உண்மையான வேலைகளை தேடுபவர்களா நீங்கள்? மோசடி நிறுவனங்கள் இடம் மாட்டிக்கொள்ளாமல்   நம்பகத்தன்மை உடைய வேலைகளை வீட்டில் இருந்தவாறே செய்வது எப்படி? அலுவகத்திற்கு சென்று பணிபுரியும் போது கிடைக்கும் வருமானம் வீட்டில் இருந்து செய்தால் கிடைக்குமா? போன்ற பல கேள்விகளை உடையவர்களாக இருந்தால், உங்களுக்கான பதில் தயாராக உள்ளது.

 

01. சிறந்த ஆன்லைன் வேலைகளை எப்படி கண்டடைவது ?

வீட்டில் இருந்தவாரே ஆன்லைனில்  வேலைகளை தேடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கல்லூரி மாணவர்கள் முதல் பணி ஓய்வு பெற்றவர்கள் வரை முழு நேர வேலைக்காகவும், பகுதி நேர ஊதியத்திற்காகவும் மற்றும் கூடுதல் வருமானத்திற்காகவும் இணையத்தில் வேலையை தேடி வருகின்றனர். இவ்வித வேலைகள், வீட்டில் இருந்தபடியே சுலபமாக கண்டடைவதாக இருந்தாலும், இதில் பல ஆபத்துகள் இருந்துகொண்டே தான் உள்ளது. பொதுவாக, ஆன்லைனில் பதிவேற்றப்படும் நிறுவனங்கள் போலியானதாகவும், மோசடி நிறுவனங்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகமாக தேடப்படும் வேலைகளான டேட்டா  என்ட்ரி, தட்டச்ச்சு செய்தல், மொழிபெயர்ப்பு, கட்டுரை எழுதுதல், வடிவமைத்தல் போன்ற பல வேலைகளை வழங்குவதில் நம்பகத்தன்மையற்ற நிறுவனத்தை தவிர்க்க அங்கீகரிக்கப்பட்ட தளத்தில் சென்று பணிபுரிவது சிறந்தது.

முதலில், ஆன்லைனில்  வேலையை தேடுபவர்கள் எந்த  காரணத்திற்காகவும் வேலையை பெற முன் தொகையோ அல்லது பாதுகாப்பு வைப்பு என்ற பெயராலோ பணத்தை கட்டாதிருங்கள். வேலையை பெற பணத்தை கொடுப்பது நம்பகத்தன்மையற்றதாகவே கருதப்படுகிறது. பலர், பல இலட்சங்கள் வரை இதனால் இழந்திருக்கிறார்கள்.  

அதனால், அனைவராலும் பயன்படுத்தப்படும் நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் வீட்டில் இருந்தே செய்யக் கூடிய பகுதி நேர வேலையை வழங்கும் தளங்களை வரிசைப்படுத்துகிறேன். இதன் மூலம், நீங்கள் விரும்பும் துறையில் சுலபமாக பணியமர்த்தப்படுவீர்கள்.

  •  Freelancer - இந்த தளத்தில் பல போட்டிகள் இருப்பினும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கும் திறன் உடையவராக இருந்தால் அதிக வாடிக்கையாளர்களை பெற முடியும். இங்கு நீங்கள் தான், வேலைக்கான ஊதியத்தை  நிர்ணயம் செய்பவராக இருப்பீர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் இந்த வேலையை செய்து முடிக்கும் வசதியை இத்தளம் கொடுக்கிறது. பகுதி நேர பணியாளராக இந்த வேலையை செய்தாலும், விரும்பினால் முழு நேர வேலையாகவும் எடுத்தும் செய்யலாம். இந்த வேலைக்கு வயது வரம்பில்லை.
  • Upwork - இந்த தளமும் பகுதி நேர பணியாளர்களுக்கு சிறந்த தளமாக உள்ளது. குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கான பணிகளை பெரும் வாய்ப்புகளை அதிகமாக இங்கு பெற முடியும்.

 

நீங்கள் எந்த தளங்களை சென்றடைந்தாலும், அந்த தளம் எத்தனை நபர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று கவனிக்க வேண்டியது அவசியம். மேலும், மோசடி நிறுவனங்கள் உடைய தளங்களில் பிரபலமான நிறுவனத்தின் ஸ்பான்சர் விளம்பரங்கள் இடம் பெற்று இருக்காது.

 

02. தொலைத்தொடர்பு வேலையை எவ்வாறு அடையாளங்கொள்வது?

Telecommuting எனப்படும் தொலைத்தொடர்பு வேலைகள், ஒரு நிறுவனத்திற்காக வீட்டில் இருந்தபடியோ அல்லது நிறுவனத்திற்கு அருகிலோ பணிபுரிவதாகும். ஊழியர்கள் வேலைக்காக நிறுவனத்திற்கு செல்ல எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள தேவையில்லை.

நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் பணி நிமித்த தொடர்பை மின்னஞ்சல், தொலைபேசி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் உதவியுடன் தனக்கு வசதியான இடத்தில் இருந்து பணிபுரியும் அம்சங்களைக் கொடுக்கிறது.

Reuters கருத்து கணிப்பின்படி, உலக முழுவதிலும் உள்ள 5 இல் 1 பணியாளர்கள் தொலைத்தொடர்பு சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், இலத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் 10 சதவீதத்தினருக்கும் அதிகமாக இந்த வேலையை தேர்வு செய்கின்றார்கள்.

  • பணியாளர்களின் நன்மைகள்:

நிறுவனத்தில் காலையில் சென்று பின் அதனுடன் இரவில் திரும்பும் பணியாளர்கள் எவ்வித ஓய்வும் இன்றி பணியமர்த்தப்படுகிறார்கள். ஒரு சிலர் அரசாங்கம் மற்றும் வார விடுமுறை கூட வழங்காமல் கூடுதல் பணி சுமையை கொடுக்கிறார்கள். அதனால், ஆண்களை விட பெண்கள் இவ்வித வேலை பளுவினால் மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள். இவ்விதமான சூழலை தவிர்க்க தொலைத்தொடர்பு வேலைகளை செய்வதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

இதில் பணியாற்றும் நபர்கள் விடுமுறைக்கு எங்கு சென்றாலும், விடுமுறையை கொண்டாடிய படியே வேலையையும்  செய்து முடிக்கலாம்.

விடுமுறையில் வேலை
  • நிறுவனத்தின் நன்மைகள்:

புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களை பணியில் அமர்த்தக் காரணம், நிறுவனத்தின் செலவை குறைத்து வருமானத்தை பெருக்குவது தான்.

பெரிய அலுவலகம் தேவைப்படாததால், அதனை சார்ந்த கொள்முதல் செலவை குறைத்து, நிதி பற்றாக்குறை ஏதுமின்றி நிலையாக நிறுவனத்தை நடத்த உதவுகிறது.

  • வேலை வாய்ப்புகள்:

நிறுவனத்தின் நிர்பந்தத்திற்கேற்ப பல வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. உதாரணமாக: இனணய வடிவமைப்பாளர், கணக்காளர், எழுத்தாளர், தொலைபேசி அழைப்பு மற்றும் மின்னஞ்சல் தகவல்களை கையாளுபவர், மொழிபெயர்ப்பாளர், நிர்வாக உதவியாளர், பொறியாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் பல துறைகளுக்கான வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன.

03. சமூக வலைதளங்களில் இருந்து போதிய வருமானத்தை ஈட்டுவது எப்படி?

உலகளவில் இணையதளத்தை  உபயோகிப்பவர்கள் வரிசையில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. இவ்விரு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகள் வரிசையில் முன்னேற உதவக் கூடிய ஆயுதமாக இணையத்தள ஆதிக்கத்தை நம்பியிருக்கிறது. இணையதள வளர்ச்சியினால் இந்தியா போன்ற நாடுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொண்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதிலும், பெரும்பாலான படித்த இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய நேரத்தை அதிகமாக செலுத்தி வருகின்றனர்.

சமூக வலயத்தளம்

இப்படி பட்ட இளைஞர்கள் வளர்ந்து வரும் நிறுவனங்களை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதன் மூலம் அதற்குரிய வருமானத்தை சுலபமாக பெற முடிகிறது. இதற்கு படைப்பு திறன் ஒன்று இருந்தாலே போதும். உதாரணமாக: YouTube இல் பார்வையாளர்களை வெகுவாக கவரக்கூடிய வீடியோக்களை பதிவேற்றுவதன் மூலம் கூடுதல் வருமானத்தை வீட்டில் இருந்தவாறே பெற முடியும்.

அடுத்ததாக, மக்கள் விரும்பும் அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் தனக்குரிய கணக்கை தொடங்கி, குறைந்த விலையில் விற்பதன் மூலம் கமிஷன் தொகையுடன் கூடிய நிலையான வருமானத்தை பெற முடியும். ஆனால், இங்கு நம்பத்தகுந்த மொத்த வியாபாரிகளிடமிருந்து பொருட்களை பெற்றால் வாடிக்கையாளரிடமிருந்து வரும் எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கலாம்.

04.  அதிக வருமானத்தை பெறும் கற்பிப்பாளர்கள்  :

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவும், வெகு தொலைவில் சென்று பாடங்களை கற்கவும் அல்லது கற்பிக்கவும், ஆசிரியர் மற்றும் மாணவர்களால் கூடாமல் போகிறது. மேலும், மாணவர்கள் தாங்கள் பங்குகொள்ளும்  சிறப்பு வகுப்பில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் கற்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால், இவ்விரு தரப்பினரும் பயன் அடைய இணைய வழி கற்றல் மற்றும் கற்பித்தல் தளங்கள் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய தளங்களில், பள்ளியில் படிக்கும் மாணவன் முதல் கணினி பொறியாளர்கள் வரை தாங்கள் விரும்பும் வகுப்புகளை பெற முடிகிறது. பெண்களுக்கு, இந்த தளங்கள் மூலமாக வீட்டில் இருந்த படி வேலை செய்ய வசதியாக உள்ளது. இணைய வழி கற்றலாக இருப்பதால் மாணவர்கள் விரும்பும் நேரத்தில் ஆசிரியர்கள் கற்க தயாராக  இருப்பது அவசியம்.

இணைய வழி இல்லாமல் ஆசிரியரிடம் இருந்து நேரடியாக கற்றுக்கொள்ள வேண்டிய விருப்பமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, சிறுவர்களுக்கு, கற்றலில் விவேக இல்லாதவர்கள் மற்றும் போட்டி தேர்வை சந்திப்பவர்கள் போன்றோர் ஆசிரியரை தன் வீட்டிற்கு அழைத்தோ அல்லது ஆசிரியர் வீட்டிற்கு சென்றோ கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது. இங்கு ஆசிரியரே ஒரு பாடத்திற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்கிறார்.

இணையம் மற்றும் இணைய வழி அல்லாமல் வேறு வழியில் கற்பிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தால், youtube போன்ற சமூக தளங்களில் நீங்கள் விரும்பும் நேரத்தில் கற்பித்து பதிவேற்றலாம். அதில், சமையல், கல்வி, வேலைகான ஆலோசனைகள் போன்ற பல காரியங்களை குறித்து கற்பிக்கலாம். ஆனால், இங்கு பயன் பெறுபவர்களிடம் நேரடியாக வருமானத்தை பெற முடியாது என்றாலும், உங்கள் பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள் பொருத்து அதற்குரிய கணிசமான தொகையை வீட்டில் இருந்தவாறே பெறலாம்.

05. வீட்டில் இருந்து செய்யும் வேலைக்கான அழைப்பை பெறுவது எப்படி?

ஒரு நிறுவனத்தின் காலியிடத்தை அறிய முன்பெல்லாம், செய்தித்தாள்களை கொண்டு தான் அறிய முடிந்தது. அதன் பிறகு, இணைய தளத்தில் காலிப்பணியிட விவரங்களை கொண்டு நிறுவனத்தை அணுக முடிந்தது. இந்த இரு அம்சங்களும் தற்பொழுதும் நடைமுறையில் இருந்தாலும் சரியான பணியை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது.

காலிப்பணியிடங்களுக்கான செய்தியை அறிந்தவுடன் நேர்காணலுக்காக தன்னை தயார்ப்படுத்தி, வெகு தூரம் பயணித்து குறிக்கப்பட்ட நாளில் நேர்காணலில் கலந்து கொண்டால், கிடைக்கும் பதில் உங்களை தொடர்பு கொள்வோம் சென்று வாருங்கள் என்பார்கள். அதன் பிறகு, எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்பது கேள்வி குறியாகவே இருக்கும்.

நம்பகத்தன்மையுடைய  வேலை

அதனால், காலிப் பணியிடங்கள் என்ற உடனே தீவிரமாக செயல்படாமல்; முதலில், தனக்குரிய திறமைகள் மற்றும் தகுதிகள் எந்த நிறுவனத்திற்கு தேவைப்படும் என சற்று நிதானித்து ஆலோசித்து, அதன் பின் உங்கள் திறமைகளுக்கான வேலையை மின்ட்லி, இண்டீட், நாஃக்குரி போன்ற வேலை வாய்ப்பு தேடுதல் பக்கங்களுக்கு சென்று, உங்கள் வேலைக்குரிய பின்னணி விவரங்களை அத்தளங்களில் பதிவேற்றினால், உங்களைத் தேடி வேலைக்கான அழைப்பு வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

வீட்டில் இருந்து பணிப்புரிவது அற்புதமான சூழலைக் கொடுக்கும். அது நாம் எங்கே, எப்படி, எதை தேர்ந்தெடுக்கிறமோ அதைப் பொறுத்து நாம் விரும்பும் வருமானமும், வேலையும்  அமையும். அதனால், வீட்டில் இருந்து வேலையை தேடுவதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட 5 முக்கிய குறிப்புகளை நினைவுகூர்ந்து செயல்படுங்கள்.

Language