இந்திய வம்சா வழியில் வந்த வெளி நாடு வாழ் இந்தியர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். இவர்களின் பங்களிப்பு இந்திய பொருளாதார வளர்ச்சியில் எப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. உயர் கல்விக்காக, வேலைக்காக, புதிய கலாச்சாரத்தை அறிவதற்காக, வாணிபத்திற்காக போன்ற பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்த இந்தியர்கள், வெளி நாடுகளில் வசித்து வருகிறார்கள். ஆனால், வெளி நாட்டிற்கு சென்ற 70 சதவீதத்தினர், தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாயகத்தில் தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்.

என்.ஆர்.ஐ

 

இந்த விருப்பத்தில் ஏற்படும் முக்கிய குழப்பம் எதுவென்றால், தாயகம் திரும்பும்போது நமக்கான வேலையை எப்படி கண்டுகொள்வது? எந்தத் துறையில் வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது? யாரை அணுகினால் சரியான ஆலோசனை கிடைக்கும் போன்ற பல்வேறு கேள்விகள் தாயகம் திரும்பும் நேரத்தில் எழுவதுண்டு. இந்த அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும், சென்னை நகரத்தில் வேலை தேடும் வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு வழிகாட்டுவதாகவும் அமையும் இந்த கட்டுரை. சென்னையில் பல்வேறு வாய்ப்புகள் இருந்தாலும் சென்னை மாநகரத்தைப் பற்றி முக்கியமாக தெரிந்துக் கொள்ளவேண்டியது அவசியம். அப்பொழுதுதான் எந்தவொரு பயமும் இன்றி புதிய பயணத்தை மேற்கொள்ள முடியும்.

சென்னை மாநகரம் :     

தமிழ்நாட்டின் தலை நகரமும், இந்தியாவின் முக்கிய பெரிய நகரங்களில் ஒன்றானதுமான சென்னை மாநகரம் உலகில் 35 பெரிய மாநகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. சென்னை வாழ் மக்கள் வாணிபத்தில் சிறந்தவர்கள். உணவு மற்றும் கலாச்சாரங்கள் இங்கு தலை சிறந்து காணப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப துறை மேன்மேலும் வளர்ந்து வருகிற நகரமாகவும், கனரக வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதிலும் சென்னை முக்கிய நகரமாக இயங்கி வருகிறது.  இந்திய பொருளாதாரத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. அதனால், புலம் பெயர்ந்த இந்தியர்கள் சிறந்த வேலையை அடைய சென்னையை நோக்கி திரும்புகிறார்கள்.

சென்னை

 

சென்னையின் பொருளாதார வளர்ச்சியின் பாதை :

சென்னை நகரம் இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்பட காரணம் உண்டு. ஏனெனில், சென்னையில் தானியங்கி (ஆட்டோமொபைல்) உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் அதிகமாகக் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் 7 நாட்களும் இயங்கும் படி அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால், இனி இரவு முழுவதும் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டிருக்கும். இதன் பயனாக தலைநகரம் சென்னையில் வேலைவாய்ய்பு அதிகரிப்பதோடு, இந்தியாவின் வர்த்தகமும் இதனால் அதிகரிக்கக்கூடும்.  

சென்னையில் உள்ள முன்னணி தொழில்கள் : ஆட்டோமொபைல், மென்பொருள் சேவைகள், பெட்ரோ கெமிக்கல்ஸ், நிதி சேவைகள், சுகாதாரம், ஜவுளி மற்றும் வன்பொருள் உற்பத்தி.

அதிலுள்ள குறிப்பிட்ட துறைகள் மட்டும் விவரிக்கிறேன்.

சென்னையின் முக்கியத் துறைகள் :

  • சுகாதாரத் துறை

சுகாதாரத் துறையில் சென்னை முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த நகரமானது சிறந்த மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது. அவை, அப்போலோ மருத்துவமனை, மியாட் மருத்துவமனை மற்றும்  லைஃப்லைன் மருத்துவமனைகள். இவைகள் அனைத்தும் உயர்நிலை, பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளாக உள்ளது. 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புற்று நோய் மையம் சென்னையில் உள்ள அடையாறில் அமைந்துள்ளது. உலகில் இருந்து பல்வேறு நபர்கள் சிகிச்சைக்காகவும், பயிற்சிக்காகவும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளை நாடுகிறார்கள்.

  • வங்கி மற்றும் நிதி துறை

1843 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் முதன் முதலில் சென்னையில் நவீன வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னையின் தலைமையிடமாக கொண்டு பல பெரிய நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு உலக வங்கிகளும் இயங்கி வருகிறது.

  • மென்பொருள் மற்றும் மென்பொருள் சேவைகள்

மென்பொருள் வளர்ச்சியே சென்னையை சிறந்த மாநகரமாக உருவாக்கியுள்ளது. இந்த துறை மூலம் இலட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்கள். மென்பொருள் நிறுவனங்களான அசன்ஜர், காக்னிசாண்ட், எச்.சி.எல், இன்டெல், அமேசான், டெக் மஹேந்திர மற்றும் பல நிறுவனங்கள் சென்னையை சுற்றி அலங்கரிக்கின்றன. ஆசியாவின் மிகப்பெரிய டைடல் பூங்காவான தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இங்கு அமைந்துள்ளது.      

  • மோட்டார் வாகனத் துறை

மோட்டார் வாகன உற்பத்தியில் அதிக பங்களிப்பை இந்நகரம் கொடுப்பதால் இந்தியாவில் டெட்ராயிட் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மோட்டார் வாகன ஏற்றுமதியில் 60 சதவிகிதம் உற்பத்தியினை இந்நகரம் அளிக்கிறது. மேலும், சென்னை உலகளாவிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. அவை பி.எம்.டபுள்யூ, ஹூண்டாய், ஃபோர்ட், நிசான், ரெனால்ட், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், அசோக் லேலாண்ட், ராயல் என்பீல்ட், எம்.ஆர்.எப் மற்றும் பல.    

சென்னை

 

தாயகம் திரும்புவோரின் மனநிலை :

உணவு, நண்பர்கள், உறவுகள், பருவநிலை மாற்றம், குடும்பம் போன்ற பல காரணங்கள் தாயகம் திரும்ப சொல்லப்பட்டாலும், அனைத்தையும் தாண்டி தனக்கென இருக்கும் விடுதலை உணர்வு தாயக மண்ணில்தான் சுவாசிக்க முடியும்.

இந்தியாவில் குறைந்தளவு வருமானத்தை வைத்துக்கூட காலத்தை ஓட்டிவிட முடியும் அதற்கு மேலாக சேமித்து வைத்து எதிர்கால செலவுகளை திட்டமிட்டு நடத்திட முடியும்.

குடும்பத்தோடு வாழ வேண்டும், தனக்காக காத்திருக்கும் உறவுகளோடு நேரத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு தாயகம் திரும்பும் நிலையில் ஒருசாரார் இருக்கிறார்கள்.

வெளிநாட்டில் கற்றுக்கொண்டதை தாயகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் மற்றும் வருமானத்தை தாயகத்தில் முதலீடு செய்து புதிய வியாபாரத்தை தொடங்குவது; கற்ற அனுபவங்களை வைத்துக் கொண்டு உயர்ந்த பதிவியை நாடுவது போன்ற மனநிலையும் பரவலாகக் காணப்படுகிறது.  

பெரும்பாலானோர் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருந்து திரும்பி தாயகத்தை நோக்கி வருகிறார்கள். அங்கு வாழ்க்கை ஆடம்பரமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் வேடிக்கைகள் அற்ற தனிமையை அதிகமாக உணருவார்கள். அங்கு புதிய நிறுவனங்களை ஆரம்பிக்க திட்டப்படுத்தி இருந்தாலும், இந்தியர்கள் போன்ற ஊழியர்களையும், சந்தைப்படுத்துவோரையும் கண்டுப்பிடிப்பது மிக குறைவு.

கவனிக்க வேண்டியவை :

தாயகம் திரும்பும்போது வரித் திட்டங்களை திட்டமிட வேண்டும். வெளிநாட்டில் இருந்து தாயகத்தில் நிரந்தரமாக ஒருவர் நிதியாண்டின்படி, 182 நாட்கள் மேல் தன் தாயக நாட்டில் தங்கினால், அவர் இந்திய குடியுரிமை அடைந்திடுவார். அதன்படி, உலகளாவிய வருமானத்தில் இருந்து வரியை இந்தியாவிற்கு அளித்திட  வேண்டும். என்.ஆர்.ஐயினை ஒருவர் இழந்த பிறகு வரி விதிகளைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியம். மேலும், நிதி திட்ட ஆலோசகரை அணுகுவது சிறந்தது.

என்.ஆர்.ஐ ஆக திரும்பும் போது தன்னுடைய நண்பர்களை தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து வைத்திருப்பது நல்லது. மேலும், பெருநிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்களிடம் இருந்து வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். சமூக வலைதளங்களில் பிறருடைய கருத்துக்களை கேட்டு அதன்படி திட்டங்களை வகுத்திடலாம்.

அயல்நாட்டில் வாங்கிய அதே வருவாய், இந்தியாவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், உயர்ந்த பதவிகளையும், கூடுதல் வருவாயையும் பிற நிறுவனங்கள் என்.ஆர்.ஐக்கு வழங்கி வருகின்றது.

சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு என்ன?  

நாம் முன்பு பார்த்ததுபோலவே, சென்னை என்னும் மாநகரம் உற்பத்தி துறையிலும், தொழில்நுட்ப துறையிலும் சிறந்திருக்கிறது. சென்னையில் இல்லாத பெருநிறுவனங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வேலை வாய்ப்புகளை உள்ளூர் வாசிகளுக்கும், புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கும் சென்னை வழங்கி வருகிறது. பெருநிறுவனங்கள் பொதுவாக எதிர்பார்ப்பது திறமைமிக்க பணி அனுபவம் உடையவர்களைத்தான். அதனால், என்.ஆர்.ஐ உடையவர்கள் சுலபமாக தாங்கள் விரும்பும் துறையில் சற்று கூடுதல் வருமானத்தோடு வேலையைப் பெற்று விடுகிறார்கள். இப்படி ஒரு வரவேற்பு இத்துறையில் இருப்பதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் உள்ள குழப்பத்தில் இருந்து சற்று விடுதலையாகிறார்கள்.  

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சென்னையில் பல வாய்ப்புகள் இருந்தும் சரியான வழிகாட்டி இல்லாததால், ஒரு சிலரால் சரியான வேலையை கண்டடைய  முடியாமல் போகிறது. அதனால்தான் மின்ட்லி நிறுவனம் என்.ஆர்.ஐ நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை அளிப்பதோடு, ஆலோசனையும் வழங்கி வருகிறது. இவர்களுடைய 24/7 வாடிக்கையாளர் சேவையை தொடர்புக் கொண்டு வேண்டிய விளக்கங்களை பெற்றிடலாம்.    

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

Language