வீட்டில் இருந்தபடியே பணிபுரிய தயாரா?

இந்தியாவில் வீட்டில் இருந்தபடியே பணிபுரிவதற்கான வாய்ப்பு அதிக அளவிலே உள்ளது. தொழில் நுட்ப ஊழியர்கள் முதல் வீட்டில் இருக்கும் மனைவிமார்கள் வரை வேலைகளை வீட்டில் இருந்தபடி செய்ய இன்றைய சூழ்நிலைகள் வழிவகுக்கிறது. தினமும் அலுவலகம் சென்று பணியாற்றி பெறும் ஊதியத்தை போல, வீட்டில் இருந்தபடியும் அதைவிட கூடுதலாக பெற முடியும்.  பொதுவாக, வேலை செய்ய விரும்புபவர்கள் அதிக வருமானத்தை பெறுவதில் இலக்காக கொண்டிருப்பார்கள். அதனால், இதில் முக்கிய பங்காற்றுவது நேரம். காலையில் எழுந்து போக்குவரத்தை பிடித்து அலுவலகம் செல்வதற்குள் பாதி நேரம் ஓடி விடுகிறது. இதில் போக்குவரத்திற்கு ஆகும் செலவும், கிடைக்கும் வருமானமும் கணக்கிட்டு பார்த்தால், கடைசியில் கையில் இருப்பது தேவைக்கும் குறைந்த தொகையே! இன்று பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணிபுரிய தேர்வு செய்வதற்கான காரணம் மனஅழுத்தத்தை குறைக்கவே ! அலுவலகத்தில் பணி சுமை, வேலை பளு, தொடர் கண்காணிப்பில் அதிகமாக தோன்றும். 

ஒரு சில நிறுவனங்கள் வீட்டில் இருந்த படி வேலையை செய்ய அனுமதிப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. தனது ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திற்கு கீழ் மட்டுமே பணியாற்ற வேண்டும்.  ஒப்பந்த படி குறைந்தது எட்டு மணி நேரம் பணியாற்ற வேண்டும். நிறுவனம் எதிர்பார்க்கும் அளிப்பை ஊழியர்கள் நேரத்திற்குள் வழங்க வேண்டும். நிறுவனத்திற்கு சொந்தமான ஆவணங்கள் வெளியே சென்று விடக் கூடாது. என இது போன்ற காரணங்கள் பொதுவான பெரு நிறுவனங்கள் வைப்பது உண்டு. இவை அனைத்தும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு சில நிபந்தனைகளுடன் நிறுவனங்கள் மாற்றி உள்ளது. 

எந்தெந்த வேலைகளை வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம்?

 • உள்ளடக்கம் எழுதுதல்

நிறுவனங்கள் எதிர்பார்க்கும் உள்ளடக்கங்களை வீட்டில் இருந்தபடியே செய்து கொடுக்கலாம். ஆங்கில மொழியில் வாய்ப்புகள் கிடைப்பது போல பிற மொழியிலும் உள்ளடக்கம் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இவை இணைய வழியில் தகவல்களை உடனுக்குடன் பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானதின் விளைவாக பல செய்தி நிறுவனங்கள் தங்கள் வாசகர்கள் விரும்பும் மொழியில், விரும்பும் தலைப்பில் புதிய புதிய உள்ளடக்கங்களை வழங்கி வருகிறது.  மின்ட்லி போன்ற வாழ்க்கை வழிகாட்டு தளங்கள் சுய கற்றல் ஊக்குவிக்கும் நோக்கத்தில் பல மொழிகளில் பல வேலை விவரங்களை அளித்து வருகிறது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் இலக்கை எளிதாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்கிறது. 

 • தரவு நுழைவு வேலைகள்

நிறுவனம் அளிக்கும் விவரங்களை கொண்டு சரியாக பதிவேற்றம் செய்தாலே போதுமானது. இந்த வேலைக்கு கல்வி மற்றும் அனுபவம் பெற்றிருக்க தேவையில்லை. தொழில்நுட்பம் கையாள தெரிந்த நபராக இருந்தாலே போதுமானது. இந்த வேலைக்கு கட்டாயம் இணைய வசதியுடைய கணினி அல்லது மடிக்கணினி வைத்திருக்க‌ வேண்டும். மேலும், விருப்பமான நேரங்களில் இந்த வேலையை எடுத்து செய்து கொடுக்கலாம். கூடுதலாக வருமானம் தேவைப்படுவோர் எளிதாக ‌இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே செய்து கொடுக்கலாம். 

 • கிராபிக் டிசைனர் 

நிறுவனங்கள் எதிர்பார்க்கும் லோகோக்களை வடிவமைப்பது, படங்களை காட்சிப்படுத்துவது, தனித்துவமாக உருவ காட்சிப்படுத்துவது போன்ற பல வேலைகள் வீட்டில் இருந்தபடி செய்து கொடுக்கலாம். மேலும், இந்த வேலையில் தனது திறமையை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.நிறுவனத்திற்கு உங்கள் வேலை பிடித்திருந்தால் மேலும் பல வாய்ப்புகள் வந்து சேரும். இந்த வேலை சுவாரசியமான வேலை என்பதால் இளைஞர்கள் பலர்  இவ்வேலையிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இந்த வேலைக்கு போதிய பயிற்சி பெற்றிந்தால் போதுமானது. சிறு நிறுவனம் முதல் பெரு நிறுவனத்திடமிருந்து சுலபமாக வேலையை பெற்றிட முடியும்.  

 • மொழிபெயர்ப்பாளர்

ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழியில் புலமை பெற்றிருந்தால் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றலாம். புலமை என்றெடுத்தால் அந்நபர் ஏதேனும் இரண்டு மொழிகளில் எழுத, படிக்க, பேசுவதில் எந்தவொரு பிழையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து போகவில்லை. அவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது. இப்படி இருக்க நிறுவனங்கள் ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகங்கள் பலர் பயனடைய அவரவர் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடுகிறது. இதற்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், நிறுவனங்கள் தவிர்த்து தனி நபர்கள் தேவையும் இதில் அதிகமாக உள்ளது. கல்வி புத்தகங்கள் கூட மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. கடினமான சொற்கள் பிறர் புரியும் படியும் மொழிப்பெயர்ப்பு செய்யப்படுகிறது. இவ்வேலையில் ஒருவர் வேலை செய்துகொண்டே புதியவற்றை கற்றுக்கொள்ள முடியும்.  

 • வலை டெவலப்பர்

வலைத்தளங்களை வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்றபடி வடிவமைத்து கொடுக்கிறார்கள் வலை டெவலப்பர்கள். வீட்டில் இருந்தபடி வேலைபார்ப்போர் எண்ணிக்கையில் வலை டெவலப்பர் அதிகளவில் உள்ளார்கள். மேலும் இவ்வேலைக்கான தேவை அதிகளவில் உள்ளது.  நிறுவனங்களுக்காக கவர்ச்சியான மற்றும் எளிதாக வலைத்தளங்களை வடிவமைத்து கொடுக்கிறார்கள். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் விவரங்கள் மற்றும் சேவைகளை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கிறது. ஒரு வலை டெவெலப்பராக 

CSS / HTML பற்றிய சிறந்த அறிவை பெற்றிருக்க வேண்டும். கோடிங் என்று கூறப்படும் குறியீட்டிலும், 

 ஜாவாஸ்கிரிப்ட், எஸ்சிஓ மற்றும் ஃபோட்டோஷாப் ஆகியவற்றின் அடிப்படைகளை கற்றிருக்க வேண்டும்.

 • மனிதவள-தேர்வாளர்

நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மனிதவள தேர்வாளரிடம் கொடுக்கப்படுகிறது. பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ இவ்வேலையில் வீட்டில் இருந்தே செய்திடலாம். பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை தொலைத்தொடர்பு வழியாக நேர்காணல் செய்து தேர்வு செய்கிறார்கள். இதற்கு சிறந்த தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் இந்தியாவின் சிறந்த 5 நிறுவனங்கள் :

 • இன்போசிஸ் 
 • ஐபிஎம் இந்தியா
 • அசேன்ஜ்ர் 
 • டெல் இந்தியா 
 • யாஹூ இந்தியா 

வீட்டில் இருந்தபடியே பணிபுரிவதற்கான 5 முக்கிய குறிப்புகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள இப்பதிவில் உள்நுழையுங்கள்.