பிளாக்செயின் ஆட்ரிஷன் செலவை மிச்சப்படுத்தும் மூன்று வழிகள்

பிளாக்செயின் ஆட்ரிஷன் செலவை மிச்சப்படுத்தும் மூன்று வழிகள்
Sandygirl
Wed, 08/21/2019 – 18:58

பிளாக்செயின்

நாம் நிறுவனத்தில் எதிர்பார்க்கும் வளர்ச்சியை அதிகரிக்க உற்பத்தி மற்றும் விற்பனையில் அதிக கவனத்தை செலுத்துவோம். வளர்ச்சி என்பது அதை ஊக்குவிக்கும் செயலில் மட்டும் ஈடுபாடு காட்டுவது என்பதல்ல. வளர்ச்சியைத் தடுக்கும் வழியைக் கண்டறிந்து அதை போக்கி முழு வேக வளர்ச்சிக்கு ஈடுபடுத்துவதும் இதில் சேரும். அதற்கு குறைந்த எண்ணிக்கை அதிக வளர்ச்சி என்ற கோட்பாட்டை எடுத்துக் கொள்வோம்.  நிறுவனங்களில் குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை கொண்டு எதிர்பார்க்கும் வளர்ச்சியை அடைய முடியுமா என்று கேட்டால் அதற்கு நிச்சயம் முடியும் என்று பதிலை உறுதியாக கூற முடியும். இந்த நிச்சயத்தை கொடுக்க ஊன்று கோலாக இருப்பது பிளாக் செயின். 

பிளாக்செயின்

 

பிளாக்செயின் பெரும்பாலான செலவுகளை குறைத்து உதவும் தொழில்நுட்பமாகவும் செயல்படுகிறது. முதலில், பிளாக்செயின் crypto-currency ஆன பிட்காயின் பரிவர்த்தனைக்கு உருவாக்கப்பட்டு பின் பல செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

பிளாக்செயின் என்றாலே குறிப்பிடப்படும் முக்கிய  மூன்று விஷயங்களை மனதில் வைக்க வேண்டும். அவை.,

  1. Digitized

  2. Decentralized

  3. Public ledger 

இவை பரவலாக்கப்பட்ட ledger தொழில் நுட்பமாக இருப்பதால் இன்று பல வணிக செயல்பாடுகளில் இணைந்து வருகிறது. முக்கியமாக மனிதவள துறையில் பிளாக் செயின் தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் துறையில் சந்திக்கும் ஆட்ரிஷன் (attrition) செலவைக் குறைக்க முக்கிய தீர்வினை பிளாக் செயின் வழங்குகிறது. அது என்ன என்பது பற்றி மூன்று வழிகளில் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பு ஆட்ரிஷன் என்ற வார்த்தைக்கான விளக்கத்தை அறிந்து கொள்வோம். 

ஆட்ரிஷன் என்பது கூட்டு செயல்பாட்டு எண்ணிக்கையை குறைப்பது என்பதாகும். 

 

1.பணியமர்த்தும் செலவை குறைக்கிறது :

நிறுவனங்கள் அநேக மக்களுக்கு பணியை வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்தாலும் அல்லது நிறுவன உற்பத்தியையும், இலாபத்தை அடைய வேண்டி ஊழியர்களை நியமித்தாலும், ஒருசில நேரங்களில் ஆட்களை வேலைக்கு எடுக்கும்போதே பல செலவுகளை செய்ய வேண்டியிருக்கிறது. 

வேலைக்கு பணியமர்த்தும் கடமை அதிகமாக மனித வள துறையினருக்கே இருப்பதால் இதில் இருக்கும் சவால்களும் அவர்களே எதிர்கொண்டு அதற்கான தீர்வை கொண்டுவர வேண்டியிருக்கிறது. அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது திறமையான நபரையும், நீடித்த நாட்கள் பணியில் இருக்க கூடிய நபரையும், ஒழுக்கமுள்ள நபரையும், தகுதி வாய்ந்த நபரையும் தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும். இவை அனைத்தும் செய்வது சாதாரண காரியமல்ல. அப்படியே தேர்வு செய்து குறிப்பிட்ட வருமானத்திற்கு நியமித்து பணியமர்த்தினாலும், எத்தனை நாட்கள் பணியில் நீடிப்பார்கள் என்பது கேள்வி குறியே! அது மட்டுமல்ல கல்வி தகுதி வைத்துக்கொண்டு தேர்வு செய்தாலும் அதற்குரிய அறிவும், அனுபவமும் போதுமானதாக இல்லை. அதற்காகவே இவர்களுக்கென்று ஒரு சில மாதம் பயிற்சி வழங்க வேண்டியிருக்கிறது. இது நிறுவன உற்பத்தியைப் பாதிக்கிறது. இதற்கு தீர்வு பிளாக்செயின் மூலம் கண்டறியப்பட்டது. நிரந்தரமில்லாத பல ஊழியர்களைத் தேர்வு செய்வதை விட, பல திறமை வாய்ந்த சில ஊழியர்களை தேர்வு செய்து பணியமர்த்துவது என்பது எளிதானதாகவும், செலவு குறைவானதாகவும் இருக்கிறது. இதற்கு பிளாக்செயின் தொழில் நுட்பம் எந்த வகையில் உதவ கூடும் என்பதை பார்ப்போம்.  

பிளாக்செயின்

 

நிறுவனங்கள் தொடர்ச்சியாக திறமை வாய்ந்த பணியாளர்களை தக்கவைத்து கொள்ள போராடி வருகிறது. ஆனால், அவர்களை அடையாளம் கண்டு கொள்வதிலும், நிறுவனத்தில் பணியமர்த்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலையில் தான், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பயன்படுத்திவந்த பிளாக்செயினை தேர்வு செய்கிறார்கள். பிளாக் செயின் செயல்பாடு பற்றி இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும், இதன் கட்டமைப்பு எந்தளவிற்கு மனித வள துறையினருக்கு உதவியாக இருக்கிறது என்றும் புரிந்துக்கொள்ளுங்கள். 

2. பணியாளர்களின் பின்னணி சோதனை :

நிறுவனங்கள் பணியமர்த்த நபரை தேர்த்தெடுத்த பிறகு நபர்களின் பின்னணி சோதனையை அறிய சான்றிதழை சரிபார்க்க வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதில் பணியாளரின் கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற தகவல்கள் அடங்கும். இவையே நிறுவனங்களுக்கு எழுத்து பூர்வ ஆதாரமாக இருக்கிறது. இவை அனைத்தும் செய்திட நேரமும், பணமும் செலவிடப்படுகிறது. இது போன்ற தேவையில்லாத செலவுகளை தவிர்க்க நிச்சயம் அதற்குரிய நடவடிக்கைகள் கையாள வேண்டி இருக்கிறது. இந்த செலவுகள் என்று சொல்லும் போது ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு தொகை எதிர்பார்க்கப்படுகிறது என்று பார்ப்போம். 

  • முகவரியை சோதித்தறிதல் :

வேலைக்காக விண்ணப்பிக்கும் நபர்கள், கொடுக்கப்படும் முகவரியின் உண்மையை கண்டறிய நேரில் சென்று யாராலும் பார்க்க முடியாது. அதனால் முகவரி சான்று நகல்கள் பெறுபடுவதோடு அது உண்மையான முகவரியா என்று அறிய ரூ. 150 லிருந்து ரூ. 500 வரை ஒரு சில நிறுவனங்கள் செலவிடுகின்றன. 

ஒரு நகை வியாபாரியானவர் தனது பணியாளரின் முழு விவரங்களை அறிவது தவிர்க்க முடியாத ஒன்று. மேலும், இது போன்ற வேலைகளை செய்திட பிற நபர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதால் பணம் அதிகமாகவே வீணாக செலவிடப்படுகிறது. 

  • வேலையை சோதித்தறிதல் :

பணி முன் அனுபவம் உள்ள நபர்களிடம் முன் பணி விவரங்களை குறித்து சோதித்தறிவது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதுவும், வேறு ஒரு புதிய வேலையில் சேர விரும்புபவர்கள் பற்றி முழுமையாக அறிந்திட எந்த பணியை செய்தார்கள், பணியின் விவரங்கள் என்ன, எத்தனை வருடங்கள் பணியில் நீடித்தார், தற்போதைய வருமானம் என்ன, வேலையில் செய்த முக்கிய செயல்கள் என்ன மற்றும் தனி நபரின் ஒழுங்கு போன்ற பல தகவல்களைச் சரிபார்க்க ரூ. 200 முதல் ரூ. 400 வரை செலவிடப்படுகிறது.   

  • பரிந்துரை சோதனை :

நிறுவனத்தில் வேலைக்கு சேர நேரடியாக அணுகுபவர்களும் உண்டு மற்றும் பரிந்துரையின் பேரில் அணுகுபவர்களும் உண்டு. அதில், பரிந்துரையின் கீழ் வருபவராக இருந்தாலும் ரூ. 100 முதல் ரூ.300 வரை சோதனை செய்யப்படுகிறது. 

  •  குற்றவியல் சோதனை :

குற்றவியல் சோதனையைச் சரிபார்க்க அதிக தொகை எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற விவரங்களைக் காட்டிலும் முக்கியமானதாக இருப்பதால் இது தவிர்க்க முடியதாக ஒன்றாக இருக்கிறது. இது போன்ற சோதனைகள் நிறுவன நன்மைக்காகவே செய்யப்படுகிறது. அதனால் செலவினை ஒப்பிடும்போது நிறுவன நலன் முக்கியமாக இருக்கிறது. 

பிளாக்செயின் தொழில்நுட்பம் இவ்வித செலவை குறைப்பதில் முதன்மையாக உள்ளது. 

பிளாக்செயின்

 

பிளாக்செயினில் ஒரு முறை நபரின் விவரங்களை பதிவு செய்து விட்டால் பின்னர் அதில் இருந்து நீக்க முடியாது. மேலும், பல தகவல்களின் உண்மையை பரிசோதித்து நபரின் பின்னணி சோதனையை உறுதிப்படுத்தும். பிளாக்செயின் மூலமாக நபரின் சான்றிதழ் விவரங்களை எளிதாக எங்கு இருந்தாலும் அறிந்திட முடியும். 

வேலை வாய்ப்பு தளங்கள் ஆய்வு செய்ததில், விண்ணப்ப தகவல்கள் போலியானதாகவும், முரண்பாடான தகவல்களும் பதவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற போலியான தகவல்களை அறிந்திடாவிட்டால், நஷ்டம் நிறுவனத்திற்கே! 

3. நேரம் மிச்சப்படுகிறது :

‘காலம் பொன் போன்றது’ என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நேரத்தை சரியாக பயன்படுத்தாவிட்டால் அது பணத்தை வீணாக இழப்பதற்குச் சமம். இதுவரை நிறுவனங்கள் பணியமர்த்தும் செலவை மிச்சப்படுத்துகிறது மற்றும் பின்னணி சோதனையில் ஏற்படும் செலவைக் கட்டுப்படுத்துகிறது போன்றவற்றை பார்த்தோம். இவை அனைத்திலும் பிளாக்செயின் பல செலவுகளை குறைப்பதற்கு முன்பு அதை எவ்வளவு துரிதமாக செய்து முடிகிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஒரு நிறுவனம் பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் காலத்தை வெகு சுலபமாக குறைக்கிறது. அத்துடன் குறுகிய நேரத்திற்குள் தேவையான பணியாளர் விவரங்களை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கிறது. இதனால் உற்பத்தியில் எந்தவொரு தாமதமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிட மறவாதீர்கள். தொடர்ந்து பல பயனுள்ள பதிவை பெற மின்ட்லியில்  Signup செய்யுங்கள். நன்றி!

 

Language