கைகளால் செய்து பயிற்சி பெறுவது, கல்வி முறைகளில் ஒரு முறையாகும், மேலும் இது தொழில்களில் தொடர்பானவற்றைக் கற்றுக் கொள்ள மக்களுக்கு உதவுகிறது. அதனுடன் நிறுவனத்தின் மெய்யான அனுபவத்தை வழங்குகிறது.

பயிற்சி பெறுவோர்களை அவர் கற்றுக் கொள்ளும் எந்த விஷயத்தையும் நேரடியாக தனது கைகளால் செய்ய வைக்க அனுமதிப்பதன் மூலம் இது புரிதல் ரீதியான சிறந்த கல்வியாகக் கருதப்படுகிறது.

கைகளில் பயிற்சி என்பது உங்கள் கைகளையும் உடலையும் பணிகளைச் செய்ய பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகும். இந்தப் பயிற்சியில் முடிந்தவரை மெய்மையான நிலைமைகளை உருவாக்க, ஒரு மென்பொருள் நிரலைப் பயன்படுத்தி நடைமுறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள ஆன்லைன் பயிற்சியுடன் இதனைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

குறிப்பிட்ட பணிகளை எவ்வாறு செய்வது என மக்களுக்கு கற்பிப்பதற்காக செயல்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது நிஜ உலக சூழல்களுக்கு பயிற்சி பெறுவோர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது. பாரம்பரிய வகுப்பறைப் பயிற்சி போலன்றிஇதில் கற்பவர்கள் விரிவுரையைக் கேட்பது மட்டுமின்றிபுகைப்படங்கள் பார்த்து, வீடியோக்கள் பார்த்து பின்னர் தான் கற்றவற்றை கைகளினால் செயல்படுத்துகின்றனர். கைகளினால் கற்றலுடன் ஒப்பிடும்போது, விரிவுரைச் செய்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மனதில் நிற்கும் மேலும் ஒரு சாதாரண மாணவருக்கு கற்பதில் மிகுந்த சிரமம் கொண்டிருப்பதாக இருக்கும்.

இது பெரும்பாலும் மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். இதன் தேவையை உணர்ந்தே, கல்லூரி வரை உள்ள பாடத்திட்டத்தில் 50% கைகளால் செய்யப்படும் செயல்திறன் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது, உதாரணமாக இஞ்சினியரிங்க் போன்ற படிப்புகளில் புத்தகப்படிப்பு மிகவும் கடினமானதாக இருக்கும், இதனையே அவர்கள் கைகளால் செய்து பார்க்கும்போது கடினத்தன்மையை சற்று குறைப்பதாக உள்ளது.

செய்து கற்றல் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு வேலையினைப் பற்றிய கற்றலுக்குப் பிறகு "ஏன்" என்ற கேள்வியை விட "எப்படி" என்ற கேள்வியையே இது மாணவர்கள் மத்தியில் எழுப்புகிறது. இந்த முறைக் கற்றலில் மூளை வித்தியாசமாக பதிலளிக்கிறது, மேலும் அனுபவங்களைக் கற்க உடல்ரீதியாக ஈடுபடுகையில், கடினமான கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள முடிவதுடன் கற்றுக்கொண்டதை தக்கவைத்திருக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் வைத்திருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

ஏன் அனுபவமற்றவர்கள் செய்திறன் பயிற்சியினைக் கொண்டிருத்தல் வேண்டும்?

கைகளால் கற்றல் பயிற்சியின் நன்மைகள்:

1. இது திரும்ப திரும்ப நடைமுறை ரீதியாக பயிற்சி செய்யும் வாய்ப்பினை அளிக்கிறது.

 2. ஒரு தொழிலாளி இயல்பாக தேவையான திறமையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், பயிற்சி அளிப்பதன் மூலம் கற்றுக்கொண்டு திறமையை வளர்த்துக் கொள்ளமுடியும்.

3. கைகளால் கற்றல் மூலம் கற்ற ஒருவரை பணியமர்த்தும்போது மற்ற அனுபவமற்றவர்களை விட தனது வேலையைத் திறம்பட செய்வதற்கான நம்பிக்கையும், திறமையும் அவரிடம் நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.

4. கைகளால் கற்றலால் அபாயங்களைத் தவிர்த்தல்:

சில பணியிடங்களில், உண்மையான வேலை நிலைமைகளை தோராயமாகக் கைகளில் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம், காரணம் ஒரு புதிய ஊழியரை பணியில் அமர்த்தும்போது ஏற்படும் தொடர்புடைய அபாயங்களைத் தவிர்த்து தவறுகள் குறைந்த அளவிலே நடைபெற செயல்திறன் கற்றவர்களை நியமித்தல் சிறப்பானதாக இருக்கும்.

உதாரணத்திற்கு ஒரு பயிற்சி பெற்றவருக்கு இதே கருவி மற்றும் நடைமுறைகளுடன் பணியினை அமைக்கும் போது, சக பணியாளர்களின் வேலையைத் தொந்தரவு செய்யாமல் அல்லது பணியிடத்தில் அனைவருக்கும் பாதுகாப்பற்ற நிலைமைகளை உருவாக்குவதும் இல்லாமல் தனது சொந்த வேகத்தில் ஒரு திறமையைக் கற்றுக்கொள்ள முடியும்.

 

கற்றல் பாங்குகள் மற்றும் பயன்படுத்துதல்:

மக்கள் வித்தியாசமான கற்றல் பாணியைக் கொண்டிருப்பதாக பயிற்சியாளர்கள் உணர்கிறார்கள். செவித்திறன் மற்றும் காட்சியாகக் கற்பவர்களுக்கு ஒரு வகுப்பறையில் நன்றாகக் கற்றுக்கொள்ளக்கூடிய இயல்பு இருக்கும் அல்லது ஒரு நிபுணத்துவம் கொண்ட பயிற்சியாளரின் பணியைக் கவனிப்பதன் மூலம் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கும். செயல்திறன் பணிகளை பார்க்க மற்றும் கேட்க அதே போல் செய்து பார்க்க வாய்ப்பு உள்ளதால் இந்தப் பயிற்சியால் பல வகையான பாணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

ஒரு பழைய சீனப் பழமொழி உண்டு, "என்னிடம் சொல், நான் மறந்துவிடுவேன், எனக்கு காண்பி, ஒருவேளை நான் நினைவில் வைத்துக்கொள்வேன், ஆனால் எனக்கு செய்துகாட்டு, நான் புரிந்துகொள்வேன்", பத்துமுறை படிப்பது ஐந்து முறை எழுதிப் பார்ப்பதற்குச் சமமானது, இது ஒரு முறை செய்து கற்றலுக்குச் சமமாகிறது என்பது ஒரு படிப்பறிவற்றவர்க்கும் தெரிந்த உக்தியாகும்.

ஏன் அனுபவமற்றவர்கள் செய்திறன் பயிற்சியினைக் கொண்டிருத்தல் வேண்டும்?

அனைத்து வயதினருக்கும் அனுபவமிக்க கற்றல் திறன்

நேரடியாக அறிவுரை மற்றும் தகவல்களை மட்டும் வழங்காமல், கண்முன்னே தன் செயலைக் காட்டுகிறது, 10 வருடங்களுக்கு முன் பார்த்த திரைப்படங்களோ அல்லது உங்கள் வாழ்வில் நடந்த விஷயங்களோ மறப்பதில்லை, காரணம் அது கண்முன்னே காட்சியாக்கப்படுவது தான்.

அங்கன்வாடி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் இந்த மாதிரியான செய்முறைகளே அங்கீகரிக்கப்பட்டு பின்பற்றப்படக் காரணம், அது எவ்வயதினராலும், எவ்வளவு திறமையில் குறைந்தவராலும் கற்றுக்கொண்டு திறம்பட செயலாற்ற முடியும் என்பதால் மட்டுமே. இந்தப் பயிற்சியின் மூலம் ஒரு பெரிய பணியை முடிக்க மிகச் சிறந்த அடித்தளத்தை நம்மால் உருவாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

கைகளால் கற்றல் திறனை அதிகரிக்க பொதுவான உத்திகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

• வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு கற்றல் பாணியைக் கொண்டிருக்கலாம் என்பதை அறிதல். சிலர் தங்கள் வேலையைச் செய்வதற்கு முன் ஒரு மாதிரியின் தேவையைக் கருதுவர். மற்றவர்கள் ஆசிரியருக்குச் செவிசாய்த்து, ஒவ்வொரு படிநிலையையும் கற்றுக்கொண்டு தனக்கான பணியினைச் செய்ய முயல்வர்.

• மாணவர்கள் அவர்களுக்கான வேகத்தில் கற்றுக்கொள்ள அனுமதிக்கவும். அதிக நேரம் அல்லது கூடுதல் விளக்கம் தேவைப்படுவோருடன் பொறுமையாக இருங்கள்.

• நடைமுறை ரீதியாக திரும்ப திரும்ப செய்து பார்க்க வாய்ப்புகளை வழங்குதல். மிகவும் திறமையான மாணவர் அல்லது ஊழியராலும் கூட முதல் முயற்சியிலேயே ஒரு பணியை செய்திருக்க இயலாது.

• தவறுகளை மாணவர்களிடம் எதிர்பாருங்கள். உண்மையில், தவறுகள் ஒரு பணியை நிறைவேற்றுவதைக் காட்டிலும், கற்றுக்கொள்வதற்கு மிகவும் உகந்ததாகும். தவறுகளால் சிக்கல் தீர்க்கும் மற்றும் தீவிரமாக சிந்திக்கும் திறன் உருவாகிறது. அவர்களின் செயல்களின் விளைவுகளை புரிந்துகொள்ள தவறுகள் ஊக்குவிக்கிறது என்பதை உணருங்கள்

.• ஊழியர்கள் அல்லது மாணவர்கள் ஒன்றாக ஒரு புதிய பணியைக் கற்கும் போது குழுவாக செய்வதை ஊக்குவியுங்கள்.

ஏன் அனுபவமற்றவர்கள் செய்திறன் பயிற்சியினைக் கொண்டிருத்தல் வேண்டும்?

செயல்திறன் மூலம் கற்றல் பற்றிய மாணவர் உத்திகள்:

இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் தவறு என்பது கட்டாயமான ஒன்றாகவே இருக்கிறது, காரணம் நாம் மனிதர்கள் கொடுக்கப்பட்ட உள்ளீட்டின் படி வேலை செய்யும் இயந்திரங்கள் அல்ல.

நீங்கள் சரியாக பதில் அளித்தால், கற்றுக்கொண்ட அந்த ஒன்று ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் நினைவிருக்கலாம்ஆனால் ஒரு தவறு செய்து அதை நீங்களே கண்டுபிடித்தால், அப்போதுதான் அந்தத் தகவலைத் தக்கவைத்துக்கொள்ள் முடியும்.

 

 

Language