இணையதள சேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. அதிலும், இந்தியா மக்கள் அடர்த்தி மிகுந்த நாடாக இருப்பதால் இணையதள சேவை நிறுவனங்கள் இங்கு தங்களுடைய கவனத்தை அதிகமாக செலுத்தி பயனாளர்களை ஈர்த்து வருகின்றன. பல ஆண்டு காலமாக இணையதளத்தில் ஆங்கில மொழியை கொண்டு தான் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது.

     இப்பொழுது இணைய தளத்தில் அனைவருக்கும் அனைத்து மொழிகளிலும் சிறப்பானதாக உள்ளடக்கம் கிடைப்பது இல்லை. இங்கு உள்ளடக்கம் என்பது நாம் தேடிவந்த கருத்துக்கள் கொண்ட தொகுப்பினைக் குறிக்கும். உதாரணமாக, உலகம் முழுவதிலும் ஆங்கில மொழியைப் பயன்படுத்துகின்றனர்.  ஆங்கில இலக்கியங்கள் தரமானதாகவும் தகுதியானதாகவும் கிடைக்கிறது.  ஆனால் சொந்த மொழியில் படிக்கும் பொழுது கிடைக்கக் கூடிய ஆனந்தம் மற்ற மொழியில் படிக்கும் பொழுது கிடைப்பது இல்லை.