Telemarketing வேலையில் எவ்வாறு சிறந்து விளங்குவது?

Telemarketing என்பது தொலைபேசி மூலம் சேவையை வழங்குவது மற்றும் வாடிக்கையாளரிடம் பொருட்களை விற்க முயற்சிப்பது.

ஆரம்ப காலத்தில், ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல நேரடியாக மக்களை சந்தித்து நிறுவன பொருட்களை பற்றி எடுத்துக் கூறி வந்தார்கள். இதன் மூலம் ஒரு சில வாடிக்கையாளர்கள் சொந்தமாக்கி கொண்டாலும், அது சற்று கடினமான செயல்முறையாகவே இருந்தது. மேலும், அவை நிறுவன வளர்ச்சிக்கு நீண்ட காலம் எடுத்து வந்தது. காலப்போக்கில், நவீன வளர்ச்சியின் பயனாக தொலைபேசி அறிமுகமானது. மேலும், அவை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு இடமும் தொலைபேசி அடிப்படை தேவையாக அனைவரிடமும் சென்றடைந்தது. இதை பயன்படுத்தி நிறுவனங்களும் தங்கள் வியாபார யுக்தியை பரப்பினார்கள். அதில் உருவானது தான் Telemarketing. நிறுவனங்கள் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தி வந்தார்கள். இவை நேரடியாக மக்களிடம் சென்று சொல்வதை விட வெகு சுலபமாக காணப்பட்டது. இன்றைய பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு Telemarketers ன் பங்கு முக்கியமானது. இதை சரியாக பயன்படுத்தும் ஒவ்வொரு வரும் எதிர்பார்க்கும் வளர்ச்சியை பார்க்க முடியும். அதுவும் இந்தியா போன்ற மக்கள் அடர்த்தி கொண்ட நாட்டில் வெற்றி பெறுவது என்பது திறமையுள்ள ஒவ்வொருவருக்கும் எளிதாகும். ஆகவே, நாம் எந்த வேலையை செய்ய தீர்மானித்தாலும் திறமை என்னும் கோல் துனையாக இருந்தால் சாதனை எட்டும் தொலைவு தான். திறமை இல்லையென்று நினைப்பவர்கள் தேடி அதைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு நமக்கு சரியான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

மின்ட்லி, பல மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பும் மொழியில் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் வேலை குறித்து வழிகாட்டி வருகிறது. இதன் மூலம், செய்யும் வேலையில் உள்ள அச்சம் நீங்குகிறது. வழிகாட்டுதல் இல்லாமல் இன்று அநேகர் செய்வதறியாது திகைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் மின்ட்லி நிறுவனம் Sales & Marketing பற்றி ஆலோசனையை பிறர் பயனடையும் வகையில் வழங்கி வருகிறார்கள்.

பணி கடமை :
திறமையுள்ள எந்த நபராக இருந்தாலும் அனைத்து விவரங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது என்பது கடினமானதாகும். அதிலும், Telemarketing துறையில் நிறுவன உற்பத்தி பொருட்கள் பற்றின விவரங்கள் அனைத்தும் கண் முன்னே வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அப்பொழுது தான் வாடிக்கையாளர் ஒழுங்காக எவ்வித தடுமாற்றமின்றி சேவையை வழங்க முடியும். அதனால், Telemarketers க்கு உதவியாக

நிறுவன தயாரிப்புகள் அல்லது சேவைகளை விவரிக்கும் ஸ்கிரிப்ட்கள் கொடுக்கப்படுகிறது. அதை கொண்டு இவர்கள் தயாரிப்பு அல்லது சேவையை வாடிக்கையாளர் வாங்குவதற்கு ஏதுவான விற்பனை பேச்சை வழங்குகிறார்கள். இவர்களை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு

தற்போதைய அல்லது வருங்கால விளம்பர விளக்கக்காட்சிகளை வழங்கவும் செய்கிறார்கள்.

பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விற்பனையை கோரவும் அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடைகளை கோரவும் வணிக நபர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதலும் நடைபெறுகிறது. தயாரிப்புகள் அல்லது சேவைகளை மேம்படுத்த தற்போதைய அல்லது சாத்தியமான வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளுதல் முக்கிய பகுதியாக இருக்கிறது.
தயாரிப்புகள் அல்லது சேவைகள் மற்றும் விலைகளை விளக்கி, வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். தொழில்நுட்ப தயாரிப்பு அல்லது சேவை தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு விளக்குகிறார்கள்.
பெயர், முகவரி மற்றும் கட்டண முறை போன்ற வாடிக்கையாளர் தகவல்களைப் பெற்று, கணினிகளில் ஆர்டர்களை உள்ளிடு செய்வது முக்கிய பணியாகும்.
வாடிக்கையாளர் கணக்குகளின் பதிவுகளை பராமரித்தல் மற்றும் தொடர்பு பெயர்களின் பெயர்கள், முகவரிகள், கொள்முதல் போன்றவற்றை பதிவு செய்தல் மற்றும் வாடிக்கையாளரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை பெறுவது முக்கிய கடமையாகும்.

நிரந்தர வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முதலாவது சேவையை தாமதமின்றி துரிதமாக வழங்குதல்

குறிப்பிட்ட நபர்களின் தேவைகள் மற்றும் நலன்களை சிறப்பாக கவனிக்க விற்பனை ஸ்கிரிப்ட்களை சரிசெய்து வடிவமைத்தல்.

விற்பனை விளக்கக்காட்சிகள் அல்லது பிற பொருட்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குங்கள்.

விளம்பரங்கள் மூலம் கோரப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தல்.,

வாடிக்கையாளர்களிடமிருந்து கடிதப் பரிமாற்றங்களுக்கு பதிலளிக்க அல்லது ஆரம்ப விற்பனை தொடர்புகளைப் பின்தொடர தொலைபேசி அல்லது கடிதங்களை எழுதுதல்.,

விற்பனை பிரதிநிதிகளுக்கு வருங்கால வாடிக்கையாளர்களை சந்திக்க அல்லது வாடிக்கையாளர்கள் விற்பனை விளக்கக்காட்சிகளில் கலந்து கொள்ள நியமனங்களை திட்டமிட வேண்டியது அவசியமாகும். மேலும், இவர்கள் வருங்கால வாடிக்கையாளர்களுடன் சந்திப்புகளைத் திட்டமிட வேண்டும்.

சந்தை நிலைமைகள் அல்லது போக்குகளைக் கண்காணித்து ஆய்வை மேற்கொள்ளுதல் ஆகிய அனைத்தும் Telemarketing துறையில் உள்ளவரின் கடமைகள் ஆகும்.

தயார்படுத்திக் கொள்ளுதல் :
நாம் எந்த வேலையில் இருந்தாலும் அதற்கு தயார்ப்படுத்திக் கொள்ளுதலும், தகுதிப் படுத்திக் கொள்ளுதலும் நம்மிடம் தான் உள்ளது. Telemarketing துறையில் வெற்றி பெற ஒரு சில விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். முதலில், இத்துறையில் நுழைய வேண்டும் என்றால் பேச்சு திறமை இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு தங்களுக்கு தெரிந்த நபர்களை தவிர பிற நபர்களிடம் பேசுவது சற்று கடினமாக இருக்கும். வேறு சிலருக்கு பிறர் கேள்வி கேட்டால் சாமர்த்தியமாக பேச வராது. இதுவே நல்லா பேசும் நபராக இருந்தாலும் தன்னுடை குரலை எங்கு உயர்த்தி மற்றும் தாழ்த்தி பேச வேண்டும் என்று உணராமல் இருப்பார்கள். இது போல பல சொல்லி கொண்டே போக முடியும்.

நாம் முன்பின்பு அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவது சுலபம் இல்லையென்றாலும் நண்பரின் நண்பரை அழைத்து பேசலாம் மற்றும் உறவினர்களிடம் தொடர்பு கொண்டு பேசலாம்‌. இப்படி நாம் தான் சூழ்நிலையை உருவாக்கி கொண்டு பேச முயற்சிக்கும் வேண்டும். இந்த செயல்முறை சரிவர வில்லை என்றால் ஆடியோ பதிவு செய்து பேசி பழகலாம். இதன் மூலம் தன் பேச்சில் ஏதேனும் தடுமாற்றம் ஏற்படுகிறதா என்று சுய மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.

நேர்மறையாக பேசுதல் :
வாடிக்கையாளர் ஏதேனும் பிரச்சினையை சந்தித்தால் அவர்களை சமாதானப்படுத்தி நிறுவனத்தை நம்பும் படி நேர்மறையான விளக்கங்கள் எடுத்து வைக்க வேண்டும். முடிந்தவரை முடியாது என்ற வார்த்தையை தவீர்த்து என்ன செய்ய முடியுமா சாத்திய கூறானதை முன்னிருந்த வேண்டும். இப்படி செய்தால் நிறுவனத்தின் மீது நம்பிக்கை அதிகரிப்பதோடு காத்திருக்கவும் செய்வார்கள்.

நட்புடன் உரையாடுதல் :
Telemarketing பொருத்தவரை வாடிக்கையாளரிடம் நட்புடன் அணுகுவது முதல் வெற்றியை கொடுக்கும். மேலும் பேச வாய்ப்பும் கிடைக்கும். சந்தைப்படுத்துபவர் பேசுவது போல் பேச முயற்ச்சிதல் சுலபமாக தொடர்பு துண்டிக்கப்படும்‌‌. மேலும் மென்மையான குரலில் பதில் அளிக்கவும் மற்றும் நிதானமாக அவர்கள் தேவைகளை கேட்கவும் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் தன் சொந்த பிரச்சினை நினைவில் இருக்கும் போது வாடிக்கையாளரிடம் பொறுமை இழக்க நேரிடும். இது போன்ற நேரங்களில்‌ சற்று இடைவெளி எடுத்துக் கொண்டு பணியை‌ தொடருவது நல்லது. ஏனெனில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நிறுவன சொத்தாகும். ஏதேனும் தவறு நேரிட்டால் அவர்கள்‌ மூலம் எளிதாக தவறான எண்ணம் பரவி விடும். அதனால் நட்புடன் அணுகுவது சிறந்தது. இதை இத்துறையில் உள்ளவர்கள் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நிதானமாக இருக்க வேண்டும் :
காலையில் வந்தவுடனே அதிக Sales எடுக்க வேண்டும் என்று கருதி, விடாமல் phone மேல் phone செய்து ஓட கூடாது. முதலில் அதிக இல்லை என்ற பதிலே வரும் என்பதில் பழகி கொள்ள வேண்டும். அதனால் சோர்ந்து விடுவதில்லை கூடாது. ஒரு சில வாடிக்கையாளர்கள் கடுமையாக சாடுவார்கள் அப்படி பட்டவர்களை சரியாக கையாளுவதற்கு முன்பு மன ரீதியாக பழகி கொள்ள வேண்டும். ஏனெனில் Sales and Marketing என்பது சாதாரண விஷயம் அல்ல அதே நேரத்தில் கடினமானதும் இல்லை.

திட்டமிடுதல் :
வாடிக்கையாளர்களுக்கு எந்த நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் ஏற்கனவே தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யவில்லை என்றால் அதே நபருக்கு திரும்ப அழைத்து வெறுப்பை பெற நேரிடும். அதனால் சரியாக திட்டமிட்டு பின்னர் வாடிக்கையாளரை அழைப்பது உகந்தது.

தெரிந்து வைத்துக் கொள்ளுதல் :
Telemarketers இதுவரை சொல்லப்பட்ட அனைத்து குறிப்புகளை விட முக்கியமாக மனதில் வைக்க வேண்டியவை ஒன்று உள்ளது. அவை தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு, திட்டம், பொருட்களின் விலை மற்றும் விவரம், சலுகை, நிபந்தனைகள் போன்ற அனைத்தையும் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த விவரங்கள் தங்கள் கண்முன் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாக விளக்கம் அளிக்க முடியும்.

இந்த கட்டுரை மூலம் நீங்கள் பயனடைந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்