உங்கள் தோற்றமே உங்களுடைய அடையாளமாக இருப்பது எப்படியோ, அதேபோல நிறுவனத்தின் அடையாளமாக, மக்கள் மனதில் வெகுவாக பதிந்திட விற்பனையாளர்களின் தோற்றம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு சீர்படுத்தும் செயல்முறை இத்துறையில் உள்ளவர்களுக்கு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையாளர்

 

விற்பனை துறையில் பணியாற்ற வரும் நபர்களுக்கு இலக்கு என்பது அதிக சவால் நிறைந்ததாக இருக்கும். நாம் செய்யும் வேலைகளில் இலக்கு ஒன்றை நிர்ணயிக்காமல் பணிபுரிந்தால் வேலையில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. அதே நேரத்தில், தனி திறமையும் வளர்ந்திடாது. இலக்கு இல்லாத எந்த வேலையாக இருந்தாலும் அதில் சுலபமாக சோர்வும், சலிப்பும் ஏற்பட்டுவிடும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. 

விற்பனை

 

விற்பனைத்துறையானது எந்த ஒரு தொழில் துறைக்கும் இதயம் போன்றது எனலாம்மேலும் விற்பனைத்துறையின் வளர்ச்சியைப் பொருத்துதான் எந்த ஒரு தொழில் துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை போன்ற அனைத்தும் அமைகிறது.