சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய உதவும் ஐந்து ஆன்லைன் மதிப்பீட்டு தளங்கள்

Candiadte

Candidate Assessment Test – வேட்பாளர் மதிப்பீட்டு சோதனையின் அவசியத்தினை தற்போது நிறுவனங்கள் உணர்ந்து வருகின்றன. நிறுவன வளர்ச்சி இந்த ஒரு செயலின் அடிப்படையிலும் வளரும் என்பதை சொல்ல முடியும். வேலைக்காக ஆட்களை நியமிப்பதற்கு முன்பு பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் மற்றும் அதனால் நிறுவனத்திற்கு என்ன நன்மை என்றும், சோதனை கருவி வழங்கக்கூடிய ஐந்து தளங்கள் எவை போன்ற பல கேள்விக்கான பதில்களை இப்போது காண்போம்.

வேட்பாளர் என்பவர் தற்பொழுது வேலை தேடுபவரையும், இதற்கு முன்பு பணி அனுபவம் உடையவரையும்  கடந்தகால மற்றும் எதிர்கால அடிப்படையில் அறியப்படுகிறார்.

நிறுவனங்கள் ஏன் வேட்பாளர் மதிப்பீட்டு தளங்களை நாடுகின்றன?

வேட்பாளர் அனுபவ ஆராய்ச்சி அறிக்கையின்படி, 82 % நிறுவனங்கள் வேட்பாளர் மதிப்பீட்டு தளங்களை பயன்படுத்துகின்றன. இதன் மூலம் திறமை வாய்ந்த சரியான நபர்களை அடையாளம் காண முடிகிறது. நேர்காணல் மூலம் பரிசோதித்து பணியமர்த்துவதை விட அதற்கு முன்பே அவர்களை சோதனைக்கு உட்படுத்தி தேர்வு செய்வது நேர்மறையான சூழலை உருவாக்குகின்றன.

நேர்காணலின் போது பணியமர்த்துபவர் அன்றைய தினம் யார் சிறப்பாக பதில் அளித்தார்கள் என்ற அடிப்படையிலும் மற்றும் சிறப்பான தோற்றத்தின் அடிப்படையிலும் தவறான நபர்களை தேர்வு செய்து வருந்தக்கூடிய நிலைமை ஏற்படுகிறது. இந்நிலையில் வேலைக்கு சிறந்த நபர் யார் என்று பார்த்து தேர்வு செய்யும் முறை வெகு குறைவாகவே இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் பரிந்துரையின் பேரிலும் மற்றும் உரிமை கோரியும் வேலையை பெற முயற்சிக்கும் நபர்களிடம் இந்த பரிசோதனை விலக்களிக்கிறது. அதனால் பாரபட்சமின்றி தகுதியின் அடிப்படையில் பணியமர்த்தும் போது திறமை வாய்ந்த நபர்கள் வாய்ப்பை இழக்க நேரிடுவதில்லை. பணியமர்த்தும் முறை இவ்வாறாக தான் இருக்கும் என்று உணர்ந்து வேலைக்கு வரும் நபர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு வர முயலுவார்கள். இதனால் நிறுவனத்திற்கும், வேட்பாளருக்கும் ஏற்படும் கால விரயம் தவிர்க்கப்படுகிறது. பரிசோதனை முறை இந்த இரண்டு பேருக்கும் நன்மை அளிப்பதனால் நிறுவனங்கள் தங்கள் நலன் கருதியும், வேட்பாளர்கள் நலன் கருதியும் மதிப்பீட்டு சோதனை கருவி வழங்கும் தளங்களின் உதவியை நாடுகின்றன.

இன்றைய தொடக்க நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை நிறுவனத்திற்காக செலவிடும் தொகையை நன்கு யோசித்தே முதலீடு செய்கிறார்கள். இப்படி இருக்க சேமிப்பு என்பதுதான் முதல் குறிக்கோளாக இருக்கும் என்பதை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. தற்போது வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே செய்த செலவை பலவிதமாக குறைத்து வருகிறது. அதில் வேட்பாளர் மதிப்பீடு சோதனை கருவியும் அடங்கும். இவற்றை குறைந்த விலையில் வழங்கும் தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதை பயன்படுத்தும் நிறுவனங்களும் அதிகரித்து வருகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக சிறந்த வேட்பாளர் அனுபவத்திற்கு உத்திரவாதத்தினை இச்சோதனை கருவி அளிக்கிறது.

எவ்விதமான சோதனைகளை நிறுவனங்கள் எடுக்கின்றன?

  1. Achievement test

  2. Aptitude test

  3. Physical ability test

  4. Personality test

  5. Honesty test

  6. Lie detector test

  7. Drug test

  8. Medical test

நிறுவனம் மேற்கண்ட 8 விதமான பரிசோதனையும் கடந்து பல சோதனைகள் இருந்தாலும் அனைவராலும் அறியப்படும் test இவைகளே! ஒரு சில சோதனைகள் எல்லாம் பார்த்து இவ்விதமான சோதனையும் மேற்கொள்ளப்படுகிறதா என்று கேட்டால் ஆம் என்பதே பதில். இவை அனைத்தும் வேலைக்கு தகுந்தாற் போல கேட்கப்படும். பாதுகாப்பு மிகுந்த வேலைகளில் குற்றவியல் சோதனையும் சரிபார்க்கப்படும். குறிப்பிட்ட வேட்பாளர் இதற்கு முன்பு ஏதேனும் தவறு ஏதாவது செய்தாரா? அவரால் நிறுவனத்திற்கு ஏதேனும் ஆபத்து உண்டா? என்று பல கோணங்கள் அடிப்படையிலே ஒவ்வொரு சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சோதனையின் பிறகு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டியவை :

வேட்பாளரின் விண்ணப்பங்களை பெற்றவுடன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு உறுதிப்படுத்த வேண்டும். நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து எந்தவொரு பதிலையும் வேட்பாளர்கள் பெறவில்லை என்றால் அவர்கள் சோர்ந்து விடுவார்கள். அதனால், எத்தனை நாட்களுக்குள் அவர்களை தொடர்பு கொள்வீர்கள் என்பதையும் மின்னஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்துவது நிறுவனத்தின் கடமை. இல்லையெனில், நிறுவனத்தின் செயல்முறை பற்றி புகாரையும், மதிப்பாய்வும் அவர்களிடத்தில் இருந்து பெற நேரிடும். அதனால் இதுபோன்ற எதிர்மறை அணுகுமுறை தவிர்த்து அதற்கேற்றவாறு நிறுவனங்கள் அணுக வேண்டும்.

சிறந்த 5 வேட்பாளர் மதிப்பீட்டு தளங்கள் :

வேட்பாளர் மதிப்பீட்டு தளங்கள் உதவியுடன் நிறுவனத்திற்கு ஏற்ற திறமை மிக்க நபர்களை பணியமர்த்திட முடியும்.

1. eSkill

eSkill என்பது ஆன்லைன் திறன் மதிப்பீடு தளமாகும்.  இது நிறுவனங்களுக்கு துல்லியமாக சரியான சோதனைகளை வரிசைப்படுத்த உதவுகிறது. இவர்கள், 600 க்கும் மேற்பட்ட சோதனைகளை கொண்டுள்ளனர். அதில் தேவையானவற்றை தேர்வு செய்யலாம்.

2. Devskiller

Devskiller டெவலப்பர் ஸ்கிரீனிங் மற்றும் ஆன்லைன் நேர்காணல்களை ஒரே மேடையில் வழங்குகிறது. நிரலாக்க மொழிகள், கட்டமைப்புகள் மற்றும் நூலகங்களை சோதிக்க அவை ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. இவர்கள் வழிகாட்டுதலுடன் குறியீட்டு சோதனையை உருவாக்கிட முடியும்.

3.Interview Mocha

Interview Mocha மூலம், எங்கள் 1000+ திறன் சோதனைகள், திறனாய்வு சோதனைகள், நிறுவன-தயார் மதிப்பீட்டு தளம் மூலம் உங்கள் வேட்பாளரின் வேலை பொருத்தத்தை நீங்கள் சரிபார்க்க முடியும்.

4. The Hire Talent

Hire Talent – இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான திறமையை உடையவர்களை கண்டறிய உதவுவதுடன் ஆலோசனையும் வழங்குகிறார்கள். மேலும், நிறுவன வடிவமைப்பு, அடுத்தடுத்த திட்டமிடல் மற்றும் திறமை இடர் மேலாண்மை ஆகியவற்றில் ஆலோசனை சேவைகளை வழங்குகிறார்கள்.

5. Mercer Mettl

ஒரு ஆன்லைன் திறமை மதிப்பீட்டு தளமாகும். இது உங்கள் வேட்பாளர்களின் திறன்கள், ஆளுமை மற்றும் திறனை அளவிட உதவும். வெவ்வேறு சைக்கோமெட்ரிக், அறிவாற்றல் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளின் சோதனை நூலகத்திலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காக கட்டமைக்கப்பட்ட தனிப்பயன் சோதனையைப் பெறலாம்.

மின்ட்லி நிறுவனம் பிளாக்செயின் தொழில்நுட்ப உதவியுடன் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் ஊழியர்கள் முழு விவரங்களை அளிக்கிறது.