கல்லூரியில் பாடப்பிரிவை தேர்ந்து எடுக்கும்போது சரியாகத்தேர்வு செய்யாமல் விட்டுவிடுகிறோம், அதன்பின் படிக்கும் காலங்களில் சரியாக எதையும் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். இப்படி அனைத்தையும் விட்டுவிடுவதைப் போலவே நாம் நமக்கு தகுந்த வேலையை சரியாக தேடாமல் விட்டுவிடுகிறோம்.

வேலை என்பதன் பொருள் சம்பளம் மட்டும் அல்ல, அது நமக்கான அடையாளம். ஆம் நம் பெயர் போல நம் இன்ஷியல் போல நம் வேலையும் இந்த வயதில் நமக்கான அடையாளம். அப்படிப்பட்ட வேலையைப் கடல் தாண்டி போய்ப்பெற வேண்டிய அவசியமில்லை. இதோ நமக்கு மிக அருகில் உள்ள ஒரு மாவட்டத்தில் நமக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் உள்ளது. அதனைப்பற்றி நாம் இங்கு பார்ப்போமா.

 

கோயம்புத்தூர் :

தமிழகத்தில் தொழில்துறையில் முன்னேற்றமடைந்த மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இது தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

இதனை தென்னிந்தியாவின் நெசவுத்தொழில் நகரம் என்பர் அல்லது தென்னிந்திய மான்செஸ்டர் என்பர். கோயமுத்தூரில் அதிகமாக கரிசல் மண் காணப்படுகிறது, இதனால் இந்தப்பகுதியில் உள்ள விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி பெரிய அளவில் உள்ளது.

விவசாயத்தில் மிக முக்கியமாக பருத்தி விளைவிக்கப்படுகிறது, பருத்தி நெசவுத்தொழிலுக்கு அடிப்படையாக உள்ளது. இப்போது நூற்றுக்கணக்கிலான ஆலைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன். இது மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை முன்னிறுத்தியது, 25000 க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான நூற்பாலைகள் மாவட்டம் முழுதும் இயங்கி வருகின்றன. மோட்டார் பம்ப் மற்றும் இயந்திர பொறியமைப்பு கருவிகள் தயாரிக்கும் ஆலைகளைக் கொண்டுள்ளது கோவை.

 

கோயம்புத்தூரின் தொழில்நிறுவனங்கள்:

 

கோயம்புத்தூரில் வேலைவாய்ப்புகளின் பெரும்பகுதி அரசாங்க, ஐ.டி மற்றும் மென்பொருள், பிபிஓ மற்றும் தொழில்நுட்ப வகைப்பாடுகளில் உள்ளது. நீங்கள் எம்.சி.எ, பி.எஸ்.சி, சி.எஸ். பொறியியல் பட்டதாரியா கோயம்புத்தூரில் உங்களுக்கான சிறந்த வேலை வாய்ப்புகள் உள்ளது இதோ அவைகள் உங்களுக்காக...

கோவையில் சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான பருத்தி நெசவு ஆலைகள் உள்ளன. இது பல ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பினைக் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையே உள்ளது. உலகளவில் அயலாக்க நகரத்தில் 17வது இடத்தில் உள்ளது. மேலும் கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் கோவை மருத்துவக்கல்லூரி அருகில் உள்ளது.

மேலும் நிறைய கனரக வாகனத் தொழிற்சாலைகள் உள்ளன. லெட்சுமி இன்டஸ்ட்ரீஸ், பிரிக்கால், எல்.ஜி. எக்யூப்மெண்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ், சக்தி இன்டஸ்ட்ரீஸ் ஆகியன தயாரிப்பு ரீதியாக தொழில் வளர்ச்சிக்கு உதவின. லார்சன் டர்போ (எல்.என்.டி) மிக அதிக அளவில் வேலைவாய்ப்பினை அளித்த தொழில்நிறுவனங்களில் ஒன்று.

மகிந்தரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்களுக்கு தானுந்து பாகங்கள் தயாரித்து கோவையிலிருந்தே அனுப்பப்படுகிறது.

பைகாரா நீர் மின் திட்டம் தொடங்கியபின் கோயமுத்தூர் தொழில்வளர்ச்சியின் உச்சநிலையை அடைந்தது. இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க கனிம வளங்கள் உள்ளன, இதிலிருந்து கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் போன்றவை கிடைக்கின்றன, இவைகள் மதுக்கரையில் இருக்கும் சிமெண்ட் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது.

ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்புகள் பெருமளவில் நடந்து வருகின்றன. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் நீரேற்றிகள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

 

கோயம்புத்தூரின் நிறுவனங்களில் நேர்காணல்:

 

சில நிறுவனங்கள் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று ஆட்களை தேர்வு செய்து தங்கள் நிறுவனங்களுக்கு அழைத்து வருகின்றனர், ஆனால் இதில் அனைவருக்கும் வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சாத்தியமற்ற ஒன்று. ஒருமுறை வாய்ப்பு தவறவிட்டால் மறுமுறை வாய்ப்புக் கிடைக்க ஒருவருட காலம் காத்திருக்க வேண்டுமா ? இல்லவே இல்லை.

நீங்கள் நேரடியாக நிறுவனங்களுக்குச் சென்று இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம். எல்லா நாட்களிலும் இன்டர்வியூ நடக்குமா என்றால் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்பதே என்னுடைய பதில். இன்டர்வியூ நடப்பதை நாம் இணையதளங்கள் (கோவையினை அடிப்படையாகக் கொண்ட வேலைகள்) அல்லது செய்தித்தாள்கள் வாயிலாகவோ தெரிந்து கொண்டு இன்டர்வியூக்கு செல்ல வேண்டும்.

  2019 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் உள்ள நிறுவனங்களுக்கான நேர்காணல்கள்

வேலைக்கான தளங்களில் அவ்வப்போது தேடுவது என்பதை விட நமக்கான சுயவிவர விண்ணப்பம் தயார் செய்து அதனை சிறந்த தளங்களில் பதிவேற்ற வேண்டும். இன்டர்வியூ பற்றிய விவரங்கள் மின் அஞ்சல் மூலமாகவே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்பிறகு நீங்கள் இன்டர்வியூக்கு தயாராகச் செல்லுங்கள்.

 

கோயம்புத்தூரின் வேலைவாய்ப்புகள்:

கணினி மற்றும் ஐ.டி வேலைவாய்ப்புகள், விற்பனை மற்றும் சில்லறை வணிகத்துறை வேலைகள், மேலாண்மை வேலைகள், அறிவியல் மற்றும் பொறியியல் ரீதியான வேலைகள், நிர்வாகம் சம்பந்தமான அலுவலக வேலைகள், உற்பத்தி மற்றும் கிடங்குகள் ரீதியான வேலைகள், கணக்கியல் மற்றும் நிதி ரீதியான வேலைகள், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகள், சுகாதார அமைப்பு வேலைகள், வாடிக்கையாளர் சேவை மையம், கலை, ஃபேஷன் மற்றும் வடிவமைப்பு ரீதியான வேலைகள், ஊடகம், தகவல் தொடர்பு ரீதியான வேலைகள், வணிக செயல்பாடுகள் ரீதியான வேலைகள், போக்குவரத்து , கல்வி, நிறுவுதல், பராமரித்தல், பழுது பார்த்தல், உணவகம் மற்றும் விருந்தோம்பல் ரீதியான வேலைகள் இவை தவிர சமூக சேவைகள் ரீதியான வேலைகள், கட்டுமானம், பொழுதுபோக்கு மற்றும் பயண ரீதியான வேலைகள், விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு, பாதுகாப்பு சேவைகள், தனிப்பட்ட கவனிப்பு மற்றும் சேவைகள், சொத்து, விலங்கு பாதுகாப்பு, சுத்தம் மற்றும் வசதிகள், சட்டரீதியான, ஆற்றல் மற்றும் சுரங்க ரீதியான வேலைகள், விளம்பரப்படுத்துதல் வேலைகள், பகுதி விற்பனை மேலாளர், வணிக வளர்ச்சி வேலைகள், வணிக கண்டுபிடிப்பு, சேனல் மேலாண்மை, சேனல் விற்பனைகள், கருத்து உள்ளடக்க எழுத்தர்கள், நிறுவன விற்பனை வேலைகள் இத்தனை பிரிவுகளில் வேலை வாய்ப்புக்கள் குவிந்து கிடக்கும் நகரம் இது.

ஆக்கப்பூர்வச் சிந்தனைகள், வாடிக்கையாளர் சேவைகள், டெலிவரி நிர்வாகிகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல்கள விற்பனைகள், களச் சேவைகள், எஃப்.எம்.சி.ஜி விற்பனைகள், சரக்கு அனுப்புதல், தொழில்துறை சந்தைப்படுத்தல், முக்கியக் கணக்கு மேலாண்மை, லாஜிஸ்டிக்ஸ் நிர்வாகிகள், சந்தைப்படுத்தல் நிர்வாகிகள், அலுவலக நிர்வாகிகள், உகப்பாக்கம் பொறியாளர், செயல்முறை தணிக்கை, செயல்முறை தானியங்கல், பொருள் மேலாண்மை, நிகழ்ச்சி மேலாண்மை, ஆர் எஃப் திட்டமிடல், சாஸ் விற்பனைகள், விற்பனை பொறியாளர்கள், விற்பனை நிர்வாகிகள், விற்பனை அதிகாரி, எஸ் ஈ ஓ நிர்வாகிகள், சேவை பொறியாளர்கள், தீர்வு வடிவமைப்பாளர் திறனார்ந்த பகுப்பாய்வு வழங்கல் சங்கிலி வல்லுநர்கள், தொழில்நுட்ப சேவைகள்,கிடங்கு செயல்பாடுகள் மொத்த வியாபாரம் போன்ற வேலைவாய்ப்புகள் கோயம்புத்தூரில் மிக அதிக அளவில் உள்ளன.

 

குறிப்பு:

இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோவின் இந்தியாவின் மூன்றாவது மற்றும் நான்காவது மிகப்பெரிய நிரலாக்க நிறுவனங்கள் கோயம்புத்தூரில் தலைமையிடமாக உள்ளன. தற்போது 5000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பணிபுரிகின்றனர். ஏபிபி, ஏர்பஸ், போஷ், கூகுள், மைக்ரோசாப்ட், மெர்சிடிஸ் பென்ஸ், நோக்கியா, ஆரக்கிள், பிலிப்ஸ், ஷெல், டொயோட்டா மற்றும் டைகோ போன்ற சில நிறுவனங்களுக்கு இது ஒரு சில புதுமையான வேலை வாழ்வாதாரங்களைக் கொண்டுள்ளது.

 

 

 

Language