மனிதவள துறையில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் தாக்கம்

 

பிளாக்செயின்

மனிதவள மேலாண்மை துறையின்றி எந்த நிறுவனமும் ஒழுங்காக கட்டமைக்க இயலாது. ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் மனிதவள மேலாண்மை துறையில் உள்ளவர்களாகத்தான் இருக்க கூடும். இவர்களுக்கென்று இருக்கின்ற முக்கிய வேலைகளில் ஒன்று நிறுவனத்திற்காக சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்துவது. ஆனால், இவர்களின் வேலை சாதாரணமானது அல்ல; சவாலானது. அதற்கு பல காரணங்களை முன் வைக்க முடியும். உலகம் முழுவதும் இத்துறையில் உள்ளவர்கள் ஒரே மாதிரியான சவால்களை சந்திக்க நேரிடுவதால், அதற்கு தீர்வாக புதிய தொழில்நுட்பத்தின் உதவியை நாடிவருகிறார்கள். அந்த தொழில்நுட்பம் அசாதாரண செயலை எவ்வளவு சாதாரணமாக செய்துகாட்ட முடியுமோ, அவ்வளவு சுலபமாக செய்து வருகிறது. தொழில் நுட்ப துறையில் அல்லாதவர்களும் இதன் செயலை கண்டு வியந்து வருகிறார்கள். அந்த தொழில்நுட்பம் தான் பிளாக்செயின்.

பிளாக்செயின்

பிளாக்செயின் மனித வள மேலாண்மை துறைக்கு எந்தவிதத்தில் உதவிட முடியும்? பிளாக்செயின் தொழில்நுட்பம் எவ்வித தாக்கத்தை மனித வள மேலாண்மை துறையில் செலுத்தும்? போன்ற பல கேள்விகளுக்கான பதிலை இக்கட்டுரை அளிக்கும் என நம்புகிறேன்.

பிளாக்செயின் என்றால் என்ன ? 

மனிதவள மேலாண்மையாளர்களின் செயல்பாடுகள் :

இந்தியாவில் மனிதவள மேலாண்மை துறையில் வேலை பெறுவது எப்படி என்ற இணைப்பில் மனிதவள மேலாண்மையாளர்கள் ஒட்டு மொத்த செயல்பாடுகள் என்ன என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சில முக்கிய கடமைகளை குறிப்பிடுகிறேன்.

  • நபர்களை நேர்காணல் செய்தல்
  • நபர்களை பணியமர்த்தல்
  • ஊழியர்களின் சம்பள விவரங்களை நிர்ணயித்தல்
  • ஊழியர்களின் விவரங்களை சேகரித்தல்
  • ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல்
  • திறமை மற்றும் அனுபவம் அடிப்படையில் பணியை ஒதுக்கீடு செய்தல்
  • நிறுவனத்தில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்
  • வேலையை விட்டு நீக்குதல்
  • தலைமை தாங்குதல், மதிப்பிடுதல், ஒருங்கிணைத்தல், முடிவெடுத்தல்
  • நிறுவன உற்பத்தியை அதிகப்படுத்த ஊழியர்களை உற்சாகப்படுத்துதல்.

மனிதவள மேலாண்மையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் :

மனிதவள மேலாண்மையாளர்களின் (HR) பணி ஏற்கனவே குறிப்பிட்டது போல சவாலானது மற்றும் கடினமானது. நிறுவனத்திற்காக பல மணி நேரம் ஆய்வு செய்து தனது கடமையை செய்ய நேரிட்டாலும், முடிவில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சரியான ஆட்களை பணியமர்த்துவது முக்கிய கடமையாக இருக்கிறது. நிறுவனம் தனது திட்டங்களுக்காக திறமையான ஆட்களைக் கண்டுபிடித்து அவர்களை தங்கள் நிறுவனத்துடன் வைத்து கொள்ள மனிதவள மேலாளர்களையே நாடுகிறார்கள். தவறான நபரை தேர்ந்தெடுத்து‌ விட்டால் நிறுவனத்திற்கு தான் மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.

காலம் பொன் போன்றது என்று அதிகமாக உணருபவர்கள் நிறுவன உரிமையாளர்கள் தான். ஆட்களை பணியமர்த்துவது, செய்யும் வேலையில் ஒரு முக்கிய பங்காக இருப்பினும் அதற்காகவே அதிக நேரத்தை செலுத்தி நிறுவன வளர்ச்சிக்காக திட்டமிட்டு இருக்கும் பிற வேலைகளை செய்ய முடியாமல் போவதும் வருந்தத்தக்கதே. அதனால், நிறுவனங்கள் திறமையான ஆட்களை தங்கள் நிறுவனத்தை அணுக மூன்றாம் நபர்களை நாடுகிறார்கள். பெரும்பாலான மூன்றாம் நபர்கள் மூலமாக வரும் விண்ணப்பங்கள் பெற பல செலவுகள் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியே வந்தாலும் சரியான நபர்கள் கிடைப்பது தாமதம் ஆகிறது. ஒரு சில நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமை இல்லையென்ற பட்சத்தில் அவர்களை பணியமர்த்தி பின் பயிற்சிகளை‌ ஒருசில மாதங்கள் கொடுக்கிறார்கள். பயிற்சி முடிந்தவுடன் நபர்கள் பணியில் நீடிப்பாரா என்ற நிச்சயம் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் பணியமர்த்தும் போது நபர்கள் எந்தளவிற்கு இவ்வேலை முக்கியம் என்று அறிந்து கொள்வதற்கு பல கேள்விகளை தயார்செய்து மனிதவள மேலாண்மையாளர்கள் முன் வைக்கிறார்கள்.  ஒருசில கேள்விகளை நபர்களுக்கும், பணிக்கும் தகுந்தவாறு அமைப்பது கடினமான செயல்முறையாக இருக்கிறது.

பிளாக்செயின்

நபர்கள் நேர்காணலில் (Interview) சிறப்பாக செய்தாலும் வேலையென்று வரும்போது எதிர்பார்க்கும் திறமை குறைவாகவே இருக்கிறது. நேர்காணலுக்கு வரும் நபர்கள் தற்குறிப்பை (Resume) பிற நபரிடம் கொடுத்து தயார்செய்து வருவதால், தனி நபரின் திறமையை பரிசோதிப்பது கடினமாக இருக்கிறது. ஆதலால், பணி சூழலில் இதுபோன்ற பிரச்சனைகள் நேரிடுவதால் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை இத்துறை நாடுகிறது.

நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் உள்ள இணக்கம் முன்பைவிட குறைந்து உள்ளது. இது இரு தரப்பினரையும் வலு இழக்கச் செய்யும். இந்த இரண்டு உறவு சரிவர இயங்குவதற்கு மனிதவள மேலாண்மை துறையினர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

HR துறையில் Blockchain வர காரணம்  :

Human Recruiters தொழில்முறை நெட்வொர்க்கிங் தளங்களில் உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் அதிக நேரம் எடுப்பதோடு, நபர்களை பற்றிய தவறான விவரங்களைப் பெற்றுள்ளார்கள். அதற்கு காரணம் வேலைக்காக விண்ணப்பிக்கும் நபர்கள் போலியான தகவல்களை சேகரித்து தற்குறிப்பை தயார் செய்வதே. அதில், எவ்விதமான போலியான தகவல்கள் தற்குறிப்பில் இடம் பெறுகின்றன என்று பார்ப்போம். திறமை, முன் பணி அனுபவ காலம், முன் பணி சம்பள விவரம், முகவரி, கல்வி, சான்றிதழ் தகவல்கள் இதுபோன்ற முக்கிய விவரங்கள் பெரும்பாலும் போலியானதாக, நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பது என்பது கடினமானது. இதனை தவிர்க்க BlockChain எப்படி HR சந்திக்கும் பிரச்சனைக்கு உதவ கூடும் என்ற கேள்வி எழும்பும் அல்லவா. ஏனென்றால், பிளாக்செயின் என்பது நமக்கு தெரிந்த வரை Bitcoin போன்ற Digital Currency பரிவர்த்தனை செய்ய எழுந்த தொழில் நுட்பமாகவே அறிந்திருப்போம். மேலும், இது அனைத்து தகவல்களையும் கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நினைவுப்படுத்துகிறேன். அந்தளவிற்கு இதன் தொழில்நுட்பம் அனைத்து துறையில் பங்கு கொள்ளும் வகையில் பரவலாக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று விரிவாக சொல்லப்போனால், பிளாக்செயின் தொழில்நுட்பமானது நிதி மற்றும் விநியோகச் சங்கிலிகளை நிர்வகிப்பதில் தொடர்ந்து கவனத்தையும், பயன்பாட்டையும் ஈர்க்கும்; அதே வேளையில், மனிதவளத்துறையில் ஒரு  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

HR இன் முக்கிய சவால் :

மனிதவளத்தில் பொது சொத்துக்கள் மற்றும் பரிவர்த்தனைகளை விட நிறுவனங்கள் தங்கள் பணியாளர் தகவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது முதல் கடமையாகும். நிறுவன விவரங்கள் மற்றும் பணியாளர்களின் தகவல்களைப் பாதுகாத்து வைப்பது என்பது மனிதவள துறையினருக்கு சவாலாக இருக்கிறது.

இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் மொபைல் சாதனங்களின் விரிவான பரவல் மற்றும் பயன்பாட்டின் மூலம், இதன் விளைவாக வரும் தகவல், சமச்சீரற்ற தன்மையாக நிறுவனங்களுக்கு மனித வள அபாயங்களையும், பொருளாதார இழப்புகளையும் தூண்டக்கூடும். அதனால் பிளாக்செயின் மனிதவள அபாயத்தை நிவர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

பிளாக்செயின்

மனிதவளத்தில் பிளாக்செயின் பயன்பாடு :

பிளாக்செயின் தொழில்நுட்பம் நம்பகத்தன்மை வாய்ந்தது; பொதுவுடைமையாக்கப்பட்டது; எளிமையானது, பாதுகாப்பானது; நிரந்தரமானதும் நிலையானதும் ஆக இருக்கிறது. இந்த தொழில் நுட்ப உதவியின் மூலம் விரும்பும் துறையில் விண்ணப்பிக்கும் நபர்களின் அனைத்து விவரங்களை சேகரித்து வைக்கிறது. அதில் நபரின் திறமை, தகுதி,கல்வி, அனுபவம், சான்றிதழ்கள் போன்ற தகவல்கள் ஒருங்கிணைத்து, தவறான தகவல்களை நீக்குகிறது. இந்த செயல் முறையால் சரியான நபர்களை மனிதவள தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கிறது. பிளாக்செயின் பொறுத்தவரை சேகரிக்கப்படும் தகவல்களை அழிக்க முடியாது. இந்த தொழில்நுட்பம் கையாளுபவர்கள் அனுமதியுடன் நபரின் விண்ணப்பங்களை கண்காணிக்க முடியும்.

குறிப்பிடத்தக்க தரவு சேகரிப்பு மற்றும் மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு ஆகியவற்றின் காரணமாக அதிக நேரம் மற்றும் அதிக மனித முயற்சி மற்றும் செலவுகளை உள்ளடக்கிய செயல்முறைகளுக்கு பிளாக்செயின் பயன்படுத்தப்படலாம்.

பிளாக்செயின் உதவியின் மூலமும், தளத்தில் வரும் நபர்களை அடையாளம் காணுவதன் மூலமும், அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு  சரியான வேலைகள் மற்றும் திறன்கள் ஏற்ற வேலைகளை வழங்கிட முடியும்.

நேர்காணலின் போது நபரின் நடத்தை மற்றும் தொழில்நுட்ப திறன்களை மதிப்பீடு செய்து பிளாக்செயினில் வைக்கப்படலாம். அவ்வாறு செய்வதன் மூலம், வருங்கால ஊழியருக்கான திறனை எதிர்கால குறிப்புகளுக்காக சேமித்து வைக்க முடியும். சேமித்த  தகவல்களை பணியமர்த்துபவர்கள் ஒப்பீடு செய்து சரியான விவரங்களை உடைய நபரை நிறுவனத்திற்காக பணியமர்த்துவார்கள்.

Tags