கனடாவில் குடியேற ஐந்து முக்கிய காரணங்கள் 

கனடாவில் குடியேற ஐந்து காரணங்களை தேடிப் பெற வேண்டும் என்னும் அவசியமில்லை. உலக நாடுகளில் கைவிட்டு எண்ணிவிடும் அளவு சிறப்புமிக்க நாடுகளில் கனடாவும் ஒன்று.

கனடா நம் தாய்நாட்டினைப் போன்றே ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு என்பதால் அந்நிய நாடு என்ற எண்ணம் உங்களுக்கு வரச் செய்யாது.

கனடாவில் குடியேற நாம் எப்போதுமே தயக்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கனடா நாட்டில் நாம் எந்தவித நிபந்தனையுமின்றி எங்கும் குடியேற முடியும். அவற்றைப் பற்றி விரிவாக நாம் இப்போது பார்க்கலாம். இந்த வசதிகளுடன் மின்ட்லி உதவியுடன் கனடாவிற்கு குடிபெயர்தல் எனும் கனவினை நனவாக்கலாம்.

1. பல துறையில் பல வாய்ப்புகள்

கனடா தன் நாடு பிற நாடு என்று பாராமல் திறமையான நபர்களுக்கு ஏராளமான வாய்ப்பினை வழங்குகிறது. அத்துடன் தொழிலில் அவரவர்க்கு பொருந்துகிறவகையில், அவரவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பினையும் அளிக்கிறது.

 கனடாவில் உற்பத்தி மற்றும் இயற்கை வளங்கள் துறை அதிக அளவில் வேலை வாய்ப்பினை உருவாக்கி வழங்கிக் கொண்டே உள்ளது.

கனடாவில் குடியேறலாம் என்பதற்கான ஐந்து காரணங்கள் 

இது போன்ற துறைகளில் வேலைவாய்ப்பினை‌ அதிகரித்து, வேலைவாய்ப்பின்மையை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்பதனை கருத்தில்கொண்டு  செயல்பட்டு வருகிறது.

அரசுத் துறைகள் மட்டுமின்றி, தனியார் துறையிலும் அதிக அளவில் வேலைவாய்ப்பினை வழங்கி, மக்கள் மனதில் ஆசையைத் தூண்ட செய்கிறது.

இந்நாடு பொருளாதார வளர்ச்சியை மேன்மேலும் அதிகரிக்க திறமையான புதிய நபர்களை அடையாளம் கண்டு, பாரபட்சம் காட்டாமல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2. குடி பெயர்வது மிக எளிது : 

திறமையான நபர்களின் விண்ணப்பங்களை எவ்வித காரணமும் இல்லாமல் கனடா அங்கீகார அமைப்பு நிராகரிப்பது இல்லை. மேலும் தகுதியானவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பினை அளிக்க கனடா அரசு நம் இந்தியாவினைப் போல் தயங்குவது கிடையாது.

அவர்களின் விதிமுறையானது எளிதில் பின்பற்றக் கூடியதாக உள்ளது. மிகக் குறுகிய காலத்திற்குள் உங்களுக்கான அங்கீகாரம் வேறு எந்தநாடுகளிலும் இல்லாத அளவு கிடைக்கிறது. 

கனடாவில் அதிகமாக பேசக்கூடிய மொழி பிரெஞ்சு, இரண்டாவது இடத்தினைப் பிடித்திருப்பது ஆங்கிலம். ஆங்கிலம் ஒரு மொழியாக இருப்பதால் நாம் பயம் கொள்ளத் தேவையில்லை. ஆங்கிலம் மட்டுமே தெரிந்தால் போதும் நாம் எளிதில் குடிபெயர முடியும்.

3. குடி பெயர்பவர்களுக்கு பாதுகாப்பு:

பொதுவாக பிற நாடுகளுக்கு செல்லும்போது நமக்குள் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குடி கொண்டு இருக்கும், சாதாரண வாழ்க்கையினை நம்மால் வாழ இயலுமா? என்ற கேள்வி மனதைத் துளைக்கும், இதனை ஒரு காரணமாகக் கொண்டே பலரும் அயல் நாடுகளுக்கு செல்ல அச்சம் கொள்கின்றனர். ஆனால் அந்த பயம் நமக்கு கனடாவில் நிச்சயம் வர வாய்ப்பே கிடையாது. பாதுகாப்பற்ற தன்மைக்கு கனடா அரசு உத்திரவாதம் அளிக்கிறது.

கனடாவில் குடியேறலாம் என்பதற்கான ஐந்து காரணங்கள் 

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் கனடா 11 வது இடத்தை வகிக்கிறது. அதேபோல் இந்தியாபோன்று எந்தவிதமான அச்சுறுத்தல் கொள்கைகளுக்கும் இடம் கொடுக்காமல், வெளிநாட்டினரை உலகளவில் அதிகம் ஏற்றுக் கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்த நாடு காணப்படுகிறது. ஆதலால்  குடிபெயர் நினைப்போர் இனவெறிக்கும், இன்ன பிற அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சத் தேவையில்லை.

3. வாழ்க்கைத் தரம்:

நிச்சயம் கனடாவில் உங்கள் பொருளாதார சூழ்நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம், உங்கள் சம்பளம் நிச்சயம் நீங்கள் எதிர்பார்ப்பதைவிட கூடுதலாகவே இருக்க செய்யும்.

இங்கு தங்கியிருக்க சிறிய சமூகங்களில் உள்ள வீடுகளில் தொடங்கி, முக்கிய நகர மையங்களில் உள்ள வீடுகள் வரை வாடகை மிகக் குறைவாகவே உள்ளது.

இதனால் சராசரியான சம்பளம் வாங்கும் ஒருவரால்கூட, உயர்தர வாழ்க்கைத் தரத்தை எளிதில் அடைய வழி வகுக்கும். மேலும் பொருளாதார ரீதியாக சேமிப்பதற்கான அதிக அளவில் வாய்ப்புகள் அமையும்.

4. கனடாவில் கல்வி

வெளிநாட்டில் படிப்பது என்பது சிலர் கடினமானதாக நினைப்பர், ஆனால் அது நாம் நினைக்கும் அளவு அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது.

இங்கு சர்வதேச மாணவர்களுக்கு சலுகைகள் மற்றும் உதவித் தொகைகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கனடா பள்ளி முதல் கல்லூரி வரையில் அந்நாட்டவருக்கு இலவசக் கல்வியை, அதுவும் தரமான கல்வியையே வழங்குகிறது.

அயல் நாடுகளுக்கு படிக்க செல்லும் இந்தியர்களில் பெரும்பாலானோர் கனடாவையே தேர்ந்தெடுப்பர். காரணம் அங்கு படிப்பதற்கு கிடைக்கும் உதவித் தொகையானது அவரின் கல்வித் தேவைகளை முழுவதுமாக பூர்த்தி செய்யும் அளவிலேயே உள்ளது.

கனடாவில் குடியேறலாம் என்பதற்கான ஐந்து காரணங்கள் 

உயர்தர கல்வி முறைகளுக்கு பெயர் போன நாடுகளில் கனடாவும் ஒன்று. இதனால் கனடாவில் நிலையான, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மதிப்புமிக்க ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வியை பெற முடியும்.

எந்த ஒரு சாதாரண மனிதனாலும் எப்படிப்பட்ட உயர் கல்வியினையும் மிக எளிதில் பெற முடியும். எனவே நாம் இதனை நமக்கு கிடைத்த மிகச் சிறப்பான ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

5. மருத்துவ வசதிகள்:

உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டாலும், கனடாவில் பலரும் கண்டிராத அளவு இலவச பொது சுகாதார வசதி உள்ளது.

மேலும் இதனுடன் கூடுதலாக வயதானவர்கள், ஆதரவற்றோர், தீவிர நோய் வாய்ப்பட்டோர் என பலதரப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உயர் ரக அளவிலான மருத்துவ வசதிகளை வழங்குகிறது.

அரசாங்க மருத்துவமனை என்றால் தரமற்றது என்ற வார்த்தைக்கே இங்கு இடம் கிடையாது, கனடா அரசு உயர் தரத்திலான மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்குகிறது.

இது அந்நாட்டவருக்கு மட்டும் பொருந்துவது கிடையாது, வெளிநாடுகளில் இருந்துவரும் சர்வதேச மக்களுக்கும் இது பொருந்தும்.

இந்த வசதிகள் மட்டுமல்லாது சொந்த காரணங்களுக்காக நீங்கள் கனடாவிற்கு குடிபெயர நினைத்தாலும் கூட உங்களுக்கு வழிகாட்ட மின்ட்லி நிறுவனம் தயாராக உள்ளது.