வேலை என்பதே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணி என்பது படிக்காதவர் உட்பட அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கிராமத்தில் கூட சொல்வார்கள் "இன்னைக்கு நீ கஷ்டப்பட்டு படிச்சா நாளைக்கு நீ வெயில் படாம வேலை பார்க்கலாம்னு".

அதனால்தான் பெற்றோரும் எவ்வளவு அரும்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து விடுகின்றனர். அவ்வாறு கிடைத்த அந்த பொக்கிஷமான படிப்பிற்கு தகுந்த வேலையை பெற சில ஆலோசனைகள் இதோ உங்களுக்காக.

 

 

1. வேலைவாய்ப்பு இணையதளங்களைப் பயன்படுத்தி வேலை தேடுதல்:

 

நாக்குரி, ஜொப்ரபிடொ, சைன்.காம், மான்ஸ்டர் இண்டியா, மிண்ட்லி.

போன்ற தளங்கள் வேலைவாய்ப்பிற்கான மிகச்சிறந்த தளங்கள் ஆகும். இந்தத் தளங்களானது வேலை பெறுவோரும், வேலை வாய்ப்பு பெறுவோரும் சந்திக்கும் ஒரு களம் ஆகும். நீங்கள் முதல் பணியைத் தேடுபவர் என்றால்,  உங்களுக்கான சிறந்த வழி, அத்தகைய தளங்களில் ஒரு வேலையைத் தேட, முதலாவதாக நீங்கள் பதிவை பதிவு செய்து உருவாக்க வேண்டும். (உங்களுக்கு தெரியாது என்றால், அந்த வேலைவாய்ப்பு போர்ட்டல்களில் எவ்வாறு பதிவு செய்யலாம், என்று கூகுள் செய்து பாருங்கள்).

 

2. செய்தித்தாள்களின் மூலம் வேலை தேடுதல்:

ஆன்லைன் வேலைவாய்ப்பு இணையதளங்களைத் தவிர, நீங்கள் செய்தித்தாள்கள், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து,  இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற செய்தித்தாள்களில் வேலை வாய்ப்புக்களுக்குக்கென பல்வேறு பிரிவுகள் உள்ளன. சில பத்திரிகைகள் தினசரி பணியிடங்களை நிரப்புகிறது, சில பத்திரிகைகள் வாராந்தர அடிப்படையில் அச்சிடுகிறது. பெரும்பாலும் நீங்கள் அங்கு சிவில் மற்றும் இயந்திர வேலைகளைக் காணலாம்.

(குறிப்பு: போலி விளம்பரங்களும் கொடுக்கப்படுகின்றன அதனால் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது)

 

3. வேலை வாய்ப்பு முகவர் மூலம் வேலை தேடுதல்:

 

பல இந்திய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகவர் மூலம் ஊழியர்களை தங்கள் நிறுவனத்திற்குப் பணியமர்த்துகின்றன. எனவே, நீங்கள் பணியமர்த்தல் நிறுவனத்தை கண்டுபிடித்து உங்கள் பணி சுயவிவரத்தை சமர்ப்பிக்கலாம். பெரும்பாலான வேலை வாய்ப்பு முகவர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை, ஆனால் சில வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கு சில கட்டணங்கள் விதிக்கின்றன.

குறிப்பு: வேலை தேடுபவர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் பல போலி வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் உள்ளன,  அத்தகைய போலி வேலை வாய்ப்பு முகவர் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.

 

4.  பரிந்துரையின் மூலம் வேலை தேடுதல்

பரிந்துரைகளைப் பயன்படுத்தி நீங்கள் இந்தியாவில் எளிதில் ஒரு வேலையைப் பெறலாம். இன்றைய காலகாட்டங்களில் நிறுவனத்தின் முதன்முதலில் வேலைக்கு எடுக்கும்போது அவர்களின் நிறுவங்களில் பணியாற்றும் பணியாளர்களின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். எனவே, உங்களுடைய உறவினர்களையும், கல்லூரி சீனியர்களையும் தொடர்புகொண்டு அவர்களது நிறுவனத்தின் காலிப்பணியிடம் பற்றிக் கேட்கலாம். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பரிந்துரைக்கு போனஸ் கொடுக்கின்றன.

 

 உங்கள் கனவு நிறுவனத்தில் நேர்காணலுக்குச் செல்ல 10 ஆலோனைகள்

5. நிறுவனங்களின் வேலைவாய்ப்புப் பக்கங்களில் தேடுதல்

 

அனுபவம் வாய்ந்த நபர் மற்றும் அனுபவம் இல்லாத நபர் ஆகிய இருவருக்கும் வேலை கிடைக்க ஏற்ற சிறந்த வழி இதுதான். பல பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்கள் தங்கள் வேலைவாய்ப்புக்களை அவர்களின் நிறுவன வேலைவாய்ப்பு பக்கங்களில் இடுகின்றன. அத்தகைய வேலைக்கு விண்ணப்பிக்க, நீங்கள் அவர்களின் நிறுவனத்தின் வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட தொழில் மின்னஞ்சல் ஐடிக்கு நேரடியாக உங்கள் வேலை சுயவிவரத்தை அனுப்ப வேண்டும். டிசிஎஸ், சிண்டல், காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற எம்என்சி நிறுவனங்கள் இதையே பின்பற்றுகின்றன.

குறிப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகளிலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஊழியர்களை பணியமர்த்துகின்றன

 

6. வேலை தேட சமூக ஊடகத்தின் பயன்பாடு

 

சமூக ஊடகம் மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஒரு வேலையைத்தேட ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது?

# லிங்க்டுஇன் - LinkedIn (வேலை தேடுவதற்கான இணைப்பு)

 

இது ஒரு மிகவும் பிரபலமான சமூக வலைப்பின்னல் தளமாகும். நீங்கள் பல வேலைகளை இங்கு கண்டுபிடிக்க முடியும். இணைப்பில் நீங்கள் நிறுவனத்தின் சுயவிவரங்கள் மற்றும் அந்த நிறுவனத்திற்குள் பணியாற்றும் பணியாளர்களைக் காணலாம். இந்த இணைப்பில் நீங்கள் நிறுவனங்களால் வெளியிடப்படும் வேலைகளைத் தேடலாம் மற்றும் விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் முன் வேலைக்கான தளங்களில் பதிவு செய்வது போலவே இந்த இணைப்பிலும்  பதிவு செய்ய வேண்டும்.

 

#முகநூல் -  பேஸ்புக் பதிவு

இன்று ஃபேஸ்புக் மிகவும் பிரபலமான ஒன்று என்று நாம் அறிந்திருப்போம்,  நாம் வேலை தேடுவதற்கு அதைப் பயன்படுத்தலாம்! எனக்கு நல்ல நினைவு உள்ளது, என் நண்பர் ஆராய்ச்சித்துறையில் வேலை தேடினார், ஆனால் நான் ஐ.டி துறையில் பணிபுரிகிறேன், எனக்கு அந்தத்துறையில் பரிந்துரைப்பவர் எவரையும் தெரியவில்லை. எனவே, நான் வெறுமனே பேஸ்புக் பக்கத்தில் என் நண்பர் ஆராய்ச்சித்துறையில்  வேலை தேடுகிறார் என்று பதிவிட்டேன். பின்னர் பல நண்பர்கள் அந்த இடுகையில் பதிலளித்தனர் மற்றும் அவர்களின் மின்னஞ்சல் ஐடிக்கு ரெஷ்யூம் அனுப்ப சொன்னார்கள்! இந்த வழியில் நீங்களும் மிகவும் எளிதாக வேலையைக் கண்டுபிடிக்க முடியும். மேலும், ஃபேஸ்புக்கில் பல பக்கங்களும் குழுக்களும் உள்ளன, அதில் வேலைகள் மற்றும் காலியிடங்களைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

7. கல்லூரிக்கு நேரடியாக வரும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு (கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்)

பல நிறுவனங்கள் கல்லூரியிலேயே ஊழியர்களை நிறுவனங்களில் பணியமர்த்துகின்றன. எனவே, கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன், அதை நாம் கருத்தில் கொண்டு கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். கல்லூரியில் வேலை பெறுவது என்பது எளிது. எனவே கல்லூரி மாணவர் எனில் தயவுசெய்து இந்த வாய்ப்பினை தவறவிட்டு விடாதீர்கள், ஏனெனில் இங்கு போட்டியாளர்கள் குறைவு, மற்றும் நீங்கள் படித்துக்கொண்டு இருப்பவர் என்பதால் பாடங்களிலிருந்துதான் கேள்விகள் பெரும்பாலும் கேட்கப்படும்.

 

8. நிறுவனங்களுக்கு நேரடியாகச்செல்லுதல் மூலம் தேடுதல்:

நிறுவனங்களுக்கு நேரடியாகச் செல்லுதலுக்கு எந்த அழைப்புக் கடிதம் இல்லை, எந்த ரெஷ்யூம் தேர்ந்தெடுப்பு முறையும் இல்லை இது போன்று வேறு நிபந்தனைகள் எதுவும் இல்லை! கொடுக்கப்பட்ட தேதியிலும், நேரத்திலும் நீங்கள் நேரடியாக நிறுவனங்களுக்கு  செல்லலாம் மற்றும் பொருத்தமான சோதனை / நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

 

 9. பயன்பாட்டு செயலிகள் மூலம் வேலை தேடுதல்:


லிங்க் அப், கெரியர் பில்டர்.காம், ஜாப் அவேர் போன்ற செயலிகள் வேலைவாய்ப்பிற்கான மிகச்சிறந்த செயலிகள் ஆகும். இந்த செயலிகளானது வேலை பெறுவோர், வேலை வாய்ப்பு பெறுவோர் என இருதரப்பினராலும் பயன்படுத்தப்படுவது. இந்தச் செயலிகளின் பயன்படுத்தும் முறையானது ஏறக்குறைய வேலைவாய்ப்பு தளங்களை பயன்படுத்துவது போன்றது.

 

10. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலை தேடுதல்:


 முன்னொரு காலத்தில் இப்போது போல் இத்தனை வசதிகள் கிடையாது, ஒரு வேலையைத்தேட வேண்டும் என்றால் அவர்களுக்கான ஒரே வழி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தான். பெரும்பாலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அரசாங்க வேலைக்கு மட்டுமே பரிந்துரைக்கும் என்ற நிலை மாறிவிட்டது. இப்போது தனியார் நிறுவனங்களின் காலி இடங்களுக்கும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பரிந்துரைக்கின்றனர்.

 

 

வேலை எப்படி பெறுவது என்பது பற்றிய தேவையான தகவல்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது என நினைக்கிறேன், எல்லோரும் முயன்று அவர் அவர்க்கான வேலை வாய்ப்பை பெறுங்கள்.

 

Language