அரசியல், சினிமா, வேடிக்கை, விளையாட்டு, ஆன்மிகம், வணிகம் போன்ற பிரிவுகள் அடங்கிய வலைத்தளங்கள் காணப்பட்டாலும், வாழ்க்கை குறித்தான வேலை வாய்ப்பு பற்றிய சுய கற்றல் அளிக்கும் தளங்கள்தான் இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

வாழ்க்கையில் ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கும் சரியான முடிவு தான் அவனுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. அதிலும், உயர்க்கல்வியை தொடர விரும்பும் போது எடுக்கும் தீர்மானங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும் குமாரப்பருவம் குழப்பம் நிறைந்த பருவமாக இருப்பதால், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.