வேலைவாய்ப்பு பின்னணி சோதனையில் பிளாக்செயின் எவ்வித மாற்றத்தை நிகழ்த்தக்கூடும்

 

பிளாக்செயின்

பிளாக்செயின் (Blockchain) இன்றைய தொழில்நுட்ப உலகத்தை தனக்கு சொந்தமாக்கி கொள்ள அனைத்து துறைகளிலும் வளம்பெற்று வலம் வருகிறது. ஆரம்பத்தில் இதன்  தொழில்நுட்பம் (Technology) அநேக மக்களைக் குழப்பியது மற்றும் செயல்பாட்டின் மீது நம்பிக்கையற்று இருந்து வந்தது. தொழில்நுட்ப துறையில் சேராத பலருக்கும் பிளாக்செயின் பற்றி எளிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிட்காயின் (Bitcoin) வருகைக்கு பின் அதிகரித்தது. புதிய  தொழில்நுட்பங்கள் அநேகரால் ஏற்று கொள்ளப்பட வேண்டுமென்றால், சந்தையில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வாக அமைய பெற்றிருக்க வேண்டும். அந்த நோக்கில் வெளிவந்ததுதான் பிளாக்செயின்.

பிளாக்செயின்

உலகில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தற்பொழுது இந்த பிளாக்செயின் உதவியின் மூலம் ஆட்களை பணியமர்த்தும் செயல்முறையை எளிதாக்கி உள்ளார்கள். அதையும் தாண்டி பிளாக்செயின் பயன்படுத்தி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பின்னணி சோதனையை ( Employment Background Check) எவ்வாறு கையாளுகிறார்கள் என்றும்;  இதன் பயன் குறித்த தகவல்களையும் பார்ப்போம்.

பிளாக்செயின்

பிளாக்செயின் தொழில்நுட்பம் 2008 ஆம் ஆண்டு  Satoshi Nakamoto என்ற பெயரை கொண்ட அடையாளம் தெரியாத நபரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது மாற்றமுடியாத Ledger -களின் சங்கிலிகளை உள்ளடக்கிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இவை அடிப்படையில் Bitcoin போன்ற Cryptocurrency யை நிர்வகிக்க பயன்படுத்தப்பட்டது. பிளாக்செயின் தொடர்ச்சியாக பதிவுகளை சேகரித்து வைப்பதில் வளர்ந்துள்ளது. அதனை Blocks என்று அழைக்கிறார்கள். அவை குறியாக்கவியலைப் (Cryptography) பயன்படுத்தி இணைக்கப்பட்டு பாதுகாக்கின்றன.

தகவல்களைச் சேகரித்து மிகவும் பாதுகாப்பாக வைப்பதில் பிளாக்செயின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த நவீன காலத்திலும், பணியமர்த்தும் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை சேர்ப்பதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றன. அதில் குறிப்பாக சொல்ல வேண்டியதாவது பணிக்கு விண்ணப்பிக்கும் தற்குறிப்பில் (Resume) தகவல்கள் பெரும்பாலும் போலியானதாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்குறிப்பு தகவல்களை அடிப்படையாக வைத்துதான் நிறுவனங்கள் ஆட்களை பணியமர்த்துகின்றன. ஆனால், அதில் குறிப்பிடப்படும் தகுதிகளை உடையவர்கள் வெகு குறைவாக உள்ளனர்.   இதனால், அதிகம் பாதிக்கப்படுவோர்: பணியமர்த்தும் மேலாளர்கள் (Hiring Managers) மற்றும் தேர்வாளர்கள் (recruiters). அதனால், மிகைப்படுத்தும் தகவல்களை நீக்கவும், போலியான தகவல்களைக் கண்டறியவும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை தேர்வு செய்கின்றனர். இவ்விவரங்களை சரியாக கையாளாத பட்சத்தில் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பணியமர்த்தலின் சிக்கல்கள்

முதலாளியானவர் தனது நிறுவனத்திற்காக ஆட்களை பணியமர்த்தும் போது பாதுகாப்பு என்று வரும்போது அதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவார்கள். அது தனிநபர் பாதுகாப்பாகவோ அல்லது நிறுவன உடைமை சார்ந்த பாதுகாப்பாகவோ இருக்கலாம். முன் பின் தெரியாத நபரின் விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தங்கள் நிறுவனத்திற்குள் ஆட்களை சேர்த்து கொள்வது என்பது எப்பொழுதும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கும். அதுவே முழுமையான மற்றும் உண்மையான தகவல்கள் தன் வசம் வைத்திருந்தால் அவ்வித பய உணர்வை அடைய தேவையில்லை.

உதாரணத்திற்கு, ஒரு நகை கடை உரிமையாளர் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது அசல் நகல்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்று கொண்டு அதன்பின்பு சிபாரிசு செய்யும் நபரிடம் ஒழுங்கு நடவடிக்கை பற்றி கேட்டு அறிந்து கொள்வார்கள். இத்துடன் முடிந்துவிடாமல் பல முக்கிய தாள்களில் கையொப்பமும் பெற்றுக் கொள்வார்கள். இது போன்ற நிறுவனத்திற்கு ஏற்றது போல பணியமர்த்தும் செயல்முறை நீண்டதாகவும், அதிக நேரம் மற்றும் பணம் விரயம் செய்யப்படக் கூடியதாகவும் இருக்கிறது. இதுவரை கூறப்பட்ட செயல்முறைகளை நிறுவனங்கள் மேற்கொண்டாலும், பாதுகாப்பு என்பது நிலையற்றதாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் அநேக விண்ணப்பதாரர்கள் போலியான முகவரி, கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்தை ஒப்படைகிறார்கள். பணி அமர்த்துபவர்கள் நேர்காணல் செய்து பணிக்கு ஆட்களை எடுத்த பிறகு ஆய்வு செய்து பின்பு பணியை விட்டு நீக்குகிறார்கள். இதுபோன்ற நிலையற்ற செயல்முறை நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

பிளாக்செயின்

தொழில் நுட்ப நிறுவனங்களை எடுத்துக்கொண்டாலும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை (Folders) வைத்திருப்பார்கள். அவை தவறான நபரிடம் போகும் பட்சத்தில் நிறுவன தகவல்கள் சுலபமாக திருடப்பட வாய்ப்புள்ளது. இது போன்ற காரணங்களால் வேலைக்கு ஆட்களை எடுப்பது என்பது சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆனால், எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஒன்று உண்டு. அந்த தீர்வாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் பிளாக்செயின். இவை வேலைவாய்ப்பில் மிகப் பெரிய மாற்றத்தை நிகழ்த்த உள்ளது.  புதியதாக பிளாக்செயின் பற்றிய விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இவை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

தொழில் நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிளாக்செயின் பற்றிய எளிமையான விவரங்கள் 

பிளாக்செயின்

பிளாக்செயினில் எவ்விதமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன ?

மேற்கண்ட வரைபடம் பிளாக்செயின் பற்றிய புரிதலை சற்று தெளிவாக்கும் என நம்புகிறேன். இவை சேகரிக்கும் தகவல்கள் எவை என்பதை பார்ப்போம்.

 • கல்வி மற்றும் கல்லூரி பட்டங்கள் அடங்கிய சான்றிதழ் விவரங்கள் பதிவிடப்படும்.

 • முன் பணி அனுபவம் இருப்பின் அவ்விவரங்களும் சேகரித்து வைக்கப்படும்.

 • பணியாளர்களின் தற்குறிப்பில் உள்ள மிகைப்படுத்தல்கள் அல்லது குறைபாடுகள் கண்டறியப்படும் என்று பிளாக்செயின் தொழிநுட்பத்தை கொண்டு உத்தரவாதம் அளிக்க முடியாது; என்றாலும், இது மோசடி புள்ளிகளின் சம்பவங்களை வியத்தகு முறையில் குறைக்கிறது மற்றும் பணியமர்த்துவதற்கு முன் தங்கள் பணியாளர்களின் சான்றுகளின் மிகத் துல்லியமான படத்தைப் பெற பணியமர்த்தும் முதலாளிகளுக்கு இது உதவுகிறது.

பிளாக்செயின் தரவு (Data) :

ஆய்வறிக்கை செய்து உண்மையான தகவல்களை பெற தரவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிடைக்கப்படும் தகவல்களை சரியாக பயன்படுத்தும் போது இத்தரவுகளை கொண்டு எதிர்கால இலக்கை சரியாக நிர்ணயிக்க முடியும். மேலும், வரும் காலங்களில் செயல்முறைகளில் பிழைகள் சரி செய்து, தவறுகளை கண்டறியவும் இயலும். சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தரவுகள் சுலபமாக திருடப்படவும், தொலைந்து போகவும் மற்றும் மாற்றியமைக்கவும் வாய்ப்பு உள்ளதால் தரவுகள் ஒழுங்காக கட்டமைக்கப்பட பிளாக் செயின் தேவைப்படுகிறது. அவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

பிளாக்செயின்

 • பிளாக்செயின் தரவு பொதுவுடைமையாக்கப்பட்டுள்ளது.

 • தரவை சேர்க்க வலைப்பின்னலில் அனைவரையும் அனுமதிக்கிறது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தரவைச் சேர்க்க முடியும்.

 • தேர்ந்தெடுக்கப்பட்ட சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மட்டுமே பிளாக்செயின் தரவைத் திறக்க முடியும்.

தொடக்க நிறுவனங்களில் பிளாக் செயின் ‌பயன்பாடு:

தொடக்க நிறுவனங்கள் (Startups) பிளாக் செயின் பயன்படுத்த பல காரணங்கள் உண்டு.

 • வெளிப்படைத்தன்மை உடையவை
 • பொதுவுடைமையாக்கப்பட்டவை

 • சுலபமாக எங்கிருந்தாலும் கையாளக் கூடியவை

 • பாதுகாப்பானவை

 • திறன் கொண்டவை

 • செலவு குறைவானவை

 • தனித்துவம் ‌வாய்ந்த தொழில்நுட்பம்

 • விவேகமான செயல் முறை

பிளாக்செயின் மேற்கண்ட அம்சங்களைக் கொண்டுள்ளதால் இம்முறையை தேர்வு செய்ய எளிதாகிறது. இவை எதிர் காலங்களில் பல துறைகளில் ஊடுருவும் தொழில்நுட்பமாக உருவெடுக்கும். அதற்கு முன்பு, இத்தொழில்நுட்பம் எந்தெந்த துறையில் வர வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவை, சுகாதார துறை, கல்வி, வங்கி, பாதுகாப்பு துறை மற்றும் வேலை வாய்ப்பு துறை.

குறிப்பிடப்பட்ட அனைத்து துறைகளிலும் தனிநபர் ஈடுபாடு அதிகமாக காணப்படக்கூடிய துறை ஆகும். இதில் தொடக்க நிறுவனமான மின்ட்லி வேலை வாய்ப்பு துறையில் பணியமர்த்தும் நிறுவனங்கள் சரியான ஆட்களை தேர்வு செய்யும் முறையில் உள்ள சிக்கலில் இருந்து விடுவிக்கிறது. இவர்கள்  உலகின் முதல் பிளாக்செயின் அடிப்படையிலான பணியாளர் குறிப்பு சோதனை  கொண்டு பயனாளர்கள் தேவையை பூர்த்திசெய்கிறார்கள்.