இப்போது இந்தியாவில் நீங்கள் வேலையில்லாமல் இருக்கிறீர்களா ?

உங்கள் பதில் ஆம் என்றால், இந்த ஒலி பதிவினை கவனமாக கேட்கவும்.

 

இந்தியாவில் ஆன்லைனில் இயங்கும் பல பகுதி நேர உள்ளடக்க எழுத்து தளங்கள் உள்ளன.

வேலை என்பதே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணி என்பது படிக்காதவர் உட்பட

கல்லூரியில் படிக்கும்போது வரும் நிறுவனங்களின் நேர்காணல் வாய்ப்பில்  பணி கிடைக்கவில்லையா ! கவலைப்படாதீர்கள். இங்கே நான் வேலைகளை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சிறந்த குறிப்புகள் கொடுத்திருக்கிறேன்! இன்றைய காலகட்டத்தில் வேலையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல, ஏனென்றால் பல இளம் பட்டதாரி மாணவர்கள் இன்று வேலையில்லாதவர்கள். இந்தியாவில் எங்கு வேலை இருந்தாலும் நம்மால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் (உண்மையில், உலகில் எங்கு வேலை வாய்ப்புகள் இருந்தாலும் யாரும் காணலாம்).

ஆதிகாலத்தில் வேலை என்பது மனிதன் தங்கள் அன்றாட உணவினை தேடுவதாக இருந்தது. உணவை சேர்த்து வைக்க முடியாது என்பதால் அன்றாடம் வெளியே போய் உணவு தேடுவர். கிடைத்தவைகளை உண்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டினர். ஆனால் இக்காலத்தில் வேலை என்பது உணவை தேடுவதாக இருப்பதில்லை.

மனிதனின் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு ஊடகமாக வேலை உள்ளது. ஒவ்வொரு மனிதனின் கௌரவப் பட்டியலில் வேலை முதலிடத்தில் இடப்பெற்று விட்டது. இத்தகைய விழிப்புணர்வு மாணவர்களிடையே மிகச்சிறப்பாக உள்ளது, ஆம் அன்றைய கால கட்டங்கள் போல் அல்லாமல் மாணவர்கள் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும்போதே வேலை வாய்ப்புக்காக நிறுவனங்களுடன் இணைப்பில் உள்ள கல்லூரியையே தேர்ந்தெடுக்கின்றனர்.

 

கல்லூரியில் பாடப்பிரிவை தேர்ந்து எடுக்கும்போது சரியாகத்தேர்வு செய்யாமல் விட்டுவிடுகிறோம், அதன்பின் படிக்கும் காலங்களில் சரியாக எதையும் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். இப்படி அனைத்தையும் விட்டுவிடுவதைப் போலவே நாம் நமக்கு தகுந்த வேலையை சரியாக தேடாமல் விட்டுவிடுகிறோம்.

வழிகாட்டல் சேவைகள் :

பல பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டல் சேவைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் நமக்கு ஆலோசனை நேரத்தை வழிகாட்டி செயலாளருடன் ஏற்பாடு செய்வதன் மூலம் நமக்கு தேவையான ஆலோசனைகள் பெறமுடியும்.