வாட்ஸ் ஆப் குழுவானது நண்பர்கள், குடும்பம் மற்றும் வணிகர்களுடன் எளிய, வேகமான மற்றும் நம்பகமான வழியில் இணைக்க உதவுகிறது.

இன்று, 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ் ஆப் ஐ ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகின்றனர். இது செய்திகள், குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்ள உதவுகிறது.

வாட்ஸ் ஆப் இலவசம் மட்டும் இல்லை, இது உரையாடல்களை பாதுகாப்பானதாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த முடிவடையும். இது குறைந்த இணைப்புகள் உள்ள பகுதிகளிலும் வேலை செய்கிறதுஉலகின் மிக தொலைதூர பகுதிகளில் இருப்பவர்களும்கூட அவர்களுக்குப் பிடித்த தருணங்களை பகிர்ந்து கொள்ளவும், முக்கியமான தகவல்களை அனுப்பவும் அல்லது அன்பானவர்களுடன் இணைந்திருக்கவும் உதவுகிறது.

எஸ்.எம்.ஈ / எம்.எஸ்.எம்.ஈ  தொழில்களுக்கு பணியமர்த்த வாட்ஸ் ஆப் பயன்படுத்துதல்

2019 ஆம் ஆண்டுடன் வாட்ஸ் ஆப் பயன்பாட்டிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மேலும் இயற்கை பேரழிவுகள் போன்ற முக்கிய தருணங்களில், WhatsApp என்பது பெரும்பாலும் தகவல்களைப் பரப்பும் ஒரு சிறந்த பயன்பாடாகும்.

கடந்த பத்தாண்டுகளில், வாட்ஸ் ஆப் இன் ஒரு ஒற்றைக் குறிக்கோளாக இருந்தது ஒன்று மட்டுமே, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைக்க எவருக்கும்  சொந்த விஷயங்களுக்காக எவ்வகையிலும் எளிதானதாகவும், அனைவரையும் பயன்படுத்த வைப்பதுமே ஆகும். ஆனால் அதன் படிநிலை சற்று உயர்ந்து எல்லாத்துறையிலும் பயன்படும் அளவு குறிக்கோள் விரிவானது.

வாட்ஸ் ஆப்பை பணியில் ஆட்சேர்ப்பதற்காக எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், ஏன் பயன்படுத்துகிறார்கள்  என்பதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

வாட்ஸ் ஆப் பொதுவாக செய்தியை மற்றோருக்கு அனுப்பப் பயன்படும் ஒரு செயலி என அனைவராலும் அறியப்படுகிறது, செய்தியானது தனிப்பட்ட ரீதியில் தங்களது உறவுகளுக்காகவோ அல்லது நண்பர்களுக்காகவோ மட்டுமாக இருக்காமல், தற்போது அது ஆட்சேர்ப்பில் அடுத்த ஒரு பெரிய விஷயமாக இருக்க 100% வாய்ப்புள்ளது.

தற்போது நாம் ஒரு போட்டி நிறைந்த சந்தையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்எனவே ஆட்சேர்ப்பு நிலையிலிருந்து பார்த்தால், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் ஒருவரை தங்கள் நிறுவனங்களில் சேர்க்க பாதுகாக்க முடியாது என்றால், போட்டியாளர்களுக்கு அவர்களை இழக்க நேரிடும்.

முடிந்தவரை பணியமர்த்தல் செயல்முறையை மிகச்சுருக்கமாக செய்வது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்த சுருக்கமான செயல்முறைக்கு சமூக ஊடகங்களின் துணை தேவையானதாகிறது. அவற்றுள் வாட்ஸ் ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நாம் அடைய முடியாத அளவு கடினமானதாக இருக்கும் நபர்களுடான பிடியைப் பெற வாட்ஸ் ஆப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

எஸ்.எம்.ஈ / எம்.எஸ்.எம்.ஈ  தொழில்களுக்கு பணியமர்த்த வாட்ஸ் ஆப் பயன்படுத்துதல்

பல நிறுவனங்களில் பணியமர்த்த தேவையான அளவில் உதவக்கூடிய திறன்களை இது கொண்டுள்ளது. இது நீங்கள் கடினமாக முயற்சி செய்து கண்டறியும் நபர்களை நெருக்கமாக கொண்டுவருகிறது. லிங்க்டு இன் மூலமும் பணியமர்த்தல் செய்யலாம், ஆனால் வாட்ஸ் ஆப் அளவு எளிமையானதாகவோ அனைவராலும் பயன்படுத்தப்படுவதும் இல்லை என்பதே இதற்கான காரணமாகும்.

சராசரியாக ஒரு நாளைக்கு 20 அல்லது அதற்கு மேற்பட்ட செய்திகளைப் பெறுகிறார்கள். பயன்பாடு எளிதாக இல்லாமையால், அவர்களுக்குப் பதிலளிக்க நேரம் இல்லை, மேலும் எளிதாகப் பின்தொடரவும் முடிவதில்லை.

பொதுவாக பெரும்பான்மையான வேலைவாய்ப்பினைப் பற்றிய அறிவிப்புகளை மின்னஞ்சல்களிலே அனைவரும் பெறுவர், ஆனால் இதுவும் லிங்க்டு இன் போல் பயன்படுத்துவதற்கு எளிமையானது அல்ல.

வாட்ஸ் ஆப் உலகளாவியது மற்றும் நிலையானது:

வேலைக்கான நபர்கள் நாடு முழுவதிலும் பரவியுள்ளதால்தொலைபேசியில் அழைத்து விவரங்களைப் பகிர்வதைக் காட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதன் செயல்முறை அனைவராலும் விரும்பத்தக்க ஒன்றாக உள்ளது.

இணைப்புகளில் பல வகையான சிக்கல்கள் எப்போதும் இருக்கும்மற்றும் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணங்கள் அதிகமாக இருக்கும்வாட்ஸ் ஆப், தரவு அல்லது வைஃபை இணைப்புகளில் அழைப்புகளை செய்ய அனுமதிக்கும் ஒரு உலகளாவிய விஒஐபி (VoIP) சேவை ஆகும்.

விஒஐபி சேவைகளில், வாட்ஸ் ஆப் நிலையானது என நிறுவனங்களால் கருதப்படுகிறது. பிற ஒத்த தளங்களில் (ஸ்கைப் உட்பட), இணைப்பு மிகவும் சிக்கலானதாக இருக்கும், மேலும் அவை நிறைய தரவுகளைப் பயன்படுத்துகின்றன. அந்த வகையில் வாட்ஸ் ஆப் சிறந்தது. இது போன்ற அதன் பிற நலன்களைக் கருத்தில் கொண்டே தொழில்முறை ரீதியான ஆட்சேர்ப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ள கருதுகிறார்கள்.

எஸ்.எம்.ஈ / எம்.எஸ்.எம்.ஈ  தொழில்களுக்கு பணியமர்த்த வாட்ஸ் ஆப் பயன்படுத்துதல்

 

எஸ்.எம்.ஈ / எம்.எஸ்.எம்.ஈ தொழில்களில் ஆட்சேர்ப்பிற்காக வாட்ஸ் ஆப்பினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை காணலாம். இது வேகமாக வளர்ந்து வரும் தகவல்தொடர்பு பயன்பாடாகும். வாட்ஸ் ஆப் ஏற்கனவே எஸ்எம்எஸ் மாற்றாக மாறிவிட்டது.

வாட்ஸ் ஆப்பின் சிறந்த அம்சங்கள்:

1. உரை செய்திகளின் மூலம் உண்மையான நேரடி உரையாடல்கள்

2. செய்திகளைத் தட்டச்சு செய்வது மற்றும் இணைய உலாவியைப் (WhatsApp Web) பயன்படுத்தி கோப்புகளை இணைப்பது எளிதானது

3. PDF, .doc, .docx, .jpg, .png போன்ற அனைத்து வகையான கோப்புகளையும் பகிர்தல்.

4. வாட்ஸ் ஆப் அழைப்புகள்

5. குரல் செய்திகளை அனுப்புதல்

6. குழு உரையாடல்

 

எஸ்.எம்.ஈ / எம்.எஸ்.எம்.ஈ தொழில்களில் எவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதில் WhatsApp இன் பங்கு:

வாட்ஸ் ஆப் பல அம்சங்களைக் கொண்டிருக்கும் போது, SME / MSME தொழில்களின் நியமனத்தில் மட்டும் அதைப் பயன்படுத்தாமல் எப்படி இருப்பர்.

 

1. நபர்களைக் கண்டறிதல்

வாட்ஸ் ஆப் ஆட்சேர்ப்புக்கான ஒரு சமீபத்திய சமூகத் தளமாக மாறிவருகிறது.  ஆட்சேர்ப்பாளர்களுக்கு பல வாட்ஸ் ஆப் குழுக்கள் உள்ளன. காலிப்பணியிடங்களை இந்தக் குழுக்களில் சக பணியாளர்களால் இடுகையிடப்படுகிறது, இது வேலைவாய்ப்பிற்கான காலிப்பணியிடங்களுக்குப் பொருத்தமான நபர்களைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழி.

 

2. வேலை விவரத்தை பகிர்தல்

பலரால் அலுவலக நேரங்களில் தனிப்பட்ட மின்னஞ்சல்களை திறந்து பார்க்கவோ அல்லது அழைப்புகளை எடுக்கவோ முடியாது. எனினும், அவர்களால் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும். தனிப்பட்ட மின்னஞ்சல்களை அலுவலகத்தில் திறக்க முடியாது" என்று சொன்னால், வேலை விவரம் மற்றும் கம்பெனி சுயவிவரத்தை வாட்ஸ் ஆப்பில் ஏன் பகிர்ந்து கொள்ளக்கூடாது?

எஸ்.எம்.ஈ / எம்.எஸ்.எம்.ஈ  தொழில்களுக்கு பணியமர்த்த வாட்ஸ் ஆப் பயன்படுத்துதல்

3. நபர்களுக்கு அறிவித்தல்

நேர்காணல் தேதி & நேரம் அல்லது வேறு எந்த கலந்துரையாடல்களையும் பற்றி நினைவூட்டல்களை அனுப்பவும், தொடர்பு கொள்ளவும் விரைவான வழி இதுவே ஆகும், இந்த செய்தி அவர்களுக்குப் பொருந்தவில்லை எனில் அவர்கள் துறையின் தொடர்புடைய அதே செய்தியை நண்பர்களுக்கு அனுப்ப எளிதாக்குகிறது.

4. நபரின் ஆர்வத்தை அறிந்து கொள்ளுதல்

நபர்கள் தங்களது செய்தியைப் பார்த்திருக்கிறாரா, இல்லையா என்று தெரியவரும். அதன் மூலம், அவர்களின் பதிலில் உள்ள தாமதம் அல்லது செய்தியை புறக்கணித்துவிட்டால், வேலையில் அவர்களின் ஆர்வத்தைப் அளவை தெரிந்து கொள்ளலாம்.

 

 

Language