விற்பனைத்துறையானது எந்த ஒரு தொழில் துறைக்கும் இதயம் போன்றது எனலாம்மேலும் விற்பனைத்துறையின் வளர்ச்சியைப் பொருத்துதான் எந்த ஒரு தொழில் துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை போன்ற அனைத்தும் அமைகிறது.

விற்பனைத்தொழில் சரியாக நடக்காவிடில் அனைத்துப்பொருட்களும் தேங்கிவிடும், நாட்டின் பொருளாதாரம் விற்பனையைச் சார்ந்திருக்கிறது என்பதால் அது பெரிய அளவிலான வீழ்ச்சியை நாட்டில் ஏற்படுத்திவிடும்.

அத்தகைய முக்கியத்துவம் கொண்ட விற்பனைப்பிரிவில் அதிக அளவில் வருமானம் ஈட்ட வழிவகுக்கும் சில வேலைகளை நாம் இங்கு பார்க்கலாம்.

1. மென்பொருள் விற்பனை நிபுணர் (Software Sales Expert): 

ஒரு விதிவிலக்கான விற்பனை வேலை என்றே கருதலாம். இந்த விற்பனையானது சுவாரஸ்யமானதும் கூட. காரணம், மென்பொருள் விற்பனை துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப தயாரிப்புகளை அல்லது மற்ற தொழில்களுக்கு சேவைகளை விற்க வேண்டும்.

 உங்கள் தயாரிப்பு பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் நீங்கள் தெரிந்திருப்பது மிக அவசியமான ஒன்று ஆகும். அப்போதுதான் வாடிக்கையாளர்களிடம் நம்முடைய மென்பொருள், இயந்திரம், கருவி அல்லது பிற சிக்கலான தொழில்நுட்ப தயாரிப்புகள் ஆகியவற்றின் பயன்பாட்டினைப் பற்றி விற்பனையாளர்களால் விளக்க முடியும்.

சம்பள அளவு:

இந்த வேலைகளில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவசியம் தேவை. மென்பொருள் விற்பனை நிர்வாகிகள், மென்பொருள் விற்பனை மேலாளர்கள், மென்பொருள் விற்பனை பொறியாளர்கள், மென்பொருள் விற்பனை அபிவிருத்தி பிரதிநிதிகள் போன்ற ஒவ்வொரு நபரின் பதவிக்கும் சம்பளம் வேறுபடுகின்றன. இந்த துறையில் பணிபுரியும் எவரும் எளிதாக 30,000 ஆயிரத்திலிருந்து தொடங்கி 80,000 ஆயிரம் வரை பெறமுடியும்.

 

2. குறிப்பிட்ட பகுதியின் விற்பனை மேலாளர் (Area Sales Manager)

ஒரு குறிப்பிட்ட பகுதியின் விற்பனை மேலாளரின் முக்கிய வேலை, ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் விற்பனை திட்டங்களைத் திட்டமிடுவதாகும். ஒரு பகுதி விற்பனை மேலாளர் உத்திகள் மட்டுமல்லாமல், களப்பணியைச் செய்யும் மிகவும் திறமையான நபர்களின் குழுவையும் மேலாண்மை செய்கிறார்.

விற்பனைப்பிரிவில் அதிக அளவில் வருமானம் உள்ள சிறந்த 10 வேலைவாய்ப்புகள்

சம்பள வரம்பு:

ஒரு பகுதி விற்பனை மேலாளரின்  சராசரி சம்பளம் 25,000 முதல் 40,000 வரை ஆகும்.

3. நிதி சேவைகள் ரீதியான விற்பனை முகவர் (Financial Services Sales Agent): 

நிதி விற்பனை பிரதிநிதிகள் வேலையானது இன்று நீங்கள் காணக்கூடிய அற்புதமான தொழில் வேலைகளில் ஒன்றாகும். அவர்களின் வேலையானது நிறுவனங்கள் அல்லது தனிநபர்களை சந்தித்து அவர்களுக்கு நிதிரீதியான தயாரிப்புகளை விற்பது ஆகும். இந்த விற்பனையில் இருசாராரும் பயன்பெறுவர்.

வழக்கமாக வங்கிகள், பணப்பாதுகாப்பு தேவைப்படுவோர், சாத்தியமான முதலீட்டாளர்களைத் தேடுகின்ற ஆலோசனை நிறுவனங்கள் போன்ற அனைத்தையும் தங்களுடன் வர்த்தகம் கொள்ள பிரதிநிதிகள் அறிவுறுத்துவர்.

 உதாரணமாக, ஒரு நிதி சேவைகள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை நிர்வகிப்பதற்கான பொறுப்பு, வாடிக்கையாளரின் கணக்குகள், கிரெடிட் கார்டுகள், கடன்கள், காப்பீட்டுக் கொள்கைகள், பரஸ்பர நிதிகள், பங்குகள் மற்றும் அவர்களின் ஓய்வூதியத் திட்டம் போன்ற அனைத்திலும் கூட பங்கேற்று நிர்வகிப்பது அவசியமாகும்.

சம்பள அளவு:

நடுத்தர சம்பளம் 25,000 முதல் 75,000 வரை பிரிவுகளுக்கு ஏற்ப இருக்கும். சில நேரங்களில் இவர்களுக்கு கமிஷன் தொகை சம்பளத்துடன் கிடைக்கும். அதாவது இவர்களால் பணம் டெபாசிட் செய்பவர்கள், இவர்களின் மூலம் கடன் பெறுவோர்கள் போன்றவைகளில் நிறுவனத்திலிருந்து கூடுதலாக கமிஷன் தொகை கிடைக்கும்.

4. நிலத்தரகர் (Real Estate Broker): 

வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் மீட்பு பொருளாதாரம் இந்த துறையின் வளர்ச்சிக்கு மீண்டும் பங்களிப்பு செய்கின்றன. சொத்துக்களை வாங்க, விற்க மற்றும் வாடகைக்கு எடுக்க வாடிக்கையாளர்களை அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். விலைகள், அடமானங்கள், சந்தை நிலைமைகள் மற்றும் பிற தகவல்கள் குறித்து அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

விற்பனைப்பிரிவில் அதிக அளவில் வருமானம் உள்ள சிறந்த 10 வேலைவாய்ப்புகள்

சம்பள வரம்பு:

ஒரு நிலத்தரகரின்  சராசரி சம்பளம் 50,000 முதல் 70,000 வரை ஆகும்.

5. மருத்துவ சாதன விற்பனை பிரதிநிதிகள் (Medical Equipment sales Representative): 

அதிக சம்பளம் மற்றும் போனஸ் உடன் நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்தது மருத்துவ சாதன விற்பனை பிரதிநிதிகள் வேலைகாரணம் நாம் வெவ்வேறு இடங்களுக்குத் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

விற்பனை பிரதிநிதிகள் சில நேரங்களில் மருத்துவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் மற்றும் அவர்கள் மருத்துவ பொருட்களின் செயல்திறனை நிரூபிக்க வேண்டும். மருத்துவ சாதன விற்பனைத் தொழில் நாம் நினைப்பதைவிட மிகப் பெரியது மற்றும் தற்போது கணிசமான தொழில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது 

மருத்துவ தொழில்நுட்பத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்களாக அணிந்துகொள்ளும் முறையில் அமைந்த உடற்பயிற்சித் தயாரிப்புகள், ரோபோடிக் அறுவைசிகிச்சை உபகரணங்கள் மற்றும் பல வந்துவிட்டன. இந்த பிரிவில் தங்கள் பொருட்களின் தேவை உள்ள சாத்தியமான வாடிக்கையாளர்களைப் பார்ப்பதுதான் விற்பனை முகவரின் முதல் வேலை, பிறகு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து நுகர்வோருக்கு அந்தத் தயாரிப்பின் தேவையை எடுத்துக்கூறி அவர்களை வாங்கச்செய்வது அவர்களின் அடுத்த பெரும் வேலை. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் தயாரிப்பில் பெரும்புரட்சியை உருவாக்கலாம்.

சம்பள வரம்பு:

ஒரு மருத்துவ சாதனம் விற்பனை பிரதிநிதிக்கான சராசரி ஊதியம் 30,000 முதல் 65,000 வரை ஆகும். 

6. தொலைத்தொடர்பு விற்பனை (Information Technology Sales Officer): 

அதிக சம்பளம் வாங்கும் மற்றொரு விற்பனை வேலை, நெட்வொர்க் அல்லது பாதுகாப்பு சேவைகள் போன்ற தொலைதொடர்பு தயாரிப்புகளை பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது. நீங்கள் அவர்களின் நன்மைக்காக இருப்பதால், பரந்தளவிலான தயாரிப்புகள் விற்கப்பட்டு, உயர் கமிஷன்கள் மற்றும் நல்ல சம்பளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

உங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் கணக்குகளை பராமரித்தல் மேலும் சேனல்களில் தொலைதொடர்பு தயாரிப்புகளை விரும்பும் புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டுவருதல் இவர்களின் தலையாயப் பணியாகும். 

சம்பள வரம்பு:

ஒரு தொலைத்தொடர்பு விற்பனை மேலாளரின் சராசரி சம்பளம் 25,000 முதல் 40,000 வரை ஆகும்.

7. விளம்பர விற்பனை முகவர் (Advertisement Sales Agent): 

இந்த வேலையானது அதனுடன் தொடர்புடைய மற்ற விளம்பர விற்பனை நிறுவங்களுடன் தீவிர போட்டியில் இயங்கக்கூடியதாகும். விளம்பரங்கள் பொதுவாக செய்தித்தாள், வானொலி, ஒரு தொலைக்காட்சி சேனல் அல்லது இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரம் போன்ற அனைத்தின் மூலமும் வெளியாகும். இந்த அனைத்து ஊடகங்களையும் முறையாகக் கவனித்து விளம்பர இடைவெளிகளை பிற வணிகங்களுங்களுக்கோ அல்லது தனிநபர்க்கோ விற்க விளம்பர விற்பனை முகவர் பொறுப்புடையவராவார்.

சம்பள வரம்பு:

இந்த சேவை பிரிவில் 30,000 முதல் 80,000 வரை வழங்கப்படுகிறது. இணையம் மற்றும் தொலைக்காட்சியில் சேவைகள் மற்றும் விளம்பரங்கள் பயன்பாட்டில் அதிகரித்துவரும் எந்தவொரு விற்பனையாளருக்கான ஒரு சரியான வேலை இது.

விற்பனைப்பிரிவில் அதிக அளவில் வருமானம் உள்ள சிறந்த 10 வேலைவாய்ப்புகள்

8. காப்பீட்டு விற்பனை முகவர் (Insurance Sales Agent):  

ஒரு காப்பீட்டு விற்பனையாளர் சுகாதாரம், சொத்து, வாழ்க்கை, விபத்து போன்ற பல வகையான காப்பீடுகளை விற்கிறார்விற்பனைப்பிரிவில் காப்பீட்டினைப் பற்றி சரியான அறிவு இருக்க வேண்டும்வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்யும்படியான காப்பீடுகளை புரியும் விதமாக விளக்குதல் வேண்டும். சமீபத்தில் இந்த தொழில்துறையில் ஆன்லைன் மூலமே காப்பீடுகள் வாங்கும் அளவு இத்துறை பற்றிய அறிவு அனைவரிடமும் வந்துவிட்டது. 

எனினும் பெருநிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் கிராமப்புறங்களை நேரடியாககச் சென்று அணுக இத்துறையில் விற்பனை முகவர்க்கான வேலையின் தேவை இருந்துகொண்டே உள்ளது. இந்த வேலையில் சிறந்த விஷயமானது, உங்கள் சொந்த நுகர்வோர் தளத்தை கட்டியமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பாக இருப்பீர்கள். எனவே, நீங்கள் யாரைவேண்டுமானாலும் தொடர்பு கொண்டு சிறந்த வாடிக்கையாளராக மாற்றலாம்.

சம்பள வரம்பு:

காப்பீட்டு விற்பனை முகவர் சராசரியாக 25,000 முதல் 8,00,000 வரை பெறுவர், அதைத்தவிர கமிஷன் தொகையானது இவர்களினால் விற்கப்படும் காப்பீட்டின் மதிப்பைப் பொறுத்து அதிகரிக்கும்.

9. தொடக்க நிலை நிறுவனத்தின் வணிக மேம்பாடு விற்பனையாளர் (Start up Companies Business Developement sales Officer)

ஒரு தொடக்க நிலை நிறுவனத்திற்கான வணிக மேம்பாட்டு விற்பனையாளராக பணியாற்றுவதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறமுடியும். நிறுவனமானது பெரியதாக இருக்கும்போது மிகவும் இலாபகரமானதாக இருக்கும்.

விற்பனைப் பிரதிநிதிகள் எல்லா நேரங்களிலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதை மிக அவசியமான ஒன்று, புதிய வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பது, கண்டுபிடித்த பிறகு நிறைய திறன்களைக் கொண்டிருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை வர்த்தகத்தில் ஈடுபடுத்த முடியும். குறிப்பாக தனித்திறமைகள்: நிதி சந்தைகளைப் பற்றிய அறிவு, வாடிக்கையாளருடன் ஒரு வலுவான உறவை நிறுவும் திறன், அற்புதமான தீர்வுகளை வழங்குவதல் திறன், மிக முக்கியமாக பேச்சுத்திறன் போன்றவை விற்பனைப் பிரதிநிதிகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவும்.

சம்பள வரம்பு:

ஒரு தொடக்க நிலை நிறுவனத்தின் வணிக மேம்பாடு விற்பனையாளரின்  சராசரி சம்பளம் 25,000 முதல் 40,000 வரை ஆகும்.

ஃபாராமெடிக்கல் விற்பனை பிரதிநிதி

10. ஃபாராமெடிக்கல் விற்பனை பிரதிநிதி (Pharmaceutical Sales Representative): 

ஒரு ஃபாராமெடிக்கல் விற்பனை பிரதிநிதியாக, உங்கள் நிறுவனத்தின் மருந்துகளை மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பதே உங்கள் வேலையாக இருக்கும். அதை எப்படி பரிந்துரைத்தால் நீங்கள் மக்களை நம்ப வைக்க முடியும் என்பதை நீங்கள் மருத்துவ ரீதியாக கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு மருத்துவ ரீதியான படிப்பு அவசியமான ஒன்றாக உள்ளது.

சம்பள வரம்பு:

ஒரு ஃபாராமெடிக்கல் விற்பனை பிரதிநிதியின் சராசரி சம்பளம்  20,000 முதல் 35,000 வரை ஆகும்.

 

 

 

Language