நாம் இருக்கும் இடங்களைப் பொறுத்தே நமக்கான வேலை வாய்ப்புக்கான அழைப்புகள் வருகின்றன. நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதும் நாம் வசிக்கும் இடங்களே. அதனைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலே, நம்முடைய கல்வி மற்றும் வேலைகளில் எந்தவொரு தடையும் இன்றி முன்னேற முடியும்.

இந்திய வம்சா வழியில் வந்த வெளி நாடு வாழ் இந்தியர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். இவர்களின் பங்களிப்பு இந்திய பொருளாதார வளர்ச்சியில் எப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. உயர் கல்விக்காக, வேலைக்காக, புதிய கலாச்சாரத்தை அறிவதற்காக, வாணிபத்திற்காக போன்ற பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்த இந்தியர்கள், வெளி நாடுகளில் வசித்து வருகிறார்கள். ஆனால், வெளி நாட்டிற்கு சென்ற 70 சதவீதத்தினர், தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாயகத்தில் தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி பல ஆண்டு காலமாக இருந்து வந்தாலும் தற்பொழுது அதைப் பற்றி தீவிரமாக பேச பல காரணங்கள் உண்டு. அதிலும், வேலை வாய்ப்பை அதிகமாக உருவாக்கி கொடுக்கும் முக்கிய மாநிலமான தமிழ்நாட்டில் வேலையின்மை நெருக்கடி அதிகமாக கவனிக்கப்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தியா வளர்ந்து வரும் நாடு என்ற பட்டியலில் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வடகிழக்கு இந்தியா (அதிகாரப்பூர்வமாக வட கிழக்கு பிராந்தியம், NER) இந்தியாவின் ஒரு புவியியல் மற்றும் அரசியல் நிர்வாகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் கிழக்குப் பகுதி ஆகும். இதன் மொத்த பரப்பளவு 262,230 சதுர கிலோமீட்டர் (101,250 சதுர மைல்) ஆகும். இது இந்தியாவின் பரப்பளவில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் ஆகும்.