தமிழ்நாட்டில் உள்ள OYO Rooms இல் வேலை பெறுவது எப்படி

 

OYO Rooms

ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு முன்பு நிறுவனத்தை பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அப்பொழுது தான் தன்னுடைய திறமைக்கு ஏற்ற வேலையையும், நிறுவனத்தையும் சரியாக தேர்வு செய்ய முடியும் மற்றும் அதில் நிலைத்திருக்க முடியும்.

இந்தியாவில் பல்வேறு தொடக்க நிறுவனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் தங்கும் விடுதிகளுக்கான தொடக்க நிறுவனங்கள் சமீபத்தில் அதிக வளர்ச்சியடைந்துள்ளது; அப்படி முன்னேறி வரும் தங்கும் விடுதிகள் பல இருந்தாலும் வேலை வாய்ப்பை அளிக்கும் ஒரு நிறுவனம் பற்றி தான் இங்கு காண போகிறோம். அதில்,குறிப்பாக தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதிலும், அவரவர் விரும்பும் இடத்தில் வேலையை பெறவும் வாய்ப்பை கொடுத்து வரும் நிறுவனம்தான் OYO Rooms.

OYORooms

தற்பொழுது பிரபலமாகி வரும் தங்கும் விடுதிகளில் ஒன்று தான் OYO Rooms. Hospitality துறையில் பல நாடுகளில் தங்களுடைய சேவையை பரப்பி வரும் தனியார் நிறுவனமாகும். இவர்கள் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பித்த ஆறு ஆண்டிற்குள் 4 நாடுகளில் 800க்கும் மேற்பட்ட நகரங்களில்  விரிவுபடுத்தியுள்ளார்கள். 18,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் 45,000 க்கும் மேற்பட்ட விடுமுறை இல்லங்கள் அமைத்துள்ளார்கள். இந்த வெற்றிக்கு சொந்தகாரர் இதன் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால். இவர் OYO நிர்வாக அதிகாரியும் ஆவார். ஆசியாவின் முதல் நபராக இருந்து Thiel Fellowship விருதை வென்றுள்ளார்.

இவர் அறிமுகப்படுத்தியுள்ள OYOஅறைகள், இந்தியாவின் மிகப்பெரிய பிராண்ட் ஹோட்டல் நெட்வொர்க் ஆக உருவெடுத்துள்ளது. OYO அறைகள் தற்போது டெல்லி, குர்கான், மும்பை, பெங்களூர், ஹைதராபாத், கோவா, சென்னை, கொல்கத்தாவிலும் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்குகின்றன.

OYO தனது இடத்தை முக்கிய பெருநகரங்கள், பிராந்திய மையங்கள், சிறந்த ஓய்வு இடங்கள் மற்றும் புனித யாத்திரை நகரங்களை உள்ளடக்கியது.

OYO Rooms இன் எளிய தத்துவம்:

நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள், நீங்கள் செய்வதை நேசியுங்கள்! நீங்கள் OYO அலுவலகங்களுக்குள் செல்லும்போது உற்சாகமான உரையாடல்கள், மகிழ்ச்சியான முகங்கள், சுற்று-கடிகார ஆற்றல் ஆகியவற்றைக் காண முடியும். மிக முக்கியமாக நீங்கள் உண்மையான நட்புறவு மற்றும் சிறந்து விளங்குவதற்கான சூழலை உணர முடியும்.

Oyo Rooms இல் இன்டர்ன்ஷிப் பற்றிய விவரங்கள்:

ஒரு குறிப்பிட்ட வேலையில் சேர எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத வேளையில் intern ஆக நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சிகளைப் பெற்று அதன்பின் முழு நேர பணியில் சேருவது முதல் படியாக இருக்கும். ஒரு சிலர் பணி புரியும் காலங்களில் வருமானம் குறைவாக கிடைப்பதோடு பணி சுமை சற்று அதிகமாக இருப்பதால் intern ஆக சேர விரும்புவதில்லை.  ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்; அது என்னவெனில், சிறந்த வேலையில் திறமையாக செயலாற்ற வேண்டுமானால் பயிற்சியின் போது வருமானத்தை விட கிடைக்கும் அனுபவத்திற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். Intern ஆக சேருபவர்கள் பணி சூழலை முதலில் கற்று கொள்ள வேண்டும்.

OYO நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் அன்றாட பொறுப்புகளில் செயல்பட வேண்டும். அவற்றுள் பின்வருவன அடங்கும் :

1. ஹோட்டல் முன்பதிவுகளை சரிபார்த்தல்

2. சரியான செயல்பாடு மற்றும் தரங்களைப் பின்பற்றி தினசரி அடிப்படையில் பண்புகளை ஆய்வு செய்தல்

3. ஒரு சிறந்த வாடிக்கையாளரை உறுதிப்படுத்தவும், ஒரே நேரத்தில் அதிகரிக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை குறைத்து சீராக நடத்துதல்

4. சரியான ஹோட்டல்களின் தொகுப்பில் மட்டுமே இருப்பதை உறுதிசெய்தல்

5. சொந்தமாக ஹோட்டல் ஊழியர்களுக்கு பயிற்சியளித்தல்.

6. ஹோட்டல் ஊழியர்களுக்கு செயல்முறை மற்றும் மேம்பாட்டு முயற்சிகளைப் பற்றி பயிற்சி அளித்தல்

7. வாடிக்கையாளரை மகிழ்ச்சியாக நடத்துதல்

8. தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்துதல்

9. சிறப்பு வாடிக்கையாளர்களை அடையாளம் காணுதல்

ஒரு பயிற்சியை பெற வருபவர், சேரும் வேலையைப் பொறுத்து அதற்கேற்ற பொறுப்புகளை வழங்குவார்கள். மேற்கண்ட கடமைகள் அனைத்தும் பொதுவாக விடுதியில் பணிபுரிபவர்கள் பின்பற்றக் கூடியதாகும்.

நாங்கள் தெற்காசியாவின் மிகப்பெரிய ஹோட்டல் சங்கிலிக்கு ஒரு தொடக்கமாக இருந்துள்ளோம். – oyo rooms

OYO Rooms இல் வேலை பெறுவது எப்படி ?

OYO Rooms இந்தியாவில் பல நகரங்களில் செயல்படுவது போல தமிழ்நாட்டிலும் பல முக்கிய இடங்களில் தங்களுடைய கிளை நிறுவனத்தை அமைத்துள்ளார்கள். இந்நிறுவனம் சமீபகாலத்தில் தொடங்கப்பட்ட நிறுவனமாக இருப்பதால் இதில் பல துறைகளில் காலி பணியிடங்களும் இருக்கிறது. பட்டதாரிகள் முதற்கொண்டு படிப்பறிவு இல்லாத திறமைவாய்ந்த இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலைகள் இந்நிறுவனத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. இவர்களின் இணையதளத்தில் நேரடியாக சென்று வேலைக்கான விண்ணப்ப பதிவு செய்யலாம் அல்லது சுலபமாக உடனடியாக கிடைக்க மின்ட்லி நிறுவனத்தின் மூலமாக சென்று தனக்குரிய பணியை இவர்களிடம் பெற்றுவிடலாம்.

OYO வில் எதிர்பார்க்கப்படும் வேலை விவரங்கள்:

OYORooms

Oyo Rooms இல் Hotel Manager பணி விவரம் பின்வருமாறு:

இடம் : Coimbatore

மாத வருமானம் : ரூ.18,000 – ரூ.24,000

செயல்பாடு : 

  • ஹோட்டலின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
  • இணக்க செயல்முறையைப் பின்பற்ற  வேண்டும்.
  • விருந்தினர் மகிழ்ச்சியை உறுதிசெய்ய முன்னுரிமை சேவை வழங்கிட வேண்டும்.
  • மாத இலக்குகளை அடைதல்
  • பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல் மற்றும் பணியாளர்களை கையாளுதல்

பணி நேரம் : முழு நேரம்

பணியமர்த்தல் செயல்முறை : நேருக்கு நேர் நேர்காணல், தொலைபேசி நேர்காணல்

கல்வி தகுதி : MBA, Diploma

யார் விண்ணப்பிக்கலாம் : Freshers

Oyo Rooms இல் Guest Relation Executive பணி விவரம் :

இடம் : Coimbatore

மாத வருமானம் : ரூ. 8,000 – ரூ.14,000

செயல்பாடு : 

  • Hotel mangerக்கு உதவியாக ஹோட்டலின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
  • விருந்தினர் மகிழ்ச்சி, இணக்கம் பின்பற்றுதல் ஆகியவற்றிற்கு பொறுப்பு வகிக்க வேண்டும்.
  • வருவாய் இலக்குகளை கையாள வேண்டும்.
  • சவால் நிறைந்த சூழலை எதிர்கொள்ள தயாராக இருத்தல் வேண்டும்.
  • சேவை சார்ந்த நபராக இருத்தல் வேண்டும்.
  • உள்ளூர் மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • ஷிப்ட் அடிப்படையிலான வேலையில் பழக்கமுள்ளவராக இருத்தல் வேண்டும்.

பணி நேரம் : முழு நேரம்

பணியமர்த்தல் செயல்முறை : நேருக்கு நேர் நேர்காணல், தொலைபேசி நேர்காணல்

கல்வி தகுதி :  B.Sc. /BCA /BBM – Analytics,Logistics, Transportation

யார் விண்ணப்பிக்கலாம் : Freshers

நேர்காணல் பற்றிய விவரங்கள் :

interview

Oyo Rooms இல் நேர்காணலை (Interview) சிறப்பாக செயல்பட ஒரு சில வழிமுறைகளை நினைவு வைத்திருந்தால் போதும். புதியதாக நேர்காணல் செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன என்பதை இந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்திற்கு ஏற்ற நேர்காணலை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதை மாத்திரம் பகிர்ந்து கொள்கிறேன்.

தொடக்க நிறுவனங்கள் Freshers -ஐ நேர்காணலுக்கு அழைக்கிறார்கள். இதில் பணி அனுபவம் பெற்றவர்களால் எந்தவொரு போட்டியும் ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் நேர்காணல் சந்திக்க வரும் அனைவரும் தங்களுடைய திறமையை பயன்படுத்தி முதலில் நேர்காணல் நடத்துபவரின் கவனத்தை பெற்று விட்டால், அடுத்த கட்ட சுற்று நேர்காணல் வெற்றிகரமாக அமையும்.

OYO Rooms பொறுத்தவரை நேருக்கு நேர் நேர்காணல் மற்றும் தொலைபேசி நேர்காணல் என இரு வழியில் தேர்ந்தெடுப்பார்கள். அதனால் இந்த இரு நேர்காணலிலும் எவ்வித பதற்றத்தையும் வெளிப்படுத்தாமல் நிதானமாக நேர்காணலை அணுக வேண்டும். நேருக்கு நேர் நேர்காணலில் மூன்று சுற்றுகள் இருக்கும். முதல் சுற்றை வென்றவர்கள் தான் ஒவ்வொரு சுற்றையும் கடந்து செல்ல முடியும். அதனால் முதல் சுற்று முதல் கடைசி சுற்று வரை கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தயார்படுத்திக் கொள்ளாமல் அஜாக்கிரதையாய் நேர்காணல் அணுகினால் அது தோல்வியை நோக்கி தான் கொண்டு செல்லும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் OYO Rooms இல் எப்படி வேலை பெறுவது என்று பார்த்ததோடு எந்த வேலைகள் எந்த இடத்தில் வழங்குகிறார்கள் என்று பார்த்தோம். மேற்கொண்டு பல இடங்களில் உள்ள காலி பணியிட விவரங்களை அறிந்துக் கொள்ள மின்ட்லி- யில் Sign Up செய்து தொடர்பில் இருங்கள். நன்றி !