இந்தியாவில் ஆன்லைனில் இயங்கும் பல பகுதி நேர உள்ளடக்க எழுத்து தளங்கள் உள்ளன.

               உண்மையில், இந்த நவீன உலகத்தில் ஒருவரின் சம்பாதிப்பு ஒரு
குடும்பத்திற்கு போதுமானதாக இருப்பதில்லை. ஆனாலும் வீட்டில் ஒருவர்
குழந்தைகளையோ அல்லது வயதானவரையோ பார்த்துக்கொள்ள வீட்டிலே
இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கணிக்க முடியாத வகையில்
வேலைகளை வீட்டில் கொண்டிருப்பதால், உங்களால் வேலை செய்ய
முடியாது என்று அர்த்தமில்லை.

           “மனமிருந்தால் மார்க்கமுண்டு”

 

    

ஒரு மாணவனாக இருந்து கொண்டே நான் பகுதி நேர வேலை பார்கக வேண்டுமா? என்ற எண்ணம் பெரும்பான்மையான மாணவர்கள் மனதில் இருக்கும். கண்டிப்பாக மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் பகுதி நேர வேலை பார்க்கலாம் அதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியாவில் மட்டும் தான் மாணவர்கள் அனைத்திற்கும் தங்களுடைய பெற்றோரையே சார்ந்து இருக்கின்றனர். மற்ற நாடுகளில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தங்களுடைய தேவைகளுக்குத் தாங்களே உழைத்துக் கொள்கின்றனர்.