இந்தியாவில் ஆன்லைனில் இயங்கும் பல பகுதி நேர உள்ளடக்க எழுத்து தளங்கள் உள்ளன. இவற்றினை நீங்கள் முழு நேர வேலையாகவும் மேற்கொள்ளலாம். முதலாவதாக, ஒரு லிங்க்டுஇன்-ல் சுயவிவரத்தை உருவாக்கி, அங்கு நாம் ஏற்கனவே உள்ளடக்க எழுதி வைத்திருக்கும் சில கட்டுரைகளை நம் சுயவிவரத்துடன் லிங்க்டுஇன்-ல் இணைக்க வேண்டும்.

உங்களுக்கு என்ன மாதிரியான உள்ளடக்க எழுதுதல் வேலைகளில் ஆர்வம் உள்ளது  அல்லது எதில் நீங்கள் மிகச் சிறப்பானவர் என்பது பற்றி லிங்க்டுஇன்-ல் அப்டேட் செய்துவிடுவது நல்லது, ஏனெனில் நமக்குப் பொருத்தமான உள்ளடக்க எழுதுதல் வேலைகள் தேவைப்படும்போது கட்டாயம் நமக்கு அழைப்பு வரும்.

மீடியா பிளஸ் டெய்லி (இந்தியா) என்று அழைக்கப்படும் பேஸ்புக் குழு உள்ளது, இது  பகுதிநேர / முழுநேர உள்ளடக்கம் எழுதுதல் வேலைகளைக் கொண்ட தளம்.

இத்தகைய தளங்கள் நம்பகத் தன்மையினைக் கொண்டவை. சில காரணங்களுக்காக கன்ஸல்டன்சிஸ் நன்றாக வேலை செய்யவில்லை, ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் தினசரி விநியோகத்திற்காக ஒரு பெரிய வேலை கொடுக்கிறார்கள், ஒவ்வொரு 500 சொற்களுக்கு மிகச் சொற்பமான டாலருக்கும் குறைவாக பணம் செலுத்துகிறார்கள். அது மட்டும் அல்லாது நிறைய அளவிலான கன்ஸல்டன்சிஸ் நாம் பணம் செலுத்தியபிறகு தான் வேலை கொடுக்கிறார்கள். வேலை சரியாக நடக்கவில்லை என்றால் நாம் செலுத்திய தொகையில் கழித்துக் கொள்வர், மேலும் இது ஒரு வகையான நூதனக்கொள்ளையாக செயல்பட்டு வருகிறது.

சிறந்த உள்ளடக்கம் எழுதுவதற்கான இடங்கள்:

உங்களிடம் ஒரு நல்ல எழுத்து பழக்கம் இருந்தால், நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரங்களில் உள்ளடக்கம் எழுதி உங்கள் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியைக் கொண்டு வர முடியும். நம்மால் இயன்ற அளவு சிறிது பணம் ஈட்டவும் முடியும்.

 

பகுதிநேர உள்ளடக்கம் எழுதுவதில் பல நன்மைகள் உள்ளன, ஆம் வேலை நேரத்தை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டவராகிறீர்கள், உங்கள் முதலாளியையும் நீங்கள் தான் தேர்ந்தெடுப்பீர்கள் பெரும்பான்மையான நேரங்களில், உங்கள் சம்பளத்தையும் தேர்வு செய்யும் உரிமை கொண்டவர் தாங்களே.

கட்டுரை உள்ளடக்க வேலைகள் சிறந்த முறையில் வழங்கும் நிறைய வேலைக்கான தளங்கள் உள்ளன. அவற்றின் மிகச்சிறந்த தளங்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.

 

1. BloggingPro - பிளாக்கிங்க் ப்ரோ :

 

பிளாக்கிங்க் ப்ரோ தளமானது கட்டுரை உள்ளடகங்கள் பதிபவர்க்கான தளங்களில் ஒன்று. இந்த தளத்தில், நீங்கள் கிட்டத்தட்ட எதையும் பற்றி வலைப்பதிவு செய்யலாம். இங்கே பல முதலாளிகள் தங்களுக்கு தேவையான தலைப்புகள் ரீதியான நபர்களைத் தேடுவர்.

 

பிளாக்கிங்க் ப்ரோவில் கட்டுரை உள்ளடக்கம் மட்டுமல்லாது , அதன் பகுதி சார்ந்த கட்டுரை திருத்துதல், கட்டுரையை சரிபார்த்தல், கட்டுரை வெளியிடுதல், கட்டுரை பதிவிடுதல், போன்ற பல வகையான வேலைவாய்ப்புகள் உள்ளன. அவரவர் எதில் திறமையானவர்களோ அதற்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுத்து நாம் செய்யலாம்.

இத்தளமானது எழுத்தாளர்கள் தேவைப்படும் வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியோர்க்கு சிறந்த வலைப்பதிவாளர்களை வழங்கும் தளமாகும். நிறுவனங்கள் தங்களின் தேவையை விளம்பரப்படுத்தி, உங்களின் தேவைக்குப் பொருத்தமான வலைப்பதிவாளர்களைக் கண்டறியலாம்.

 

2. Upwork- அப்வொர்க் :

அப்வொர்க் உள்ளடக்கம் எழுதும் தளங்களில் மிகச்சிறந்த முக்கிய போட்டியாளராக மற்ற வலைப்பதிவுத் தளங்களுக்கு உள்ளது. இதுவும் ஃப்ரீலேன்ஸர் ரைட்டர் போலவே ஏறக்குறைய பகுதி நேரத்தில் உள்ளடக்கம் எழுதுபவருக்காக பெயர் பெற்றது.

கட்டுரை உள்ளடக்கம் எழுதுதல் , வலை உள்ளடக்கம் எழுதுதல், தொழில்நுட்ப ரீதியான உள்ளடக்கம் எழுதுதல், கற்பனைப் படைப்பு ரீதியாக உள்ளடக்கம் எழுதுதல், நகல் எழுதுதல், கட்டுரை திருத்துதல் அதன் எழுதுதல் சார்ந்த பல வகையான வேலைவாய்ப்புகள் உள்ளன.  அப்வொர்க் மூலம் எளிதாக ஆன்லைன் வேலைகளை அடைய முடியும். அதற்கான தனித்திறனை வளர்ந்துக் கொண்டாலே இது சாத்தியமாகும். ஊதியம் கணிசமான அளவில் இருந்தாலும், வேலைகள் தொடர்ந்து கொடுக்கும் தளமாக இருப்பதால் இது அனைவருக்கும் உகந்ததாக இருக்கும்.

இந்தியாவில் உள்ளடக்க எழுத்து தளங்கள்


3. குரு- Guru 

குரு உள்ளடக்கம் எழுதும் தளங்களில் மிகக்குறுகிய காலத்தில் தன் சாதனையை நிகழ்த்திக்காட்டி முன்னணித்தளங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  

2001 ஆம் ஆண்டு இத்தளம் துவங்கப்பட்டு, இப்போது வரை 1 மில்லியன் வேலைகளை நிறைவு செய்து, 200 மில்லியன் டாலர் சம்பளம் வரை பெற்று அதை வேலை செய்பவர்களுக்கு வழங்கியுள்ளதுஇன்று, குரு தனது தளத்தில் 1.5 மில்லியன் உள்ளடக்கம் எழுதுவோரைக் கொண்ட தளமாக உள்ளது.

வாடிக்கையாளர்கள் நமக்கு வேலை கொடுக்கும் முன் நம்மைப்பற்றி வலைதளங்களில் தேடுவர், அதாவது முந்தைய வாடிக்கையாளர் விமர்சனங்கள் அத்துடன் திறன்கள், அனுபவம், முன்பு  ஈட்டிய தொகை போன்ற அனைத்தும் இதில் அடங்கும். இத்தகைய அனைத்துப் பிரிவிலும் சிறந்த விமர்சனங்கள் பெற்ற தளமாக குருவை நாம் பார்க்கலாம்.

 

4. சிம்ளி ஹையர்டு- SimplyHired

 

 பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ பரந்த அளவிலான உள்ளடக்கம் எழுதும் வாய்ப்புகள் கொண்ட ஒரு தளம் சிம்ளி ஹையர்டு. இது மிக நேர்த்தியான தளம் வாடிக்கையாளர்கள் முதல் கட்டுரை உள்ளடக்கம் எழுதுவோர் வரை, விற்பனையாளர்களிடமிருந்து கட்டுமான தொழிலாளர்கள் வரை. விற்பனை சார்ந்த பொருட்களைப் பற்றி எழுதுதல், கட்டுரை திருத்துதல், கட்டுரையை சரிபார்த்தல், கட்டுரை பதிவிடுதல், போன்ற அனைத்து வேலைவாய்ப்புகளையும் இதன் மூலம் பெறமுடியும்.

இந்தியாவில் உள்ளடக்க எழுத்து தளங்கள்

 

5. மின்ட்லி - MINTLY

உள்ளடக்கம் எழுதுவது எளிது, இருப்பினும் பெரும்பான்மையான கட்டுரை உள்ளடக்க வேலைகள் ஆங்கிலம் சார்ந்தே இருக்கும். இதனால் உள்ளடக்கம் எழுதும் திறமை இருந்தும் மொழி தெரியாத காரணத்தால் வாய்ப்பு கிடைக்காமலே போய்விடுகிறது. மின்ட்லி தமிழில் கட்டுரை உள்ளடக்கம் எழுதுவோருக்கான மிகச்சிறந்த தளம்.

உள்ளடக்கம் எழுதுவதில் பல வகையான பட்டியல்களாகக் கொண்டுள்ளனர், இது பகுதிநேர அல்லது முழுநேர மற்றும் நுழைவு அல்லது நிர்வாக மட்டத்திலான உள்ளடக்க வேலையாக இருக்கலாம். பெரும்பான்மையோரால் நம்பகத்தன்மையில் சிறந்த தளமாக மின்ட்லி கருதப்படுகிறது.

 

குறிப்பு:

 

உள்ளடக்கம் எழுதுவதில் வெவ்வேறு பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் உள்ளன. அவரவர் திறமை மற்றும் வசதிக்கு ஏற்ப தனித்தன்மையான முறையில் உள்ளடக்கம் எழுதலாம் அல்லது வழக்கமான முறையில் உள்ளடக்கம் எழுதலாம்.

 

Language