நிறுவனங்கள் இலவச வேலை பதிவுகளை பயன்படுத்த ஐந்து காரணங்கள்

 

வேலை

இலவச வேலை பதிவு அம்சத்தைப் ( Free job posting features ) பயன்படுத்தும் நிறுவனங்கள் பற்றி அறிவதற்கு முன்பு இந்தியாவில் பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் எண்ணிக்கையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 1.9 மில்லியன் நிறுவனங்கள் தற்போது வரை பதிவிடப்பட்டுள்ளது. இதில் 95 சதவீதம் மேல் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக உள்ளன. இத்தனை நிறுவனங்கள் இருந்தாலும் செயல்படுகிற நிறுவனங்கள் எண்ணிக்கை சுமார் 11 இலட்சம் நிறுவனங்கள் மட்டுமே! இவை அனைத்தும் சொல்ல காரணம் எந்த அளவிற்கு வேலை வாய்ப்பினை இந்நிறுவனங்களால் பெற்றிட முடியும் என்பது பற்றியே!

மின்ட்லி

ஒரு வேலையை சுலபமாக பிறரிடம் கொண்டு சேர்க்கவோ அல்லது ஒரு வேலை சுலபமாக பெற்றிடவோ வெகு காலமாக முடியாத காரியமாக இருந்து வந்துள்ளது. இதற்கு காரணம் என்னவெனில், தொடக்கத்தில் ஒரு நிறுவனம் வேலைக்கான பதிவினை எந்த தளத்தில் பதிவு செய்தால் நிறுவனத்திற்கு ஏற்ற நபர்களைப் பெற்றிட முடியும் என்பதில் தெளிவும் இல்லை பிற வாய்ப்பும் இல்லை. பெரும்பாலான நிறுவனங்கள் முதலில் நிறுவனத்திற்கான ஆட்களை பெறச் செய்தோ அல்லது தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாகவோ விளம்பரம் செய்து வந்தார்கள். ஆனால், அதைப் பார்த்து வந்த நபர்கள் எத்தனை பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டர்கள் என்பது கேள்வி குறியே!

நிறுவனங்களுக்கு ஒரு விளம்பரம் என்பது மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது. அந்த விளம்பரம் மூலமாகவே பல நிறுவனங்கள் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனால், ஒரு வேலையை பதிவு செய்வதற்கு பல ஆயிரங்கள் முதல் பல இலட்சங்கள் வரை செலவிடப்படுகிறது. செய்தி தாள்கள் மற்றும் வானொலி போன்றவற்றை பயன்படுத்தி வேலை விவரங்கள் சொல்ல முடியும். ஆனால் அதில் பல சிக்கல்கள் உள்ளன. அதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்பொழுதும் எந்த நோக்கத்திற்காக தளங்கள் இருக்கிறதோ அதற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

வேலை

உதாரணத்திற்கு தொலைக்காட்சியில் பல ஆயிரங்கள் செலவிட்டு வேலைப்பதிவு விளம்பரம் செய்யும் போது, எத்தனை பார்வையாளர்கள் (Users) அதை கவனித்தார்கள் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை பேர் அதற்காக விண்ணப்பித்தார்கள் என்றும் பார்த்தால் எதிர்பார்த்த அளவைக் கூட எட்டியிருக்காது. பொதுவாக இப்படி விளம்பரம் செய்யும் போது அனைத்து விவரங்களையும் குறிப்பிட்ட பதிவிற்குள் கொண்டு வர முடியாது. இப்படி இருக்க வேலைக்கு ஏற்ற தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பித்து ஏமாற வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் குறைந்த காலி பணியிடங்களுக்கு அதிக எண்ணிக்கை விண்ணப்பங்களும் வருவதுண்டு, இதனால் பணம் வீணாகுவதோடு நேரமும் வீணாக்கப்படுகிறது. அதனால் சரியான தேர்வாக நிறுவனங்கள் தங்கள் கண்ணோட்டத்தை மாற்றி உள்ளனர். அவை என்னவென்று பார்ப்போம்.

ஒரு வேலைப் பதிவு செய்வதற்கு பல நோட்டுகள் செலவிடப்படுகிறது என்று பார்த்தோம். ஆனால், அதனால் எத்தனை நிறுவனங்கள் பயனடைந்து உள்ளன என்று பார்த்தால் வெகு குறைவாகவே உள்ளது. இந்தியாவில் தொடக்க நிறுவனங்கள் பல வருகை தந்துள்ளன. இப்படிப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் விளம்பரத்திற்கே அதிக பணத்தை இரைப்பத்தால் நிறுவன வளர்ச்சியினைக் குறிப்பிட்ட காலத்திற்கு எட்டிட முடியாது. அதே நேரத்தில் வேலையை தேடுபவர்கள் நோக்கி வேலைப் பதிவினை செய்தால் பல செலவுகளைக் குறைத்திட முடியும். இதை தான் வேலை கொடுப்பவர்க்கும் வேலை பெறுபவர்களுக்கும் உள்ள உறவாக பார்க்கிறோம். இந்த உறவில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் இவர்களுக்கு பாலமாக வேலை வாய்ப்பு தளங்கள் இலவசமாக வேலைப் பதிவு செய்வதற்கு முன் வருகிறார்கள்.

முதலில் இலவச வேலைப் பதிவு தகவல்களை வெற்றிகரமாக வழங்கும் தளங்களைப் பார்க்கலாம். அதற்கு உதாரணமாக மின்ட்லி வலைத்தளத்தை பற்றி விரிவாக பார்ப்போம். அதன் பிறகு நிறுவனங்கள் இதை பயன்படுத்துவதற்கான 5 காரணத்தை விளக்கமாக அறிந்திடுவோம்.

இலவச வேலை பதிவு வழங்கும் தளம் :

இலவச வேலை பதிவு வழங்கும் தளங்கள் ஒவ்வொன்றிற்கும் சிறப்பான அம்சங்கள் இருந்தாலும் அதில் அனுதினமும் திறமை வாய்ந்த பயனாளர்களை பெற்று வரும் தளத்தை பற்றி அறிந்திடுவோம்.

மின்ட்லி

  1. Mintly

Mintly (மின்ட்லி)  – வேலை வாய்ப்பு வழங்கும் தளமாகும். இவர்கள் நிறுவனம் வேலை கொடுப்போருக்கும், பெறுவோருக்கும் இடையில் பாலமாக செயல்படுகிறார்கள். வேலை தேடி வருபவர்களில் பலர் பொறியியல் பட்டதாரிகள், வெளி நாடுகளில் வேலை செய்ய விருப்பம் உடையவர்கள், திறமை வாய்ந்த இளைஞர்கள்,பகுதி நேர பணியாளர்கள்   மற்றும் சுய கற்றலை மேம்படுத்திக் கொள்ள அவரவர் மொழியில் அனுதினமும் பதிவிடப்படும் கட்டுரைகளை அறிய வரும் இந்தியாவின் அனைத்து தரப்பு மக்கள் பயனாளர்களைப் பெற்றுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நபர்களுக்கு மின்னஞ்சல் முகவரியில் அறிவித்து தெரியப்படுத்துகிறது.

நிறுவனங்கள் இலவச வேலை இடுகை பயன்படுத்துவதற்கான ஐந்து காரணங்கள் :

  1. பணத்தை சேமித்து, செலவை மிச்சப்படுத்த

  2. சரியான நபர்களை தேர்வு செய்ய

  3. துரிதமாக விண்ணப்பங்களை பெற

  4. வேலை தேடுவோரை சந்தித்தல்

  5. நேரம் மிச்சப்படுகிறது

பணத்தை சேமித்து, செலவை மிச்சப்படுத்த :

நிறுவனங்கள் விளம்பரத்திற்காக அதிக செலவு செய்ய நேரிடுகிறது என்பதை பற்றியும் அதனால் என்ன பயன் அடைந்தார்கள் என்பதை பற்றியும் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.  இந்தியாவில் பல தளங்களில் இலவசமாக வேலைப் பதிவு செய்து ஆட்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் இருக்கின்றன. அதுவும் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு முதலீடும் இல்லாமல் இலவசமாக வேலைப் பதிவு செய்கிறார்கள். ஆனால், இதுபோன்ற தளங்கள் மூலமாக சரியான நபர்கள் நிறுவனங்கள் பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதனால், சமூக வலைதளங்களை தவிர்த்து வேலை வாய்ப்பு அளிக்கும் தளங்களை நாடுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் இலவச வேலை வாய்ப்பு பதிவு இருப்பதே! இலவச சேவை பயன்படுத்துவதால் நபர்கள் வரும் வரை பதிவிடப்படும் இடுகை அழிக்கப்படாமல் இருக்கும். இந்த செயல்முறை நிறுவனம் சந்திக்கும் பெரும்பாலான சிக்கலை தவிர்ப்பது பணம் விரயம் ஆகாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

சரியான நபர்களை தேர்வு செய்ய :

சரியான நபரை பெற வேண்டிதான் பல ஆயிரங்கள் செலவானாலும் பொருட்படுத்தாமல் நிறுவனங்கள் வேலை இடுகையை பல தளங்களில் செய்கிறது. ஆனால், எதிர்பார்க்கப்படும் நபர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. சமூக வலைதளங்களும் இலவச இடுகையை உற்சாகப்படுத்தினாலும் நிறுவனத்திற்கு அருகில் இருக்கும் நபர்களையும், திறமை வாய்ந்த நபர்களையும் அடையாளங்கொள்ள முடிவதில்லை. இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க  வேலை வாய்ப்பு தளங்களை  நாடுகிறார்கள். இத்தளங்களில் தற்குறிப்பு பதிவேற்றி இருக்கும் பல நபர்கள் இருப்பதால் அதில் யார் நிறுவனத்திற்கு உகந்ததாக இருப்பார்கள் என நேரடியாக அடையாளம் காணமுடிகிறது.

துரிதமாக விண்ணப்பங்களை பெற :

ஒரு குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் இருப்பதால் அந்த வேலையை உடனடியாக தொடங்க நபர்கள் (candidates) தேவைப்படுகிறது. ஒரு சரியான நபரை வேலைக்குத் தேர்ந்தெடுப்பது என்பது மனித வள துறையினருக்கு எப்பொழுதும் சவாலாக இருக்கிறது. அதனால், உடனடியாக வேலைக்குச் சேர தயாராக இருக்கும் நபர்களின் விண்ணப்பங்களைப் பெற்றிட வேலை வாய்ப்பு தளங்கள் வழங்கும் இலவச சேவை உதவியாக இருக்கிறது.

வேலை தேடுவோரை சந்தித்தல் :

வேலைக்காக விண்ணப்பம் செய்பவர்களை நேரடியாக சந்திக்க இந்த வழி உதவுகிறது. இலவச பதிவு என்பதால் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பல்வேறு திறமையுள்ளவர்களை எந்தவொரு முகவர் இடையூறு இல்லாமல் சந்திக்க உதவுகிறது.

நேரம் மிச்சப்படுகிறது :

பணத்தை மிச்சப்படுத்துவது என்பது எந்தளவிற்கு முக்கியமாக இருக்கிறதோ அந்தளவிற்கு நேரத்தை மிச்சப்படுத்துவது அதைவிட முக்கியத்துவமாக கருதப்படுகிறது. வேலை வாய்ப்பு தளங்கள் வழங்கும் இலவச வேலை வாய்ப்பு பதிவை பயன்படுத்துவதால் எந்த நேரம் ஆனாலும் வேலைக்கான பதிவை இட முடியும். இது வேலை தேடுவோருக்கும் பயன் தரக்கூடியதாக இருக்கிறது.

Employer

Sign up Now !