பொதுவாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலங்களில் காலை செல்லத்தொடங்கும் போதே மாலை எப்போது வீடு திரும்புவோம் என்றும் மாலை நேரப் பள்ளியின் மணியோசைக்குமே ஆவலுடன் காத்திருப்பர், அதிலும் வெள்ளிக்கிழமைக்காக வாரம் முழுதும் தவம் கிடப்பர், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆகிவிட்டால் பொழுதும் குமுறிக் கொண்டே வழக்கம்போல் அந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை பள்ளிக்குச் செல்வர். இதே காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் உணர்வோ ராமாயணத்தில் ராமன் வனவாசம் போனது போன்ற உணர்வினுடன் ஒத்ததாக இருக்கும். இந்தக் கதை பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை தொடரும். ஆனால் இதற்கு மாறுபட்டது கல்லூரி வாழ்க்கை.

கல்லூரியில் நுழையும்போதே மாணவர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். கல்லூரி வாழ்க்கையானது பள்ளிப் படிப்பு அளவு கடினமானதாக மாணவர்களிடம் தெரிவதில்லை. காரணம் பள்ளியில் மதிப்பெண்கள் இவ்வளவு பெறவேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் எண்ணும் அளவு கல்லூரியில் எண்ணுவதில்லை. கல்லூரிக்காலம் என்பது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கான காலம் என்று மட்டுமே எண்ணி படிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல், படிப்பை முடித்துவிடுகின்றனர். கல்லூரிப் படிப்பை முடித்தபின் அவர்கள் முன் நிற்கும் கேள்விக்குறி ஒன்று மட்டுமே? அடுத்த அவர்களின் வாழ்க்கையை மேலும் சந்தோசமாக மாற்றக்கூடிய அவர்களின் கனவு வேலைதான்.

நீங்கள் கல்லூரியை முடித்த பிறகு கட்டாயம் சம்பளமின்றி வேலை செய்ய வேண்டுமா?

கனவு வேலையைப் பெறாதவர்கள் சந்தோஷமான வாழ்க்கையைப் பெறவில்லையா என்றால், நிச்சயம் ஆம் என்பதே பொதுவான கருத்து. இன்றைய காலகட்டத்தில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஒரு மிகப்பெரும் பங்கினை வகிக்கிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றமானது அவர்களின் அடிப்படைத் தேவைகளை குறைவில்லாமல் பூர்த்தி செய்ய உதவுகிறது.

இன்றைய காலகட்டத்தில் கல்லூரியை முடித்தபின் கனவு வேலையை எப்படிப் பெறுவது என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது, படித்து முடித்ததும் நாம் எடுக்கும் சில முக்கிய முடிவுகளே இதற்கான பதிலாகும். படிப்பினை முடித்ததும் கனவு வேலை கிடைக்காதா என்றால், கிடைக்கிறது ஆனால் வெகுசிலருக்கு மட்டுமே, பெரும்பாலானோர் அதன்பின் கனவு வேலையை எப்படிப் பெறவேண்டும் என்பதற்கான சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

 

இலவசமாக வேலை செய்ய வேண்டியதின் அவசியம்:

 

இதை சம்பளமின்றி வேலை செய்வது என்றும் கூறலாம்.

துறை ரீதியான பல பயிற்சிகள் பல்வேறு நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன, இத்தகைய பயிற்சிகள் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ பயிற்றுவிக்கப்படுகிறது, மேலும் கால அளவானது குறைந்தது 10 நாட்களில் தொடங்கி அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை கற்பிக்கப்படுகிறது. இங்கு பயிற்சியுடன் மட்டும் நின்று விடாமல் நாம் அத்தகைய நிறுவனங்களில் அவர்களுக்காக வேலை செய்து கொடுக்கவேண்டும்.

இவ்வாறு வேலை செய்வது உண்மையிலேயே நிறுவனங்களுக்கு லாபமாக இருப்பினும் மறைமுக ரீதியாக நமக்கும் பெரிய அளவிலான லாபத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது. இத்தகைய வேலைகளில் பெருமளவில் பொருளாதாரத்தினை நம்மால் பெறமுடியாது, மிகவும் குறைவான அளவிலேயே உதவித்தொகை வழங்கப்படும், பெரும்பான்மை இடங்களில் உதவித்தொகை கிடையாது. ஆனால் தொழில் ரீதியான அனுபவம் உண்டு, இந்த அனுபவத்தினைக் கொண்டு நம்மால் மிக எளிதாக கனவு வேலையை அடைய முடியும்.

நீங்கள் கல்லூரியை முடித்த பிறகு கட்டாயம் சம்பளமின்றி வேலை செய்ய வேண்டுமா?

இது போன்ற வேலைகள் ஒரு வேலைவாய்ப்பினைப் பற்றிக் கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நிறுவனங்களால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நடத்தப்படும் ஒரு உத்தியோகபூர்வத் திட்டமாகும். இன்றைய சூழலில் வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் காரணியாக இருப்பதும் இதுவேயாகும்.

ஒரு வர்த்தகத்தை கற்றுக் கொள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு நிறுவனத்தில் வேலை செய்வதற்கேற்றவாறு பயிற்சிபெறுவர்.

மதிப்புமிக்க வேலை அனுபவம் அல்லது ஆராய்ச்சி அனுபவம் பெற வேண்டிய இளங்கலை அல்லது தொழிற்கல்விப் பட்டதாரி மாணவர்கள் மத்தியில் வேலைவாய்ப்புக்கான இந்த மாதிரியானது மிகவும் பிரபலமாக உள்ளது.

மென் பொருள், இஞ்ஜினியரிங்க், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சுகாதார ரீதியான துறைகள், அறிவியல், தொழில்நுட்ப ரீதியான பல நிறுவனங்களில் இம்முறையின் மூலமே அனுபவம் பெற்று உள்நுழைய முடியும்.

இலவசமாக வேலை செய்வதன் வகைகள்:

இதில் இரண்டு வகைகள் உள்ளன:

  1. இன்டர்ன்ஷிப் ரீதியான வேலைகள்
  2. அப்ரண்டிஷ் ரீதியான வேலைகள்
நீங்கள் கல்லூரியை முடித்த பிறகு கட்டாயம் சம்பளமின்றி வேலை செய்ய வேண்டுமா?

இன்டர்ன்ஷிப் ரீதியான தொழிற்பயிற்சி அப்ரண்டிஷ் ரீதியான தொழிற்பயிற்சியிலிருந்து மிக அதிக அளவில் வேறுபாட்டினைக் கொண்டிருக்கவில்லை. இரண்டும் வேலைவாய்ப்பினை அனுபவத்தைப் பெற நிறுவனங்களால் அமைத்துத் தரப்படும் ஒரு வரம் மட்டுமே ஆகும்.

 இன்டர்ன்ஷிப் மாணவர்களுக்கு வேலை ரீதியாக மெய்மையாக "ஒரு முயற்சி செய்து" இந்தத் தொழில் அல்லது அது தொடர்பான துறைகளில் அவர்களுக்கு பொருந்தும் வகையில் வேலைகள் உள்ளதா எனச் சோதிக்க ஒரு வாய்ப்பு வழங்குகிறது, அது சரியான தேர்வாக இருந்தால்

அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கவும் இல்லையெனில் வேறு துறைகளில் முயற்சி செய்து பார்க்கவும் வழிவகுக்கிறது. இத்தகைய சோதனைகள் அனைத்தும் கல்லூரிப் படிப்பை முடித்த உடனே மேற்கொள்வது சிறப்பானது.

இதுவே அப்ரண்டிஷிப் பயிற்சியை எடுத்துக்கொண்டால் ஏறக்குறைய அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர் அளவு வேலை செய்து கற்க வேண்டி இருக்கும், எந்த துறையில் அவர்கள் செல்ல விரும்புகிறார்களோ நமக்கான அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அப்ரண்டிஷிப் பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இப்பயிற்சியை முடித்ததும் அங்கேயே பணியைத் தொடரவும் செய்யலாம். அப்ரண்டிஷிப் பயிற்சியானது தனியார் துறைகளில் மட்டுமல்லாது காகிதத் தொழிற்சாலை, மின்சாரத்துறை, பிஎஸ்.என்.எல் போன்ற அரசாங்கத்துறைகளிலும் அளிக்கப்படுகிறது.

கல்லூரியை முடித்த பிறகு கட்டாயம் சம்பளமின்றி வேலை செய்ய வேண்டுமா?

 இலவசமாக வேலை செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்:

1. மதிப்புமிக்க பணி அனுபவம் பெறலாம்

வேலை ரீதியாக பயிற்சி பெறுவது விலைமதிப்பற்றது மற்றும் இது ஒரு வகுப்பறை அமைப்பில் பெற முடியாத ஒன்றாகவும் ஏற்கனவே அறிமுகமான அறிவை உண்மையான வேலை அனுபவங்களாக விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கக்கூடியதாக உள்ளது. அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட துறையில் எதிர்கொள்ளும் அன்றாட வேலையின் கடமைகளை நேரடியாக கற்று வருவார்கள்.

2. வேலைச் சந்தையில் ஒரு விளிம்பை வடிவமைக்கிறது

வேலைவாய்ப்பு அனுபவம் ஒரு கல்லூரி படிப்பை இன்னும் சந்தைப்படுத்துகிறது, ஏனெனில் அவர்கள் வழக்கமாக குறைந்த பயிற்சியுடன் அதிக பொறுப்புகளை கையாள முடியும். வேலைவாய்ப்பு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் ஒரு புதிய வேலையைத் தொடங்குபவர்கள் ஆகியோரை விட உயர்ந்த ஆரம்ப சம்பளத்தையும் பெறலாம்.

3. திறன்களை வளர்த்து, மேம்படுத்தும்

ஒரு வேலைவாய்ப்பின் போது உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம். அறியாத பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு பயிற்சி அனுபவத்திலிருந்து பெரும்பாலானவற்றைப் பெற கேள்விகளை கேட்டு, புரிந்து, கண்காணித்து அதிகம் கற்றுக்கொள்ளலாம்.

4. துறையில் நிபுணர்களுடன் இணைப்பில் இருத்தல்

 ஒரு பயிற்சியாளராக, தொழிலில் நிபுணத்துவம் பெற்றவர்களால் சூழப்பட்டிருப்பார்கள். ஊதியம் பெறுவது, தரத்தை பெறுவது, பணம் சம்பாதித்தல் ஆகியவற்றை விட அனுபவத்துடன் அதிக நுட்பங்களைக் கற்கலாம். இவ்வாறு செய்யும் இலவச வேலைவாய்ப்பின் மூலம் கிடைக்கும் ஊழியர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் தொழிலின் சக ஊழியர்களாகவோ அல்லது முதல் வேலைக்கான இணைப்பாகவோ இருக்கலாம்.

5. நம்பிக்கை பெறுதல்

உழைப்பு உலகில் நுழைவதற்கு முன் வகுப்பறையில் கற்றுக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நுட்பங்களை சோதனை செய்ய அனுமதிக்கிறது. கல்லூரியின் முதல் வேலையில் கடினமான வழியைக் கற்றுக் கொள்வதற்கு பதிலாக, தவறுகள் எதிர்பார்க்கப்படுகிற ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் கற்றவற்றைப் பொருத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.

 

 

Language