பொதுவாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலங்களில் காலை செல்லத்தொடங்கும் போதே மாலை எப்போது வீடு திரும்புவோம் என்றும் மாலை நேரப் பள்ளியின் மணியோசைக்குமே ஆவலுடன் காத்திருப்பர், அதிலும் வெள்ளிக்கிழமைக்காக வாரம் முழுதும் தவம் கிடப்பர், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆகிவிட்டால் பொழுதும் குமுறிக் கொண்டே வழக்கம்போல் அந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை பள்ளிக்குச் செல்வர். இதே காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் உணர்வோ ராமாயணத்தில் ராமன் வனவாசம் போனது போன்ற உணர்வினுடன் ஒத்ததாக இருக்கும்.