2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த வேலைகளாக திகழ்வது எது?

கடந்த 10 வருடங்களாக சொல்லப்பட்டு வந்த தலைசிறந்த வேலைகள் தற்போது நிஜமாகிவிட்டது. அந்த அளவிற்கு சொல்லப்பட்ட ஒவ்வொரு துறையும் இன்று தனித்துவமாக திகழ்கிறது. ஒருவரும் நினைத்து கூட பார்க்காத துறைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் முதலிடத்தில் வகிக்கிறது. சரியான வழிகாட்டுதலுடன் தொலைநோக்கு பார்வையுடன் தற்கால மாணவர்கள் சிந்தித்தால் கால விரயம் இன்றி படித்து முடித்து பிறகு அதிக‌ வருமானம் தரக்கூடிய வேலையில் இணைந்திடலாம்.

மின்ட்லி நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலைத்தேடுவோரின் எண்ணிக்கையை குறைக்கும் இலக்கில் சுய கற்றல் வழியே பல கட்டுரைகளை வழங்கி வருகிறது. மின்ட்லியில் sign up செய்வதன் மூலம் பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

2020 ம் ஆண்டில் தலைசிறந்த வேலைகள் பட்டியல் :

  1. Data Scientist
  2. Back-end-developer
  3. Banking Career
  4. Digital Marketing Specialist
  5. Career Counselor
  6. Cyber Security

Data Scientist:இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் அதிக Demand உள்ள வேலை என்று சொன்னால் அது Data Scientist ஆக தான் இருக்க முடியும்.

இந்தியா போன்ற மக்கள் அடர்த்தி கொண்ட நாட்டின் மீது உலக நிறுவனத்தின் பார்வை ஒரு நொடியும் அமைவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் அவர்களின் தேவையும்  தனியார் துறை நிறுவனம் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு இலாபமாக இருக்கிறது. இவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு நிரந்தர நுகர்வோராக மாற்ற வேண்டும் என்ற முதல் இலக்கிற்கு அடுத்தப்படியாக அவர்களின் தேவையை அனைத்தையும் பூர்த்தி செய்யவும் மற்றும் பிற நிறுவனத்திற்கு செல்லாத வண்ணம் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ளவும், தன்னுடைய நுகர்வோரின் விவரங்களை சேகரித்து அதன் பின்னர் அவர்கள் விரும்புவதை வழங்க முந்திக் கொண்டு அளிப்பதில் நாட்டம் காட்டுகிறது. இந்த செயல்முறை சரிவர செயல்பட ஒவ்வொரு நிறுவனமும் பல Data Scientist ஐ நிறுவன வளர்ச்சிக்காக நியமனம் செய்ய முன் வருகிறது.

Glassdoor கூற்றுப்படி, Data Scientist வேலை தான் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது. இவ்வேலையின் மீதான தேவையானது 2026 ஆம் ஆண்டிற்குள் 11.5 மில்லியன் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என தெரிவிக்கிறது.

Back-end-developer :

நம் அன்றாட வாழ்வில் கற்றல் மற்றும் தேடல் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் வருகிறது. அதிலும், இன்றைய இணைய உலகத்தில் ஒரு குறிப்பிட்ட தகவல்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தையோ அல்லது செயலியையோ அணுகுவது வழக்கமாயிற்று. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வலைதளமும், செயலியும் வளர்ச்சிக்கு மற்றும் தொடர் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எந்தவொரு வலைதளமும் செயலியும் தானாக உருவாகிவிடாது. அதை உருவாக்க மற்றும் அதை தொடர்ந்து செயல்படுத்த ஒரு நபரின் உதவி தேவைப்படுகிறது. அவர்கள் தான் Back-end-developer கள்.

Back-end-developer கள் C++, C# மற்றும் Java போன்றவற்றில் தேரினவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் Back-end-developer ஐ தன்னிடத்தில் வைத்திருப்பார்கள். இவர்களுக்கான வாய்ப்பு உலக முழுவதுமே இருப்பதால் அநேகரின் விருப்ப வேலைத் தேர்வு Back-end-developer ஆகவும் இருக்கிறது.

Banking Career :

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக செயல்படுவது வங்கிகளே! வங்கிகள் இல்லாத நகரம் இல்லை. வங்கிகள் இல்லாத இடத்தில் ஆட்களும் இருப்பதில்லை. அந்தளவிற்கு எங்கே வங்கிகள் இருக்கிறதோ அதற்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்றளவில் அதன் பயன்பாடு மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது.

வளர்ந்து வரும் மற்றும் மக்கள் அடர்த்தி கொண்ட இந்தியாவில் தனியார் துறை சார்ந்த வங்கியின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. எந்தளவிற்கு இதன் வளர்ச்சி அதிகரிக்கிறதோ அந்தளவிற்கு இத்துறையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. படித்து முடித்தவுடனே இவ்வேலையில் சேர பல வாய்ப்புகளை அரசாங்கம் மற்றும் தனியார் துறை வங்கிகள் வழங்குகின்றன.

Digital Marketing Specialist :

Offline முதல் Online வரை அனைத்து வணிக துறைக்கும் தேவைப்படுவது Marketing. ஒரு பொருளையோ அல்லது நிறுவனத்தையோ சந்தைப்படுத்தாமல் வளர்ச்சியை காண முடியாது. அதுவும் இவை துரிதமாக செயல்படுத்த Digital Marketing Specialist ன் உதவி தேவைப்படுகிறது. இவர்கள் இன்றி எந்தவொரு நிறுவனமும் வளர்ச்சியின் பாதையிலும் மற்றும் தன் இலக்கையும் அடையாது. அந்தளவிற்கு இவர்களின் தேவை சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் Digital Marketing Specialist ன் ஆதரவு தேவைப்படுகிறது.

Digital Marketing Specialist ன்‌ முக்கிய குறிக்கோள் நிறுவன பொருட்களுக்கு தனி அங்கிகாரம் கிடைக்க செய்வது மற்றும் Brand பொருட்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது.

Digital Marketing Specialist இடம் எதிர்பார்க்கப்படும் திறமைகள் :

  • Content creation & curation
  • Mobile, social
  • SEO / SEM
  • Lead generation

இந்த அனைத்து திறமைகளும் இவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

Career Counselor :


எந்த துறையை தேர்ந்தெடுத்து எந்த கல்லூரியில் இணைவது என்ற கேள்விகள் பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களுக்கும் எழுவதுண்டு. அந்தளவிற்கு கேள்வி படாத ஏராளமான துறைகள் இன்றைய கல்வி துறையில் இணைந்து வருகிறது. இவை அத்தனையும் படிக்க சுவராஸ்யத்தை கொடுப்பதோடு அதிக வேலை வாய்ப்பையும் பெற்று தருகிறது.

முன்பெல்லாம் உடல் நிலை சரியில்லை யென்றால் உடலில் ஏற்படும் அத்தனை பிரச்சனைக்கும் ஒரே மருத்துவரை மாத்திரம் அணுகுவோம். தற்பொழுது அப்படியல்லாமல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அதற்குரிய துறையை சேர்ந்த சிறப்பு மருத்துவரை தனித்தனியாக சந்திக்க நேரிடுகிறது. இந்நேரத்தில் கவனிக்க வேண்டியது, என்னவென்றால் எத்தனை‌ வேலை வாய்ப்பு உருவாகி‌ இருக்கிறது என்பது தான்.‌ இன்றைய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில் நுட்ப வருகையால் பல துறைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் இதைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் வெகு குறைவாகவே உள்ளது.

சரியான Career ஐ தேர்ந்தெடுக்க இவர்கள் அனைவருக்கும் பரிந்துரைப்பது Career Counselor ன் உதவியை நாடுவது தான்.

Career Counselor சரியான Career யினை மாணவர்கள் தேர்வு செய்ய ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

Cyber Security :

Forbes பத்திரிகையின் படி 2020 ஆம் ஆண்டிற்குள் cyber security இன்‌ Market Growth $170 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன காலத்தின் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில் சிறு முதலீடு நிறுவனங்கள் முதல் பல ஆயிரம் கோடி முதலீடு உள்ள நிறுவனங்கள் வரை இணையத்தை மையமாக கொண்ட அனைத்து தகவல்களையும் சேகரித்து வைக்கிறது. சேகரிக்கப்படும் தகவல்களை பாதுகாப்பது இன்றைய நிறுவனங்கள் முதல் அரசாங்கம் வரை தலையாய கடமையாக இருக்கிறது.

சமீப காலங்களில் தகவல்களை திருடும் கும்பல் அதிகளவில் இருப்பதால் அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் நாட்டின் ரகசிய தகவல்களை மீட்பது சவாலாக இருக்கிறது. அதனால், தகவல்களை திருடாத வண்ணம் மிகவும் பாதுகாப்பாக வைக்கவும் மற்றும் அவற்றை புதுப்பிக்கவும் cyber security படிப்பை முடித்தவர்களுக்கு பல துறையில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. அதனால், இவ்வேலைக்கான தேவை அதிகமே!