இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி பல ஆண்டு காலமாக இருந்து வந்தாலும் தற்பொழுது அதைப் பற்றி தீவிரமாக பேச பல காரணங்கள் உண்டு. அதிலும், வேலை வாய்ப்பை அதிகமாக உருவாக்கி கொடுக்கும் முக்கிய மாநிலமான தமிழ்நாட்டில் வேலையின்மை நெருக்கடி அதிகமாக கவனிக்கப்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தியா வளர்ந்து வரும் நாடு என்ற பட்டியலில் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மாணவர்கள் படிக்கும் போதே அலுவலகத்திற்கு சென்று வேலைப் பார்ப்பது சுலபமான காரியமில்லை.  அதற்கு நேரமும், உழைப்பும் அதிகமாக செலவிட வேண்டியதாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில், ஆன்லைனில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகிறது.

மாணவர்களுக்கான வேலை

 

உண்மையான வேலைகளை தேடுபவர்களா நீங்கள்? மோசடி நிறுவனங்கள் இடம் மாட்டிக்கொள்ளாமல்   நம்பகத்தன்மை உடைய வேலைகளை வீட்டில் இருந்தவாறே செய்வது எப்படி? அலுவகத்திற்கு சென்று பணிபுரியும் போது கிடைக்கும் வருமானம் வீட்டில் இருந்து செய்தால் கிடைக்குமா? போன்ற பல கேள்விகளை உடையவர்களாக இருந்தால், உங்களுக்கான பதில் தயாராக உள்ளது.

 

               உண்மையில், இந்த நவீன உலகத்தில் ஒருவரின் சம்பாதிப்பு ஒரு
குடும்பத்திற்கு போதுமானதாக இருப்பதில்லை. ஆனாலும் வீட்டில் ஒருவர்
குழந்தைகளையோ அல்லது வயதானவரையோ பார்த்துக்கொள்ள வீட்டிலே
இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கணிக்க முடியாத வகையில்
வேலைகளை வீட்டில் கொண்டிருப்பதால், உங்களால் வேலை செய்ய
முடியாது என்று அர்த்தமில்லை.

           “மனமிருந்தால் மார்க்கமுண்டு”