பொதுவாக எல்லாத்துறைகளிலும் எழுகின்ற கேள்வியும் கூட இதுதான், துறை ரீதியான படிப்பினை முடித்து வேலைக்குச் செல்வோருக்கும், கற்றுக் கொண்டு வேலைக்குச் செல்வோருக்கும் இடையில் உள்ள தரம் சம்பந்தமான வேறுபாடுகள் பல உள்ளதாக கேள்விகள் இக்காலம் மட்டுமல்லாது எக்காலத்திலும் இருக்கிறது. அது எந்த அளவு உண்மை என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

முந்தைய காலத்தில் வீடு கட்டுவதற்கு கொத்தனார் மட்டுமே போதுமானவராகவும் அவரே சிறந்த நிபுணராகவும் எண்ணப்பட்டு ஒரு வீட்டின் அனைத்துக் கட்டுமான ரீதியான பணியையும் ஒப்படைத்துவிடுவர், அதிக அளவிலான கொத்தனார்கள் கட்டுமானப் பணி ஒன்றை மட்டும் செய்வதில்லை, கூடுதலாக மர வேலைகள், இன்டீரியர் டிசைனிங்க் எனப்படும் கட்டிடத்தின் உட்புற அழகுபடுத்தல் வேலைகள் போன்றவற்றைச் செய்வர். இவ்வளவு வேலையையும் ஒருவரிடம் ஒப்படைத்தது போய் இன்று ஒரு ஒரு வேலைக்கும் ஒரு ஒருவர் என்று பலர் ஒரு கட்டிடத்தின் கட்டுமானத்தில் வேலை செய்கின்றனர். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் அத்தியாவசியம் மற்றும் ஆடம்பரம் என்பது மட்டுமா? நிச்சயம் இல்லை.

எனினும் கொத்தனாருக்கும் இன்றைய சிவில் இஞ்சினியருக்குமான வித்தியாசம் வேறு ஏதாவது உள்ளதா என்றால் ஆம். கொத்தனாரின் அளவுருக்கள் பொதுவாக தோராயமானது, அவர்களால் நிச்சயம் கூடுதலாக மர வேலைகள், இன்டீரியர் டிசைனிங்க் வேலையையும் செய்ய முடியும் ஆனால் நேர்த்தியாக அல்ல.

நேர்த்தி என்பது ஒரு வகையில் தரத்தினை நிர்ணயிக்கும் அளவுருதான், நேர்த்தியில் பல வகையான நுணுக்கங்களும் நுட்பங்களும் இருக்கும். ஒரு சிவில் இஞ்சினியரினின் திட்ட அமைப்பில் கட்டப்பட்ட ஒரு கட்டிட அமைப்பிலும் ஒரு கொத்தனாரின் கட்டிட அமைப்பில் உள்ள கட்டிட அமைப்பிலும் தொழிநுட்ப அளவில் உள்ள வேறுபாடுகளின் உச்சநிலை வேறுபாட்டினை உற்று நோக்காமலே கண்டறிய முடியும் என்பதே சரியான கூற்று.

வெல்டர், ஃபிட்டர் அல்லது மெட்டீரியல் டெஸ்டிங் போன்ற வேலைகள்  பொறியாளர் தரத்திற்குக் குறைவாக உள்ளதா?

வெல்டர்

இரண்டு வகை வெல்டர்கள் உள்ளனர். முதல் வகையில் இருப்போர் வெல்டர் சான்றிதழ் பெற்றோர் மற்றும் இரண்டாவது வகையில் நடைமுறை ரீதியான பயிற்சி பெற்ற வெல்டர். அவர்கள் இருவருக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன.

வெல்டிங் இன்ஜினியரிங் என்பது மெக்கானிக்கல், மெட்டாலர்ஜிகல் மற்றும் இன்ஜினியரிங் தயாரிப்புகளின் அம்சங்களைக் கையாளும் பொறியியலின் ஒரு தற்காலிகப் பிரிவு ஆகும். நிச்சயமாக அது அழுத்தம் / வெப்பநிலை / உராய்வு / அதிர்வுகளை போன்றவற்றைப் பயன்படுத்தி இரண்டு துண்டுப் பொருள்களை ஒரு துண்டாக சேர்ப்பதுதான்.

ஒரு வெல்டிங் பொறியாளர் வெல்டிங் மெட்டாலஜி ( மெட்டல் மெட்டாலர்ஜி + நிலை மாற்றங்கள் குறிப்பாக திட நிலை மாற்றங்கள்), வெல்டிங் வடிவமைப்பு, சோதனை முடிவுகள், சில மின்ரீதியான அம்சங்கள், கட்ட நிலைமாற்றங்களிடமிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இந்த விஷயங்களை மட்டும் கொண்டிருந்தால், வெல்டிங் பொறியாளர் எனக் கருதப்பட மாட்டார்கள். CWE (சான்றளிக்கப்பட்ட வெல்டிங் பொறியாளர்) என்று அழைக்கப்படும் AWS (அமெரிக்க வெல்டிங் குழுவில்) இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், இதில் அவர்கள் ஒரு தேர்வு நடத்துவார்கள்.

இந்தப் பொறியியலாளர்கள் மிகவும் பயனுள்ள வெல்டிங் நுட்பங்களை கண்டுபிடிக்கலாம் அல்லது வெல்டிங் செயல்பாட்டில் உதவுவதற்கு மிகவும் திறமையான உபகரணங்களை வடிவமைக்கலாம். தரக் கட்டுப்பாட்டினை உறுதிப்படுத்த அல்லது ஆய்வு நடைமுறைகளை மதிப்பீடு செய்ய உற்பத்தி செயல்முறைகளை மேற்பார்வையிடலாம்.

வெல்டர், ஃபிட்டர் அல்லது மெட்டீரியல் டெஸ்டிங் போன்ற வேலைகள்  பொறியாளர் தரத்திற்குக் குறைவாக உள்ளதா?

பொறியியல் வல்லுநர்கள் வெல்டர், ஃபிட்டர் அல்லது மெட்டீரியல் டெஸ்டர் போன்றோரிலிருந்து வேறுபடக் காரணங்கள்:

 

• சட்டரீதியான, தரம், நிறுவனத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுடனான இணக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது

• பொதுவான பொறியியல் / கணிதவியல் மற்றும் விஞ்ஞானக் கோட்பாடுகள், முறைகள், உத்திகள், வரைகலை வெளிப்பாடுகள், குறியீடுகள், சூத்திரங்கள் மற்றும் பொறியியல் நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்தும் கணக்கீடுகள் போன்றவற்றைப் பற்றிப் புரிதல்

• துறையிலுள்ள பொதுவான பொருட்களின் கட்டமைப்பு மற்றும் பண்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது

• சாதாரண பணி நடவடிக்கைகள் / சூழலில் எழும் பொதுவான சிக்கல்களைப் புரிந்து கொள்ளுங்கள்

• அங்கீகரிக்கப்பட்ட நோயறிதல் முறைகள் மற்றும் பொறியியல்/ உற்பத்தியில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றைத் தீர்க்க உதவும் நுட்பங்களைப் பற்றிய அறிவு கொண்டிருத்தல்

• தற்போதைய ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறைகள், நடைமுறைகள், ஆவணங்கள் பொருத்தமாக இல்லையெனில், நிறுவனத்திற்கு ஏற்ற சாத்தியமான தாக்கங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது

• பணியின் பாத்திரத்தை பூர்த்தி செய்வதற்கு பொருந்தக்கூடிய பொறியியல் / உற்பத்தி தரவு மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை புரிந்துகொண்டு செயல்படுவது

• நிறுவனத்தில் வெவ்வேறு பாத்திரங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதுடன் அவை மற்றவற்றுடன் எவ்வாறு தொடர்புகொள்கின்றன என்பதனைப் பற்றி அறிதல்.

• ஒரு நிறுவனம் தங்கள் செயல்முறைகளையும் நடைமுறைகளையும் தொடர்ச்சியாக மறுபரிசீலனை செய்வது ஏன் முக்கியம் என்பதை புரிந்துகொள்வது.

• கணித நுட்பங்கள் மற்றும் கணக்கீடுகள் ஒரு பணியின் சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துதல்

மின், மின்னணு, டிஜிட்டல், அனலாக், போன்றவற்றின் அமைப்புகள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படைகளை புரிந்து கொள்ளுதல்

• தொடர்புடைய தரவு மற்றும் ஆவணங்களைப் படித்து விளக்குவது பணியாற்றும்போது சரியான கை மற்றும் இயந்திர கருவிகள் மற்றும் உபகரணங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல். இயந்திர பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது இயந்திர மற்றும் மின்சார அளவீட்டு மற்றும் சோதனை உபகரணங்களைப் பயன்படுத்துதல்.

வெல்டர், ஃபிட்டர் அல்லது மெட்டீரியல் டெஸ்டிங் போன்ற வேலைகள்  பொறியாளர் தரத்திற்குக் குறைவாக உள்ளதா?

இதனைச் சற்று கூர்ந்து கவனித்தாலே நமக்கு விளங்கும், இஞ்சினியரிங்க் பட்டப்படிப்பு இல்லாமல் நடைமுறைப் பயிற்சியைக்  கொண்டு வேலையில் ஈடுபடுவது தரத்தின் நிலையை நிறுவுவதில் நுழைவாயிலிலே இருக்கச் செய்கிறது. தோராயத்தன்மையைக் கொண்டு மட்டும் உயர் நிலையான தரத்தினை அளிக்க முடியாது. இஞ்சினியரிங்க் படிக்கும்போதே வேலைக்குச் சம்பந்தமான நுட்பங்களைப் படிக்கும் காலங்களில் கற்று இருப்போம், பெரும்பாலும் இதன் அடிப்படையிலே பணியமர்த்துவதற்கு தேர்ந்தெடுப்பர்.

சிறு சிறு வெல்டிங்க், ஃபிட்டிங்க், மெட்டீரியல் டெஸ்டிங்கிற்கு நடைமுறையில் கற்றுக்கொண்டு வேலைசெய்வது எளிதாயினும் பெரிய அளவிலான பணியிடங்களில் சான்றிதழுடன் கூடிய இஞ்சினியரிங்க் அடுத்த நிலையை நோக்கிச் செல்ல கூடுதலாக தரத்தினை நிர்ணயிப்பதாக அனைத்து நிறுவனங்களாலும் கருதப்படுகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பெருமளவிலான வித்தியாசத்தைக் கொண்டிராவிட்டாலும் குறைந்தபட்சம் சரியாக முடிக்கப்பட்ட வேலை என்பதற்கும் நேர்த்தியாக முடிக்கப்பட்ட வேலை என்பதற்குமான வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் என்பதுதான் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.

 

Language