கடை மேலாளர்கள் நிறுவனத்தில் விற்பனைப்பிரிவில் பணியாற்றும் பணியாளர்களின் மேற்பார்வை செய்தல்வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்தல்மற்றும் திட்டமிட்டு மற்றும் ஒருங்கிணைத்து விற்பனை செய்தல்வணிகச் சரக்கு குறித்த பணிகள்மற்றும் வரவு செலவு திட்டம் சார்ந்த பணிகள் இவற்றினை முதன்மையாகக் கொண்டு செயல்படுபவர்கள்.

திறமையுடன் தேவையான பணிகளைச் செய்வதற்கு, மேலாளர்கள் அழுத்தத்தின் கீழ் நன்றாக வேலை செய்து காலக்கெடுவுக்குள் இலக்கினை அடைவது அவசியம். மற்றும் சில்லறை வியாபாரம் மற்றும் மனித வளத்தில் கணிசமான அனுபவம் கொண்டு செம்மையுடன் பணியாற்றுதல், மேலும் அவர்கள் தலைமைப் பண்புடன், தனிப்பட்ட மற்றும் பல்பணி திறனையும் கொண்டு இலக்கினை உத்வேகத்தோடு அடைவது அவர்களின் திறனை நிறுவனத்தில் வெளிப்படுத்த உதவும். கடை மேலாளர்கள் உணவு, ஆடைகள், மற்றும் மின்னணு பொருட்கள் உட்பட பல்வேறு சில்லறை விற்பனையாளர்களுக்காக வேலை செய்யலாம், நிர்வாக கடமைகளை நிறைவேற்றும் போது அலுவலக சூழலில் அவர்கள் வேலை செய்கிறார்கள்.

இந்தியாவில் கடை மேலாளர் வேலை பெற 3 வழிகள்

கடை மேலாளர்ளின் பணிகள்:

ஒரு கடையில் மேலாண்மை ஆய்வாளர்கள்மேலாண்மை நிபுணர்கள் எனவும் அழைக்கப்படும், கடை மேலாளராக விரும்பினால் ஒரு கடையின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் மற்றும் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு பரிந்துரைகளை உருவாக்குதல்விற்பனைக் கட்டமைப்பினை வடிவமைத்தல் இல்லையெனில் உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை மேம்படுத்துதல், நிதிப் பணிகளை ஆய்வு செய்தல்ஊழியர்கள் நேர்காணல் செய்து பணியமர்த்துதல் மற்றும் பணிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் ஒரு கடையினை மேம்படுத்த பரிந்துரைகளை வழங்குதல் போன்றவற்றை கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பொதுவாக நீண்ட நேரமாக 9 முதல் 6 மணி வரையிலான கால அளவில் பணியாற்றுகிறார்கள்.

 

கடை மேலாளர் வேலையைப் பெறத் தேவையானது என்ன?

 1.சரியான கல்வியுடன் தொடங்குவது முக்கியமானது.

  2. டிகிரி அளவிலான இளங்கலை பட்டம் தேவை; சில முதலாளிகள் ஒரு முதுகலைப் பட்டத்தை விரும்புகிறார்கள்

 3. பட்டப்படிப்பானது  பைனான்ஸ், மனிதவளம், சந்தைப்படுத்துதல், நிதி அல்லது வணிகம் போன்ற தொடர்புடைய துறையில் பெற்றிருத்தல் சிறப்பாக இருக்கும்

 4. தொடர்புடைய துறையில் உரிமம் மற்றும் / அல்லது சான்றிதழ் இருத்தல் அவ்வளவு அவசியமாக கருதப்படாவிட்டாலும் இன்றைய காலகட்டத்தில் முன்னுரிமைக்கு வழிவகுக்கிறது.

5. அனுபவ ரீதியாக பார்க்கையில், அனுபவம் கட்டாயம் தேவையா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஓடுவதுதான். பொதுவாக தொடர்புடைய துறையில் அனுபவம் தேவை, ஏனெனில் வேலைரீதியான நுணுக்கங்கள் பணியினைத் திறம்பட செய்ய வைக்கும் என்கிற பொதுவான கருத்தே முதலாளிகடம் நிலவி வருகிறது.

 6. அனுபவம் இல்லாவிட்டாலும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதாவது நம்முடைய சில முக்கிய திறன்கள்  தொடர்புடைய துறைக்கு பொருந்தும் வகையில் உள்ளதா எனச் சோதித்து தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பர், அவற்றுள் சிக்கல் தீர்க்கும் திறன்கள், பகுப்பாய்வு திறன்கள், நேர மேலாண்மை திறன் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ், தரவு செயலாக்கத் திட்டங்கள் போன்றவை அவற்றில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை. சில நேரங்களில் சில்லறை அனுபவத்திற்கு மாற்றாக முறையான கல்வியினால் மட்டுமே வேலையினைப் பெறமுடியும்.

 

7. அழுத்தம் மற்றும் காலக்கெடு ஆகியவற்றுடன் நன்றாக வேலை செய்கிற திறன்; சில்லறை வணிகம் மற்றும் மனித வளங்களில் குறிப்பிடத்தக்க அனுபவம்; வலுவான தலைமை, தனிப்பட்ட திறன், மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை, மற்றும் பல்பணி திறன் போன்றவை முக்கிய திறன்களாகக் கருதப்படுகின்றன.

இந்தியாவில் கடை மேலாளர் வேலை பெற 3 வழிகள்

இந்தியாவில் ஒரு கடை மேலாளர் வேலையை எப்படிப் பெறுவது

 

படி 1: இளங்கலை பட்டம் பெறுதல்

நுழைவு-நிலை கடை மேலாண்மை வேலைகளானதுபெரும்பாலும் தனியார் துறை ரீதியானதாகவே இருக்கும், மேலும் குறைந்தது ஒரு இளங்கலை பட்டம் படித்திருப்பவருக்கு மட்டுமே இதன் வாய்ப்பு கிடைக்கும். பல நிர்வாக ஆய்வாளர்கள் குறிப்பாக கணக்கியல், மேலாண்மை அல்லது நிதி போன்ற தொழில்ரீதியான வணிக நிர்வாகத்தில் 4-ஆண்டு பட்டங்களை முடிக்கிறார்கள், இத்தகைய துறைகளில் கடையின் மேலாண்மைக் கோட்பாடுநிறுவன நடத்தை மற்றும் விற்பனைப் புள்ளிவிவர பகுப்பாய்வு போன்றவற்றில் மாணவர்களுக்கு நல்ல பயிற்சியினை வழங்குகிறது.

கடை மேலாளர் வேலைக்கு தொடர்பு ரீதியான துறையில் இளங்கலைப் பட்டம் பெரும்பாலும் தேவையில்லை என்றாலும் தற்போது இருக்கும் போட்டி மிகுந்த சூழல் மற்றும் வளர்ந்து வரும் தேவைக்கேற்ப தொடர்பு ரீதியான துறையில் பெற்றிருக்கும் பட்டமானது உங்களுக்கு ஒரு முன்னுரிமை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

படி 2: வேலை அனுபவம் பெறுதல்:

ஒரு இளங்கலை பட்டம் முடிந்தவுடன், தொடர்பு ரீதியான துறையில் நுழைவு நிலை வேலைவாய்ப்பினைக் கண்டுபிடிக்க ரெஷ்யூமை தயார் செய்து ஒரு பயிற்சி கிடைக்கும் விதமான வேலையில் சேரவேண்டும். சில ஆலோசனை நிறுவனங்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்களையே தேர்ந்தெடுத்து வேலைக்கான பயிற்சியளிக்கிறது. எனவே ஒரு ஆர்வமுள்ள நபராக கல்லூரியின் வேலைவாய்ப்பு வழங்கும் சேவையைப் பின்தொடர்ந்து குறிக்க வேலையைப் பெறமுடியும்.

நேரடியாக கடை மேலாளர் வேலை பெறுவது ஒருவகை, கடையின் விற்பனைப்பிரிவில் சூப்பர் வைசர், விற்பனைப்பிரிவின் இளநிலை நிர்வாகி என நுழைவு நிலை வேலைகளில் தொடங்கி நமது திறமையை வளர்த்துக்கொண்டு கடை மேலாளராக முடியும்.

படி 3 : துறையில் சிறப்பு சான்று பெறுதல் மற்றும் தனித்துறைப் பயிற்சி:

சான்றிதழ் கடை மேலாளருக்கு அவசியம் இல்லை என்றாலும், உங்களை ஒத்த அனுபவமும் திறமையும் கொண்ட ஒரு நபருடன் உங்கள் போட்டி அமைகையில் தேர்ந்தேடுக்கப்படுவதற்கான விளிம்பில் இருக்கும்போது நீங்கள் பெற்ற தொடர்பு ரீதியான துறைச்சான்றிதழ் உறுதியாக வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை . அடிப்படை மட்டத்தில் தகுதியாக ஒரு இளங்கலை பட்டம் மற்றும் குறைந்தது மூன்று ஆண்டுகள் விற்பனை ரீதியாக அனுபவம் கருதப்பட்டாலும் இது இக்காலத்திற்கு உதவும் வகையில் இருப்பதில்லை என்பதை நினைவில் கொண்டு செயல்படுதல் அவசியம், அதே போல் ஒரு வாய்வழி மற்றும் ஒரு எழுதப்பட்ட தேர்வு இவற்றின் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதால், இதற்குத்தக்கவாறு தயாராக வேண்டும்.

 

2012 ஆம் ஆண்டு முதல் 2022 வரை கடை மேலாளர் வேலைவாய்ப்பில் 19% அதிகரிப்பு இருந்த போதினும், BLS இன் படி, காலியிடங்களுக்கு பொருந்துகிற திறமை கொண்டிராமாலே அனைவரும் வேலை தேடுவதாக அறிக்கை கூறுகிறது. திறம்பட தலைவர்களுக்கும் சக பணியாளர்களுக்கும் இடையே தொடர்புகொள்ளும் திறன், சுய உந்துதல் கொண்டிருப்பது,  ஒரு நேர்மறையான அணுகுமுறை கொண்டிருத்தல்,  ஒரு அணியாக / ஒரு குழுவான சூழலில் வேலை செய்வதற்கான திறன், சக பணியாளர்களுக்கும் மேல்நிலை அதிகாரிகளுடனும் ஒத்துப்போகும் திறன், சிக்கல் தீர்க்கும் திறன், பணிச்சுமைக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்யும் திறன் போன்றவற்றை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

 

ஒரு இளங்கலை பட்டம் பெறுதல், ஒரு நுழைவு அளவிலான வேலையில் சேருதல், சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப்பட்டம் பெறுதல், சிறப்பு சான்றிதழ் பெறுதல், சிறப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புகளை பரிசீலித்தல், தொழில்சார் அமைப்புகளில் சேருவது போன்றவை கடை மேலாளர் வேலை கிடைக்க  செய்ய வேண்டியவை ஆகும்.

Language