மனிதனின் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு ஊடகமாக வேலை உள்ளது. ஒவ்வொரு மனிதனின் கௌரவப் பட்டியலில் வேலை முதலிடத்தில் இடப்பெற்று விட்டது. இத்தகைய விழிப்புணர்வு மாணவர்களிடையே மிகச்சிறப்பாக உள்ளது, ஆம் அன்றைய கால கட்டங்கள் போல் அல்லாமல் மாணவர்கள் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும்போதே வேலை வாய்ப்புக்காக நிறுவனங்களுடன் இணைப்பில் உள்ள கல்லூரியையே தேர்ந்தெடுக்கின்றனர்.

 

ஆனால் அப்படி எல்லாம் விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுத்தவற்றை, படிக்கும் காலங்களில் தேர்ந்தெடுத்த நோக்கத்தினை மறந்து விடுகின்றனர். வரவிருக்கும் நேர்காணலுக்காக சரியாக தயாராகாமல் கிடைத்த வாய்ப்பினை நழுவவிட்டு விடுகின்றனர். அப்படி நழுவிய வாய்ப்பிற்கு மாற்று ஏதும் இல்லை என்று யோசிக்கிறீர்களா. வருந்தவேண்டாம் இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள் அதுவும் நமது கனவு நகரமான சென்னையில். அதனைப்பற்றி நாம் இங்கு பார்ப்போமா.

 

சென்னை:

தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். ஒரு கோடி மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 மாநகரங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தனர், அதன்பின் இதன் வளர்ச்சி அளவிலடங்காதது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் மிக நீளமான கடற்கரைகளுள் ஒன்று.

கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படங்களின் தாயகம் சென்னை. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல தொழில்கள் சென்னையில் நடைபெறுகின்றன. இந்த நகரத்தின் பொருளாதாரம் இந்தத் தொழில்களையேச் சார்ந்தது. ஊர்தி மற்றும் ஊர்தியின் உதிரி பாகங்களின் தயாரிப்பில் நாட்டில் 35 சதவீதம் சென்னையிலேயே தயாரிக்கப்படுகிறது.

 

இந்தியாவின் விடுதலைக்குப்பிறகு 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக பிரித்தபோது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவும் மாநிலத்தின் தலைநகராகவும் ஆனது சென்னை. மதராஸ் என்ற பெயருடன் இருந்த சென்னை , 1966 ஆம் ஆண்டு பல போராட்டாங்களுக்குப் பின்னர் சென்னை எனத் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

  2019 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள நிறுவனங்களுக்கான நேர்காணல்கள்

 

சென்னையின் தொழில் நிறுவனங்கள் :

ஆசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான சென்னையில் பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்களும் உள்ளன.

சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. சென்னை தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா. சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்காசிறுசேரியில் உள்ள சிப்காட் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை மென்பொருள் உருவாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

  2019 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள நிறுவனங்களுக்கான நேர்காணல்கள்

 

மென்பொருள் மட்டும் இன்றி இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. பெரம்பூரில் இயங்கிவரும் ரயில்பெட்டித் தொழிற்சாலை  இந்திய ரயில்வேயின் ரயில் உற்பத்தி தொழிற்சாலையாகும்அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. டிவிஎஸ், அசோக் லேலண்ட், ஹூண்டாய், ஃபோர்டு, எம்.ஆர்.எஃப், பிஎம்டபிள்யூ, ரெனால்ட் நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. ஆவடியில் கனரக ஊர்தி  தொழிற்சாலை உள்ளது. இந்தியாவின் முக்கிய பீரங்கி அர்ஜூன் இங்கு தயாரிக்கப்படுகிறது.

 

நிறுவனங்களில் நேர்காணல்:

சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள நிறுவனங்கள் கல்லூரிக்கு நேரடியாகச்சென்று ஆட்களை தேர்வு செய்து தங்கள் நிறுவனங்களுக்கு அழைத்து வருகின்றனர், இங்கு மிக அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் அன்றாடம் உருவாகிய வண்ணமே உள்ளன. நிறுவனங்கள் அன்றாடம் அவர்களின் நிறுவனங்களுக்கானத் தளத்தில் காலி இடங்களை வெளியிடுகின்றனர். இதனால் நேரடியாக நிறுவனங்களுக்குச் சென்று இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம். எல்லா நாட்களிலும் இன்டர்வியூ பெரும்பாலும் நடக்கும். இன்டர்வியூ நடப்பதை நாம் இணையதளங்கள் அல்லது செய்தித்தாள்கள் வாயிலாகவோ தெரிந்து கொண்டு இன்டர்வியூவிற்கு செல்ல வேண்டும். வேலைக்கான தளங்களில் அவ்வப்போது தேடுவது என்பது சரியான தேர்வாக இருக்காது. ஆனால் நமக்காக வேலைவாய்ப்பு தளங்களில் கணக்கை ஆரம்பித்து சுயவிவர விண்ணப்பம் தயார் செய்து அதனை சிறந்த தளங்களில் பதிவேற்ற வேண்டும். இன்டர்வியூ பற்றிய விவரங்கள் மின் அஞ்சல் மூலமாகவே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்பிறகு நீங்கள் இன்டர்வியூவிற்கு தயாராகச் செல்லுங்கள். 

 

நிறுவனங்களில் நேர்காணல் நடக்கும் வேலைகள்:

 

கணக்கு நிர்வாகி, ப்ரோகிராம் டெவலப்பர் வேலைகள், கிராபிக் டிசைனர் வேலைகள், மனித வள நிர்வாகி, மனித வள ஊழியர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிர்வாகி, மென்பொருள் டெவலப்பர், அண்ட்ராய்டு டெவலப்பர், விற்பனை செயற்குழு வேலைகள், சந்தைப்படுத்தல் நிர்வாகி வேலைகள், வணிக மேம்பாட்டு நிர்வாகி வேலைகள்,

அனைத்து நிறுவனங்களுக்கான மேலாளர்கள், தகவல் உள்ளிடுவோர், இயந்திர ரீதியான பொறியாளர், நிர்வாக நிலை அதிகாரிகள், நிர்வாக நிலை ஊழியர்கள், அனைத்துத்துறை வல்லுநர், ஆசிரியர் வேலைகள், ஆலோசனை ரீதியான வேலைகள், தானியங்கி வாகன வடிவமைப்பாளர், தொழில்நுட்ப ஆலோசனை வழங்குபவர், உள்ளடக்கம் எழுதுவோர், கட்டட வடிவமைப்பாளர், வடிவமைத்தல் பொறியாளர், ஆராய்ச்சி வல்லுநர், மனிதவள நிர்வாகி, விற்பனை மற்றும் சில்லறை வணிகத்துறை வேலைகள், மேலாண்மை வேலைகள், அறிவியல் ரீதியான வேலைகள், நிர்வாகம் சம்பந்தமான அலுவலக வேலைகள், நிதி ரீதியான வேலைகள், சுகாதார அமைப்பு வேலைகள், வாடிக்கையாளர் சேவை மையம், , தகவல் தொடர்பு ரீதியான வேலைகள், வணிக செயல்பாடுகள் ரீதியான வேலைகள், உணவகம் ரீதியான வேலைகள்.

நிறுவன விற்பனை வேலைகள், வாடிக்கையாளர் சேவைகள், டெலிவரி நிர்வாகிகள், சரக்கு அனுப்புதல், தொழில்துறை சந்தைப்படுத்தல்,அலுவலக நிர்வாகிகள், பொருள் மேலாண்மை, விற்பனை நிர்வாகிகள், விற்பனை அதிகாரி போன்ற வேலைவாய்ப்புகள் சென்னையில் மிக அதிக அளவில் உள்ளன.

 

குறிப்பு:

பி.எஸ்.என்.எல், டாடா ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோஃப்ன், ஐடியா, போன்ற தகவல் தொடர்பு நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள் சென்னையில் உள்ளன. அனைத்து தொலைக்காட்சிகளின் தலைமை இடம் சென்னையில் உள்ளது. மற்றும் அனைத்து மாநில செய்தித்தாள்களின் தலைமையிடம் இங்கு உள்ளது. இது போன்று அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கும் சென்னையில் நிறுவனங்களில் அன்றாடம் நேர்காணல்கள் நடந்து வருகின்றன.

 

 

Language