முன்பெல்லாம் போதிய வழிகாட்டுதலும், ஆலோசனையும் இல்லாமையால் அமெரிக்கா அதிக செலவில் படித்தும், வேலையில்லா பட்டதாரிகளாக வளம் வருகிறார்கள். தற்போது வேலையில்லா பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் கேள்வி குறியாகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு தனிமனித வருமானமும் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க இயலாது.

கல்வியில் ஆரம்பகாலத்திலேயே தொலைத்தூர நோக்கில் அதற்குரிய ஆலோசனையை வல்லுநர்களிடம் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு எழுந்துள்ளது. இவை வேலையில்லா திண்டாட்டம் குறையும் நோக்கில் செயல்படுகிறது. அதனால் ஒரு சமுதாயத்தையே மாற்றக்கூடிய வலிமை மற்றும் பொறுப்பு கல்வி ஆலோசகரிடம் அதிகம் உள்ளது. இப்படிப்பட்டவர்களை இன்று அநேக நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அதே நேரத்தில் கல்வி ஆலோசகர்களிடத்தில் குறிப்பிட்ட தகுதியும் எதிர்பார்க்கப்படுவது கட்டாயமாக இருக்கிறது.

நேர்காணலின் போது கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்

  • இந்த கல்வி ஆலோசகர் வேலையை ஏன் விரும்புகிறீர்கள்?

ஏன் இந்த வேலையை தேர்வு செய்தீர்கள்?  எதனால் இந்த வேலையில் சேர முனைப்பு காட்டுகிறீர்கள்? பொதுவாக இது போன்ற கேள்விகள் அனைத்து துறைகளிலும் கேட்கப்படுகிறது. அதற்கு காரணம் எந்த அளவிற்கு வேலையில் நாட்டம் உள்ளது என தெரிந்து கொள்ளவே கேட்கப்படுகிறது. வேலையில் ஈடுபாடு இல்லாமல், வெறும் வருமானம் பெற வேண்டும் ‌என்ற நோக்கத்தில் வருபவர்கள் வேலையில் உண்மையாகவோ மற்றும் நீடித்தோ இருக்க மாட்டார்கள். அதனால் நேர்காணல் வருபவர்கள் சொல்லப்படும் பதிலில் உள்ள உண்மைத் தன்மையை அறிய மாறுபட்ட கேள்விகள் கேட்கப்படுகிறது. அது போல் கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாக சுருக்கமாக மற்றும் தெளிவாக பதிலளிக்க வேண்டும். உதாரணமாக-1, வாடிக்கையாளர் சேவை உங்களுக்கு பிடித்த வேலையாக இருந்தால், அதற்கு இவ்வாறு பதில் அளிக்கலாம். ஏன் எனக்கு வாடிக்கையாளர் சேவை பிடித்த வேலை என்றால் நான் பிற மனிதர்களிடம் தொடர்பு கொண்டு பேசுவதும், பிறருடைய பிரச்சினைக்கான தீர்வை அறிந்து உரையாடுவதும் எனக்கு பிடிக்கும்.

உதாரணமாக-2, ஏன் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புகிறீர்கள்? கல்வி மீது எப்போதும் ஆர்வம் அதிகம். அதனால், நீங்கள் செயலாற்றும் மகத்தான வேலையில் எனது பங்களிப்பை உங்கள் நிறுவனத்துடன் செலுத்த விரும்புகிறேன்.

  • கல்வி ஆலோசகர் பதவியில் நீங்கள் என்ன சவால்களை எதிர்பார்க்கிறீர்கள்?

நீங்கள் எதிர்பார்க்கப்படும் சவால்களைப் பற்றிய இந்த கேள்விக்கு பதிலளிக்க சிறந்த வழி, நீங்கள் வேலைக்கு பணியமர்த்தப்பட்டால் உங்கள் திறன்களையும் அனுபவத்தையும் எவ்வாறு திறம்பட பயன்படுத்துவீர்கள் என்பதை குறித்து விவாதியுங்கள். மேலும், சவால் உள்ள வேலையை நான் எப்போதும் வரவேற்கிறேன். அவை தான் என்னை உந்துகிறது. என்னிடம் உள்ள திறமையை சிறப்பாக கையாண்டு வேலையில் சந்திக்கும் சவாலினை  எதிர்க்கொள்ளுவேன்.

  • கல்வி ஆலோசகர் பதவிக்கு ஒரு பொதுவான வேலை வாரத்தை விவரி?

விண்ணப்பிக்கப்பட்ட வேலை குறித்த புரிதல் இருந்தால்தான் இக்கேள்விக்கு பதில் அளிக்க முடியும். வாரத்தில் என்னென்ன பணிகள் செய்து முடிக்க வேண்டும் என்றும் அவர்களின்‌ முக்கிய பணி என்னவாக இருக்கும் என்பதை விவரிக்க வேண்டும். ஒருவேளை முன் அனுபவம் ஏதேனும் அதே வேலையில் இருந்தால் அதை தற்போது விண்ணப்பித்த வேலையோடு தொடர்புபடுத்தி பதில் அளிக்கலாம். வேலை நேரத்தில் தனிப்பட்ட வேலைகள் குறித்து பேசக் கூடாது. உதாரணமாக, நான் காலையில் வந்தவுடனே எனக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் வேலை பட்டியல் என்ன என்றும் மற்றும் எனக்கு வேலை நிமித்தம் எதேனும் email மற்றும் voicemail வந்துள்ளதா எனப் பார்ப்பேன். அதன் பிறகு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணியை ஆரம்பிப்பேன்.

  • உங்கள் மிகப்பெரிய பலவீனம் என்ன?

நேர்காணல் வருபவர்களுக்கு இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவது என்ற தயக்கம் எப்பொழுதும் இருக்கும். ஆனால் இந்த கேள்வியை மறுக்க முடியாது என்பதால் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்  என்று நேர்காணல் செய்வோரை கவர ஒருசிலர் பொய்யான காரியங்கள் கூறுவதுண்டு. உதாரணமாக- நான் நீண்ட நேரம் உழைக்க கூடியவன் அதனால் என் வேலை வாழ்க்கையில் சமநிலை பேண முடியவில்லை மற்றும் பல காரியங்களை அடுக்கி கொண்டே போக முடியும். இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை ‌என்றால் அதை நேரடியாக சொல்லி விடலாம். ஒரு சில நிறுவனங்கள் அதை வரவேற்கின்றன. நாம் சொல்லும் பதிலில் தான் நமக்கு எந்த பிரிவு கிடைக்கும் என்பதே இருக்கிறது. அநேகர் இந்த கேள்விக்கு மாறான பதிலை கூறி வாய்பை இழந்து இருக்கிறார்கள்.

உங்களிடம் வேலையில் எதாவது பெலவீனம் இருந்தால் அதை எவ்வாறு மேற்கொள்வது என்பதை குறித்து அறிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொது குழுவில் பேச பழக்கமில்லாதவராக இருந்தால், பிற உடன் வேலையாட்களுடன் சிறு கூட்டங்களில் கலந்து பேச பழகுவது சிறந்த ஆரம்பமாக இருக்கும்.

  • நாங்கள் உங்களை ஏன் கல்வி ஆலோசகர் பதவியில் அமர்த்த வேண்டும்?

நேர்காணலின் போது இந்த தருணத்தை அழகாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாங்கள் உங்களை ஏன் கல்வி ஆலோசகர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கேள்வி உங்களிடத்தில் வரும் போது, உங்களிடம் இருக்கும் திறன்கள், அனுபவங்கள், கல்வி மற்றும் குணநலன்கள் ஆகியவை வேலைக்கு எவ்விதமாக உகந்ததாக இருக்கிறீர்கள் என்பதை எடுத்துக் கூறுங்கள். நீங்கள் நிறுவனத்தின் நோக்கங்களோடு எவ்வாறு ஒத்து போகிறீர்கள் என்பதை நேர்காணல் செய்வோரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை பற்றி சுருக்கமாக பகிர்ந்து வேலையை பெற்றுக் கொள்ள எப்பொழுதும் சிறந்த பதில்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அளிக்கும் பதில்கள் மூலம் நீங்கள் எந்தளவிற்கு உற்சாகமான, நம்பிக்கையுள்ள வேட்பாளராக இருப்பதை காட்ட முடியும்.

எங்கள் நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

நேர்காணலுக்கு செல்லும் போது முன் கூட்டியே நம்மை தயார் செய்து கொள்வோம். முக்கியமாக மடிப்பில்லாத ஆடையை உடுத்துவது, முடியை சரி செய்வது, ஏற்ற காலணியை அணிவது போன்றவை தற்போது யாரும் சொல்லாமலே மேலாளர் போல செல்ல பழகி விட்டது. ஆனால் இவை அனைத்திருக்கும் மேல் முக்கியமாக தயார் நிலையில் செல்வது என்பது உண்டு. நேர்காணலின் போது பெரும்பாலான கேள்விகள் உங்கள் திறமை, அனுபவம், கல்வி போன்ற பல இருக்கும். இவை எல்லாவற்றையும் தயார் செய்யாமலே பதிலளிக்க முடியும். ஆனால் பணியில் சேரும் நிறுவனத்தை பற்றி அநேகன் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. நேர்காணல் என்றவுடனே நிறுவனம் ‌எந்த விலாசத்தில் உள்ளது என்ற தகவலை பார்பவர்கள், நிறுவனம் குறித்து அலசி ஆராய்வதில்லை. முதலில் நிறுவனத்தை பற்றி தெரிந்து கொண்டாலே நேர்காணல் சுலபமாக அமையும் மற்றும் தடுமாற்றம் இன்றி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும்.

நிறுவனம் பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் இணைய முகவரி மற்றும் வலைப்பதிவில் சென்று விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை தங்கள் நிறுவன விவரங்களை LinkedIn போன்ற தளத்தில் கணக்கு வைத்துள்ளது. அதில் சென்று கூட விவரங்கள், குறிக்கோள் போன்றவை தெரிந்து கொள்ள முடியும். பிறகு Glassdoor போன்ற தளங்கள் மூலம் நிறுவன நிறை குறைகளை முன் பணியாற்றிய ஊழியர்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற பல வசதிகள் இணையதளங்கள் மூலமாக இருந்த இடத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். முன்பெல்லாம் நிறுவனம் பற்றி அறிந்து கொள்ள நேரில் சென்று விசாரித்தால் மட்டுமே முடியும். அதனால் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.

நேர்காணலின் போது நீங்கள் அறிந்த அனைத்து விவரங்களையும் சொல்லி விட கூடாது. நிறுவனத்தின் நோக்கம் என்ன சமீபத்தில் அடைந்த வெற்றி என்ன போன்ற இரண்டு மூன்று வரிகள் சொன்னாலே போதுமானது.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?

இல்லை என்ற பதில் மட்டும் சொல்லாமல் இருங்கள். உங்களிடம் கேட்க கேள்விகள் இல்லை என்றால் கூட, நேர்காணல் செய்தோர் கூறின பதிலை இன்னொரு முறை கேளுங்கள். ஏனெனில், இந்த கேள்வி கேட்கப்படுவதே‌ வேட்பாளர் எந்த அளவிற்கு அவர்கள் எதிர்பார்க்கும் வேலையில் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார்கள் என சோதிக்கவே கேட்கப்படுகிறது. கல்வி ஆலோசகராக இருக்கும் போது கல்வி திட்டங்கள், மாணவர்கள் குறித்த விவரங்கள் போன்ற ஏதேனும் இரண்டு கேள்விகள் கட்டாயம் கேட்டு அறிந்து கொள்வது நல்லது.

கல்வி ஆலோசகர் நேர்காணல் குறிப்புகள்

கல்வி ஆலோசகருக்கான இலவச நேர்காணல் நன்றி கடிதத்தை தயார்படுத்திக் கொள்ளலாம். அந்த கடிதம்  நேர்காணல் நோக்கங்களுடன் பொருந்த கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளா என்பதை கவனிக்க வேண்டும்.

1. கல்வி ஆலோசகருக்கு இது எந்த வகை நேர்காணல், எத்தனை நேர்காணல் செய்பவர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளனர் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

2. கல்வி ஆலோசகர், பயிற்சி வகுப்புகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் போன்றவற்றுக்கு நேர்காணல் செய்பவர்கள் எந்த தகுதியை எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கண்டறியவும்.

3. நேர்காணல் செய்பவர்களிடம் (கல்வி ஆலோசகர் தொடர்பானது) நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் பட்டியலைத் தயாரிக்கவும் (எடுத்துக்காட்டாக, அவர்களின் பயிற்சித் திட்டங்கள் மற்றும் அத்தகைய திட்டங்களுக்கு நீங்கள் எவ்வாறு விண்ணப்பிக்கிறீர்கள்).

4. 15-10 நிமிடங்கள் முன்னதாக வந்து சேருங்கள். அவசர நேரங்களில் அல்லது நெரிசலான தெருக்களில் செல்வதைத் தவிர்க்கவும். பல்கலைக்கழகத்தை சுற்றிப் பார்த்து, அங்குள்ள மற்ற வேட்பாளர்களுடன் பேசுங்கள்.

5. உங்கள் பதில்களைக் கவனியுங்கள். நேர்காணல் செய்பவர்கள் மறந்துவிட்டால் அல்லது மேலும் விவாதிக்க விரும்பினால் உங்களுடன் ஏதேனும் பதிலை உறுதிப்படுத்த விரும்பினால் இவை பின்னர் பயனுள்ளதாக இருக்கும்.

6. உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதை முன் கூட்டியே எழுதி வைத்து கொள்ளுங்கள். அதன் பின் நேர்காணல் செய்வோரிடம் கேட்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள். அதன் மூலம் சேரும் வேலையில் தெளிவு கிடைக்கும்.

கல்வி என்பது முடியாத பயணம். மேற்கொண்டு படிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் தனது திறமைக்கும், எதிர்கால சந்தை நிலவரத்திற்கும் ஏற்ப எந்த படிப்பை தொடருவது குறித்த கேள்விகள் அநேகம் உண்டு. இந்த கேள்விக்கான சரியான பதிலை வழங்க பள்ளி மற்றும் கல்லூரிகளும் கல்வி ஆலோசகர்களை நியமனம் செய்கின்றனர். அமெரிக்காவில் இவர்கள் போன்ற ஆலோசகர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றன. மேலும், அவர்களுக்கான ஊதியமும் அதிகமாகவே காணப்படுகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவு பிறருக்கு கொடுக்கும் போது அதிகரிக்குமே தவிர குறையாது. அதனால், கற்றல் மற்றும் கற்பித்தலில் ஆர்வம் உள்ள அனைவரும் கல்வி ஆலோசகராக வர முடியும். இந்த கட்டுரையில் கல்வி ஆலோசகர் வேலை விவரம், நேர்காணல் கேள்விகள், பதில்கள் மற்றும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. பொதுவாக நேர்காணல் கேள்விகள் ஒரே போல இருந்தாலும், நிறுவனம் மற்றும் வேலை பொருத்து எதிர்பார்க்கப்படும் பதில்கள் மாற்றம் ஏற்படுகிறது. எந்த வேலையாக இருந்தாலும் அதில் ஆர்வம் மற்றும் பற்று இருந்தால் எந்தவிதமான கேள்வியையும் எதிர்கொண்டு வேலையை உரிதாக்கி கொள்ள முடியும். கல்வி ஆலோசகர் பணி என்பது பிற பணிகள் காட்டிலும் வேறுபட்டதாக இருந்தாலும் அவை தன்னை விட பிறர் வாழ்க்கையும் அடங்கியுள்ளதால், இவ்வேலை‌ மாணவர்களுக்கு அளிக்கும் சேவை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சரியான வழிகாட்டுதலுக்காக எதிர்பார்பவர்களுக்கு சிறந்த பதிலாக தன்னை தயார்படுத்திக் கொள்ள ஒவ்வொரு கல்வி ஆலோசகர் முனைப்பாக இருக்க வேண்டும்.