உங்கள் தோற்றமே உங்களுடைய அடையாளமாக இருப்பது எப்படியோ, அதேபோல நிறுவனத்தின் அடையாளமாக, மக்கள் மனதில் வெகுவாக பதிந்திட விற்பனையாளர்களின் தோற்றம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு சீர்படுத்தும் செயல்முறை இத்துறையில் உள்ளவர்களுக்கு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையாளர்

 

இந்தியாவின் எஃப்.எம்.சி.ஜி (அதிவேக நுகர்வோர் பொருட்கள்) துறையானது அன்றாட தேவைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் சந்தைப்படுத்தக் கூடிய அனைத்து பொருட்களும் இந்த எஃப்.எம்.சி.ஜி துறையின் கீழ் வந்து விடுவதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் இவை அத்தியாவசிய தேவையில் ஒன்றாக இருந்து வருகிறது. இவை அனைத்திற்கும் மேலே, இத்துறையானது, இந்திய மின்வணிக சந்தை துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இவை கடந்த சில வருடங்களில் எதிர்பாராத வளர்ச்சியை‌ அடைந்துள்ளது.

விற்பனை துறையில் பணியாற்ற வரும் நபர்களுக்கு இலக்கு என்பது அதிக சவால் நிறைந்ததாக இருக்கும். நாம் செய்யும் வேலைகளில் இலக்கு ஒன்றை நிர்ணயிக்காமல் பணிபுரிந்தால் வேலையில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. அதே நேரத்தில், தனி திறமையும் வளர்ந்திடாது. இலக்கு இல்லாத எந்த வேலையாக இருந்தாலும் அதில் சுலபமாக சோர்வும், சலிப்பும் ஏற்பட்டுவிடும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. 

விற்பனை

 

விற்பனைத்துறையானது எந்த ஒரு தொழில் துறைக்கும் இதயம் போன்றது எனலாம்மேலும் விற்பனைத்துறையின் வளர்ச்சியைப் பொருத்துதான் எந்த ஒரு தொழில் துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை போன்ற அனைத்தும் அமைகிறது.

மக்களின் அன்றாட தேவையை கருத்தில்கொண்டு, நுகர்வு பொருட்கள் மீதான எதிர்பார்ப்பை திருப்திப்படுத்த, அதிவேகமாக நகரும் நுகர்வோர்  நிறுவனங்கள், பொருட்களை சந்தைப்படுத்திவருகிறது. இந்நிறுவனங்கள் குளிர்பானம், பதப்படுத்தும் உணவு பொருட்கள், பால் பொருட்கள், மருந்துகள், மிட்டாய்கள், மாமிச உணவு பொருட்கள், காய்கறி, பழங்கள் மற்றும் பிற  நுகர்வு பொருட்கள் போன்றவை விற்பனை செய்கிறது. இவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலம் வரை தேவைப்படக்கூடியதும், பின் குறிப்பிட்ட காலத்திற்குள் காலாவதியாக கூடியதுமான பொருட்கள் சந்தையில் தினசரி தேவையாக இருந்து வருவதால், இதற்கான போட்டிகளும் அதிகரித்தே வருகிறது.   

விற்பனைத்துறையானது எந்த ஒரு தொழில் துறைக்கும் இதயம் போன்றது எனலாம்.