கல்லூரியில் படிக்கும்போது வரும் நிறுவனங்களின் நேர்காணல் வாய்ப்பில்  பணி கிடைக்கவில்லையா ! கவலைப்படாதீர்கள். இங்கே நான் வேலைகளை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சிறந்த குறிப்புகள் கொடுத்திருக்கிறேன்! இன்றைய காலகட்டத்தில் வேலையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல, ஏனென்றால் பல இளம் பட்டதாரி மாணவர்கள் இன்று வேலையில்லாதவர்கள். இந்தியாவில் எங்கு வேலை இருந்தாலும் நம்மால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் (உண்மையில், உலகில் எங்கு வேலை வாய்ப்புகள் இருந்தாலும் யாரும் காணலாம்).

இந்தியாவில் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வேலையைக் கண்டுபிடிக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆன்லைன் போர்ட்டல்கள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நீங்கள் வேலைகளைப் பெறலாம்.

 

வேலை தேடுவது எப்படி:

வேலை தேடலில் முக்கியமானது சிறந்த வேலை தேடல் தளங்களில் வேலை தேடுவது ஆகும். இது இந்தியாவிலயே சிறந்த பணிகளைக் கண்டுபிடிக்க உங்களுக்கு நிறைய உதவும்.

 இந்தியாவில் பல வேலைகள் காத்துக்கிடக்கின்றன அனுபவம் இல்லாதவர் மற்றும் அனுபவம் வாய்ந்தவர் என இருபிரிவினருக்கும். நீங்கள் புதிதாக வேலையைத் தேடும் ஒருவரா, கவலையே வேண்டாம். நீங்கள் வேலையைக் கற்றுக்கொள்ளலாம் மற்றும் அனுபவம் பெற்றவராக அடுத்தக் கட்டத்திற்குச் சென்று மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பைப் பெறலாம்.

உங்கள் சுயவிவரம் மற்றும் இடத்திற்கு தொடர்பாக வேலை தேடச் சிறந்த வழி வேலை தேடல் தளம். ஒரு சிறந்த வேலை தேடல் தளத்தில் எந்த வேலை சுயவிவரத்திற்கு ஏற்பவும் நீங்கள் அனைத்து வேலைகளையும் கண்டறியலாம்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள வேலைவாய்ப்பினைக் கண்டறிவதற்கு நிறைய வழிகள் உள்ளன. இதில் சில பின்வருமாறு:

 

  1. வேலைதேடும் ஒரு நபராக விண்ணப்பிக்க வேண்டும். வணிகப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை கண்டுபிடித்து உங்கள் ரெஷுயூமை பதிவிட வேண்டும்.
  2. நிறுவனத்தின் வலைத்தளங்கள், வேலைவாய்ப்பு இணையதளங்கள், வேலைவாய்ப்பு மன்றங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் / குழுக்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகளை ஆன்லைனில் பார்க்கவும்.

 

  1. நீங்கள் தேர்வு செய்யும் விருப்பத்திற்கு மட்டும்  உங்கள் ரெஷ்யும் பொருந்தாமல், ஒரு நேர்காணலுக்கு அனைத்து வகையிலும் பொருந்தும் வகையில் தயார்படுத்தி நன்கு தயாரிக்கப்பட வேண்டும்.
  1. நீங்கள் ஆர்வமாக உள்ள நிறுவனங்களில் உங்களுக்குத் தெரிந்தவர்கள்   பணியாற்றினால் பரிந்துரைகளைக் கேளுங்கள்.
  1. தொழில் மற்றும் சம்பள ஆராய்ச்சி தளமான PayScale Career News வலைப்பதிவில் ரெஷ்யூம் சிறப்பாக தயாரிப்பது எப்படி ?  மற்றும் நேர்காணலில் கவரும் வகையில் பதில் அளிப்பது மற்றும் தெரியாத பதிலுக்கு பதில் சொல்லும் முறை பற்றிய குறிப்புகள் உட்பட வேலை தேடுவதற்கான அனைத்துக் குறிப்புகள் இருக்கும். அவற்றைக் கொஞ்சம் கற்றுக்கொண்டால் கிடைத்த வாய்ப்பினை நழுவ விடாமல் இருப்பதற்கான ஒரு உத்தியாக இருக்கும்.

 

வேலை தேடும்போது கருத வேண்டியது:

எல்லோரும் சொல்வது போல கல்லூரியில் வேலைவாய்ப்பு பெறுவது நல்ல மற்றும் எளிய வழியில் வேலை பெற மிகச் சிறந்த தீர்வு என்று ஆலோசனை கூறுகிறேன். உங்கள் கல்வி முடிந்த சில தினங்களிலிருந்தே வேலை தேடுவது சிறப்பானதாக இருக்கும்,  இன்றைய காலகட்டத்தில் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் இருப்பதில்லை.

அதனால் வெளியேறிய சில நாட்களில் வேலை தேடுவது உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத்தரும். நிறைய வேலைவாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகள் இந்தியாவில் கிடைக்கின்றன. முதலாவதாக வேலை பெறும்போது சம்பளம் மற்றும் பதவியைப் பற்றி நினைத்து வாய்ப்பினை நழுவ விடக்கூடாது. கிடைத்த வேலையில் நன்கு கற்றுக்கொண்டு சிறந்த அனுபவத்தை அந்தத்துறையில் பெற வேண்டும்.

2019 ஆம் ஆண்டு இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி?

வேலையை விரைவாகத் தேடுவது மற்ற அனைத்தினைக் காட்டிலும் மிக மிக முக்கியமானது என்பதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் படிப்பை முடித்து அதிக காலங்கள் ஆகியும் வேலை பெறவில்லை என்றால் உங்களுடைய போட்டியாளர்கள் அதிகமாகிவிடுவர் என்பதை மறந்துவிடாதீர்கள், ஆம் உங்களுடைய ஜூனியர்ஸ் உங்களுக்கு போட்டியாளராக வந்துவிடுவர். இது உங்களுக்கு வாய்ப்பினைக் குறைப்பதாக அமையும். ஏனெனில் நிறுவனங்கள் அப்போது படிப்பை முடித்தவர்க்கே முதலிடம் கொடுப்பர், இதனால் உங்கள் வாய்ப்பு மிக எளிதில் பறி போகும்.

 

 

வேலைவாய்ப்புக்கான முக்கிய படிகள்:

 

ஒரு பொருத்தமான வேலையைக் கண்டுபிடிப்பது கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால் சிறந்த தயாரிப்புடன், நீங்கள் ஒரு நல்ல வேலையை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். உங்களுக்குப் பொருத்தமான வேலையைக் கண்டுபிடிக்க கீழ்க்கண்ட படி செயல்முறையைப் பின்பற்றவும்.

 

• உங்கள் விண்ணப்பத்தை சிறப்பாக தயார் செய்யுங்கள்

• தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

• முன்னாள் மாணவர்களுடன் இணைப்பில் இருங்கள்

• வேலைவாய்ப்பு ரீதியான நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள்

• வேலைவாய்ப்பு வாரியங்களை அவ்வப்போது பார்வையிடுங்கள்

2019 ஆம் ஆண்டு இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி?

 

நேர்காணலுக்கு தயாராகும்போது நினைவில் கொள்ள வேண்டியது:

 

நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மற்ற திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக மின்ட்லி எனப்படும் இத்தளத்தில் பல்வேறு வகையான வழிகாட்டல்கள் கொடுக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று திறன் அடிப்படையில் வேலைகளை பல வகைகளாகப் பிரித்து பயனர்களுக்கு எளிதில் கொடுப்பது.

 

  1. ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாற்றல் திறன் - Good Communication Skill
  2. தலைமை தாங்குதல் திறன் - Leadership Quality
  3. எளிதில் கற்கும் திறன் - Quick Learning
  4. புதியதை கற்க ஆர்வம் காட்டுதல் - Interest to Learn new things
  5. தொழில்முறைத்திறன் - Technical Skills

 

நீங்கள் முதலாவதாக ஒரு நிறுவனத்தின் வேலைக்கு செல்வதால் அதிக அளவு தொழில் ரீதியான கேள்விகள் கேட்க மாட்டார்கள், அதனால் நீங்கள் படித்ததிலிருந்து அடிப்படைக் கேள்விகளை மட்டுமே கேட்பர். நீங்கள் புரிந்து படித்திருந்தால் இதில் நீங்கள் பாஸ்.

ஆங்கிலத்தில் மிகச்சரளமாக பேச வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள், நீங்கள் சொல்ல வந்ததை மற்றோருக்கு புரியும் வகையாக இருக்கவேண்டும் மற்றும் அவர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் அளவு தெரிந்து இருத்தல் அவசியம்.

புதிய விஷயங்களில் அப்டேட் செய்தவராக இருந்தால் உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம். பயந்து பயந்து பதில் சொல்வது வாய்ப்பினை தட்டிப்பறித்துவிடும். தெரியாத கேள்வியாக இருந்தாலும் தைரியமாக பதில் சொல்வது நல்லது. பெரும்பாலும் கேள்விக்கான பதிலை விட அவர்கள் உங்கள் மன உறுதியையே பரிசோதிப்பர்.

மதிப்பெண் மட்டுமே வேலை தராது என்றாலும் மதிப்பெண் முக்கியமே இல்லை என்று எண்ணவேண்டாம் உங்கள் ரெஷ்யூமில் போட்டிருக்கும் மதிப்பெண் அவர்களுக்கு உங்கள் மேல் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கலாம். கல்லூரியில் படிக்கும் போது இருந்தே அனைத்திலும் கவனம் செலுத்தி வந்தால் படிப்பை முடித்த சில நாட்களிலேயே மிக எளிதில் வேலை பெற்றுவிடலாம்.

 

 

 

 

Language